Shuru
Apke Nagar Ki App…
புதிய தொகுதி திருத்த மசோதா நகலை எரித்த உதயநிதி ஸ்டாலின். மதுரை வண்டியூர் பகுதியில் இன்று (ஏப்.16) காலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் தொகுதி வரையறை திருத்த மசோதாவை எரிக்கும் போராட்டம் நடத்தினார். உடன் மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர் மூர்த்தி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
சு.இரத்தினவேல்
புதிய தொகுதி திருத்த மசோதா நகலை எரித்த உதயநிதி ஸ்டாலின். மதுரை வண்டியூர் பகுதியில் இன்று (ஏப்.16) காலை தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மத்திய அரசின் தொகுதி வரையறை திருத்த மசோதாவை எரிக்கும் போராட்டம் நடத்தினார். உடன் மாவட்ட செயலாளர் தளபதி, அமைச்சர் மூர்த்தி, பூமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறு வரையறை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து வந்த ஓ.பன்னீர்செல்வம் சட்ட மசோதாவின் நகலை தேனி மாவட்டம் பெரியகுளம் அக்ரஹரத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் தீயிட்டு எரித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டார்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை தெற்கு ஒன்றிய வளநாடு , தேனூர், முருகப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (16-04-26) என்டிஏ கூட்டணியின் சார்பில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் பி.எல்.விஜயகுமாரின் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதில் இப்பகுதியை அதிமுக ,பாஜக, அமமுக உள்ளிட்ட என்டிஏ கூட்டணி கட்சியை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்று வருகின்றனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே திருமயம் அருகே உள்ள குறிச்சிபட்டி பகுதியில் தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.1
- வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அதிமுக வேட்பாளர் டாக்டர் வி.பி.பி. பரமசிவத்திற்கு ஆதரவாக எரியோடு பேரூராட்சி மணியக்காரன்பட்டி கிராமத்தில் இன்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.1
- Sri Kanna Public School Chinthamani - Puliyangudi Tenkasi1
- Post by தமிழ்நாடுஅரசியல்1
- மதுரை திருப்பரங்குன்றம் கிராமத்தினர் சார்பில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஏப்.14)பாரம்பரியமாக நடந்து வரும் மலைக்கு பின்புறமுள்ள கோயில் நிலத்தில் நான்கு ஏர் பூட்டி உழும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிராமத்தினர் மற்றும் விவசாயிகள் நேற்று காலை குழந்தைகளுடன் புத்தாடைகள் அணிந்து, புதிய தார் குச்சி நுனியில் ஆணி அடித்து அதில் பூ சுற்றி, கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து மலையைச் சுற்றி வந்து 4 ஏர்களில் காளைகள் பூட்டி தென்பரங்குன்றத்தில் கோயில் நிலங்களை உழுதனர்.1
- தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்த அனைத்து விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் தேனி அருகே கொடுவிலார்பட்டியில் நடைபெற்றது தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருக சாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய விவசாயிகள் சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிப்பு செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளோம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளுக்காக கொடுத்த 83 வாக்குறுதிகளில் 73 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை 1.10 லட்சம் ஏக்கர் விவசாயிகளின் நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துள்ளது திமுக அரசு, உரிமைக்காக போராடிய விவசாயிகள் மீது குண்டர் சட்டம் போட்ட ஒரே அரசு திமுக அரசு மட்டும் தான், மணல் திருட்டை தட்டி கேட்கின்ற விவசாயிகள் மீதும் கறிக்கோழி விலை உயர்வு கேட்ட விவசாயிகள் மீதும் பொய் வழக்கு போடப்பட்டு நான் உட்பட விவசாயிகள் சிறையில் அடைக்கப்பட்டோம் வேறு எந்த கட்சிகளுக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் ஆனால் திமுகவிற்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம் என விவசாயிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள முதல்வருடன் நடப்பு உறவில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் ஏன் பேபி அணையை பல நடவடிக்கை எடுக்கவில்லை முல்லை பெரியாறு அணையை 152 அடி உயர்த்த நடவடிக்கை எடுக்கவில்லை? எனவே விவசாயிகள் பொதுமக்கள் திமுகவிற்கு வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ. பெரியபட்டி ஊராட்சியில் மணப்பாறை சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளர் ரா.கதிரவனுக்கு ஆதரவாக மாதிரி வாக்கு இயந்திரம் மூலம் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது. இந்த பிரச்சாரமானது இப்பகுதியை சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.1