logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், தங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாங்காய்களை குப்பையில் கொட்டி அழித்துள்ளனர். இதனால், மாங்காய்கள் அனைத்தும் வீணாகி குப்பையில் குவிந்தன. இல்லாதவர்களுக்கு ஒரு ரூபாய் விலைக்குக் கூட கொடுத்து வைத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.

2 hrs ago
user_RAJA news
RAJA news
Oddanchatram, Dindigul•
2 hrs ago

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், தங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாங்காய்களை குப்பையில் கொட்டி அழித்துள்ளனர். இதனால், மாங்காய்கள் அனைத்தும் வீணாகி குப்பையில் குவிந்தன. இல்லாதவர்களுக்கு ஒரு ரூபாய் விலைக்குக் கூட கொடுத்து வைத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.

More news from Dindigul and nearby areas
  • திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், தங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாங்காய்களை குப்பையில் கொட்டி அழித்துள்ளனர். இதனால், மாங்காய்கள் அனைத்தும் வீணாகி குப்பையில் குவிந்தன. இல்லாதவர்களுக்கு ஒரு ரூபாய் விலைக்குக் கூட கொடுத்து வைத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
    1
    திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், தங்களுக்கு போதிய விலை கிடைக்காததால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாங்காய்களை குப்பையில் கொட்டி அழித்துள்ளனர். இதனால், மாங்காய்கள் அனைத்தும் வீணாகி குப்பையில் குவிந்தன. இல்லாதவர்களுக்கு ஒரு ரூபாய் விலைக்குக் கூட கொடுத்து வைத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் எழுந்துள்ளன.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    2 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட கதிர் நாயக்கன்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி சித்தரேவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தையன் கோட்டை, அய்யம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து அவர்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சித்தரேவு ஊராட்சிக்குட்பட்ட கதிர் நாயக்கன்பட்டி பிரிவு அருகே செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி சித்தரேவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சித்தையன் கோட்டை, அய்யம்பாளையம் செல்லும் சாலையில் அமர்ந்து அவர்கள் இந்த சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    user_RAJA
    RAJA
    பத்திரிகையாளர் ஆத்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சியில் உள்ள கதிர் நாயக்கன்பட்டி செம்பட்டி – வத்தலகுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை எண் 3313-ஐ மூடக் கோரி பொதுமக்கள் திரளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர். சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஜெயபாலன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    1
    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சியில் உள்ள கதிர் நாயக்கன்பட்டி செம்பட்டி – வத்தலகுண்டு செல்லும் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை எண் 3313-ஐ மூடக் கோரி பொதுமக்கள் திரளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் 500-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்துகொண்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டிவீரன்பட்டி காவல்துறையினர், ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் ஜெயபாலன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிகழ்வால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    user_Abbas Abbas
    Abbas Abbas
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    16 hrs ago
  • தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளாவுக்குக் கடத்த முயன்ற 7,220 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தின் போடிமெட்டு, கம்பம் மெட்டு மற்றும் குமுளி ஆகிய தமிழக-கேரள எல்லைப் பகுதிகள் வழியாக, தமிழக ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி கேரளாவிற்குக் கடத்திச் செல்லப்பட்டு, அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவில் உத்தமபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைத் தவிர, மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பறக்கும் படை துணை வட்டாட்சியர் தலைமையிலான ஒரு குழுவும், உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் குழுவும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கம்பம் ஊத்துக்காடு பகுதியில் உத்தமபாளையம் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், கேரளாவிற்குக் கடத்துவதற்காக சுமார் 7,220 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர். ஃபுட் செல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் புதுப்பட்டியைச் சேர்ந்த சுந்தர், பிரகாஷ் மற்றும் லாரி ஓட்டுநர் பாண்டீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் ஃபுட் செல் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    தேனி மாவட்டம் கம்பம் வழியாக கேரளாவுக்குக் கடத்த முயன்ற 7,220 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டத்தின் போடிமெட்டு, கம்பம் மெட்டு மற்றும் குமுளி ஆகிய தமிழக-கேரள எல்லைப் பகுதிகள் வழியாக, தமிழக ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி கேரளாவிற்குக் கடத்திச் செல்லப்பட்டு, அங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட அளவில் உத்தமபாளையத்தைத் தலைமையிடமாகக் கொண்டு உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைத் தவிர, மாவட்ட வருவாய்த்துறை சார்பில் பறக்கும் படை துணை வட்டாட்சியர் தலைமையிலான ஒரு குழுவும், உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான வருவாய் அலுவலர்கள் குழுவும் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் கம்பம் ஊத்துக்காடு பகுதியில் உத்தமபாளையம் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மினி லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ததில், கேரளாவிற்குக் கடத்துவதற்காக சுமார் 7,220 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மினி லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவற்றை உத்தமபாளையம் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

