மணப்பாறை அருகே வளர்ப்பதற்காக ஜல்லிக்கட்டு மாடு வாங்கி வந்த கணவரை மனைவி திட்டியதற்கு கணவர் தூக்கிட்டு தற்கொலை திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த தீராம்பட்டியை சேர்ந்த பெரியசாமி. இவரது மகன் அன்புராஜ் (27) கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கில்டா பியாலின் 25/26 என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இறந்த அன்புராஜ் விராமலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இறந்து போன அன்புராஜ் 02.04.26 ஆம் தேதி இரவு சுமார் 23.00 மணி அளவில் தான் வளர்ப்பதற்காக ஜல்லிக்கட்டு மாடு ஒன்றை வாங்கி வந்துள்ளார். மேற்படி ஜல்லிக்கட்டு மாடு வாங்கி வந்தது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டதில் கில்டா பியாலின் சண்டையிட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் 03.04.2026 ஆம் தேதி இறந்த அன்புராஜ் விராலிமலைக்கு வேலைக்கு சென்று விட்டு மதியம் 01.30 மணிக்கு வீட்டிற்கு வந்தவர் தனது அறைக்குள் சென்றுள்ளார். நீண்ட நேரமாக வீட்டின் அறையில் இருந்து வெளியே வராத காரணத்தால் அன்புராஜின் தந்தை பெரியசாமி கதவை திறந்து பார்த்தபொழுது தூக்கிட்ட நிலையிலிருந்துள்ளார். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் பெரியசாமி தனது மகன் அன்புராஜை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் பணியில் இருந்த மருத்துவர் பரிசோதனை செய்த பிறகு அன்புராஜ் உயிரிழந்துவிட்டதாக கூறியதையடுத்து மேற்படி இறந்தவரை உடலை கைப்பற்றி மணப்பாறை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

- திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் ஆயுங்களுடன் சிலர் Reels எடுத்து அதனை Instagram -ல் கடந்த இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கல்லக்குடி காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமான விடியோவை பதிவிட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற Reels பதிவிடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100யை தொடர்பு கொள்ளலாம்1
- கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய எம் பி கனிமொழி கலைஞர் அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்த குளித்தலை பகுதி பொதுமக்கள் இப்போது நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி பொதுமக்களுடைய பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்வில் குளித்தலை தொகுதிக்குட்பட்ட திமுக விசிக தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்1
- Post by பெரியசாமி1
- மணல் கொள்ளையர்களின் மனிதாபிமானம் திண்டுக்கல்லை அடுத்துள்ள மா.மூ.கோவிலூர் அருகே உள்ள அரசு சொந்தமான குளத்தில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளையர்கள் 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை எடுத்துள்ளனர். சுரங்க பாதை அமைப்பது போன்று மண் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தை விட்டு விட்டு அதை சுற்றி மண்ணை எடுத்துள்ளது இவர்களின் மனிதாபிமான செயலால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.1
- திண்டுக்கல் கிழக்கு வட்டம், சிறுமலை புதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலை ஆண்டவர் திருக்கோவிலை தனிநபர் ஆக்கிரமித்து உள்ளார். கோவிலை அவர்களிடமிருந்து மீட்டு தரகோரி ஊர்பொதுமக்கள் அனைவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை வைத்தும், போராடியும், ஆளும் அரசும், ஆண்ட அரசாங்கமும் எங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காததால் வருகின்ற 23-ம் தேதி அன்று நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முழுமையாக புறக்கணிக்கின்றோம். இப்படிக்கு ஊர்பொதுமக்கள், சிறுமலை புதூர் நத்தம் சட்டமன்ற தொகுதி1

- மதுரை வில்லாபுரம் கற்பக நகர் மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மதுர விநாயகர் திருக்கோவிலில் இன்று (ஏப்.5) காலை 12 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் நடைபெற்றது. இத் திருக்கோவிலில் கணபதி யாகத்துடன் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் , பூஜைகள் நடைபெற்றன. திருக்கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் மதுரா பில்டர்ஸ் உரிமையாளர் தர்மராஜ் தலைமையில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.1
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் தவெக வேட்பாளர் R.கதிரவன் இன்று காலை தேர்தல் அதிகாரி ஜெயசித்ரா கலாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மணப்பாறை சட்டமன்ற தொகுதியின் அனைத்து பூத் பொறுப்பாளரான கிளைச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மணப்பாறையின் பல பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.1