ஃபுட் செல் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் புதுப்பட்டியைச் சேர்ந்த சுந்தர், பிரகாஷ் மற்றும் லாரி ஓட்டுநர் பாண்டீஸ்வரன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி உத்தமபாளையம் நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் ஃபுட் செல் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையப் பிரிவு வரையிலான சாலை, பாரதியார் பள்ளிக்குச் செல்லும் சாலை, மற்றும் ரெங்ககிருஷ்ணா பள்ளிக்குச் செல்லும் சாலைகள் நீண்ட நாட்களாக மோசமான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் புதிய தார் சாலை அமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பேரில் நகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க ஒப்பந்தம் செய்தது. தற்போது இந்தச் சாலைகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இரவு நேரத்தைப் பயன்படுத்தி அவசர அவசரமாக, தரமற்ற முறையில் இந்தச் சாலைகள் அமைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இந்தச் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டால் மீண்டும் குண்டும் குழியுமாக மாறும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அமைக்கப்படும் புதிய சாலையை ஆய்வு செய்து, தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையப் பிரிவு வரையிலான சாலை, பாரதியார் பள்ளிக்குச் செல்லும் சாலை, மற்றும் ரெங்ககிருஷ்ணா பள்ளிக்குச் செல்லும் சாலைகள் நீண்ட நாட்களாக மோசமான நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் புதிய தார் சாலை அமைக்கக் கோரி நகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பேரில் நகராட்சி நிர்வாகம் சாலை அமைக்க ஒப்பந்தம் செய்தது.

தற்போது இந்தச் சாலைகளில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், இரவு நேரத்தைப் பயன்படுத்தி அவசர அவசரமாக, தரமற்ற முறையில் இந்தச் சாலைகள் அமைக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிக வாகனப் போக்குவரத்து உள்ள இந்தச் சாலை, தரமற்ற முறையில் அமைக்கப்பட்டால் மீண்டும் குண்டும் குழியுமாக மாறும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அமைக்கப்படும் புதிய சாலையை ஆய்வு செய்து, தரமான முறையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வரும் 68 வயதான ஜெயலெட்சுமி, தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். மாலை நேரத்தில் மூத்த மகள் கார்த்தியாவைப் பார்ப்பதற்காக விராலிமலை சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு, இளைய மகளுடன் வீடு திரும்பி உள்ளார். விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் எடையுள்ள கல் முகப்பு சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொருவருடன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், எஸ்ஐ கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தப்பி ஓடியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவில் வசித்து வரும் 68 வயதான ஜெயலெட்சுமி, தனது இளைய மகள் புவனேஸ்வரியுடன் வசித்து வருகிறார். மாலை நேரத்தில் மூத்த மகள் கார்த்தியாவைப் பார்ப்பதற்காக விராலிமலை சாலையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுவிட்டு, இளைய மகளுடன் வீடு திரும்பி உள்ளார்.

விராலிமலை சாலையிலிருந்து வாகைக்குளம் விஸ்தரிப்பு தெருவுக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் எடையுள்ள கல் முகப்பு சங்கிலியைப் பறித்துக்கொண்டு, அருகில் இருசக்கர வாகனத்தில் காத்திருந்த மற்றொருவருடன் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், எஸ்ஐ கதிரவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளைச் சேகரித்து, தப்பி ஓடியவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மணப்பாறை போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    user_Lakshmanan
    Lakshmanan
    Local News Reporter மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    47 min ago
  • திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று திருப்பராய்த்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    1
    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை ஊராட்சியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பொதுமக்கள் இன்று திருப்பராய்த்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரும், அதிகாரிகளும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    user_Usha arun News
    Usha arun News
    Teacher மணப்பாறை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    1 hr ago
  • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் இருந்து ₹2 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    1
    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயியிடம் இருந்து ₹2 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு அலுவலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.