ஆற்று மணல் திருட்டு: இருவர் கைது, தலை மறைவான மேலும் இதுவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மல்லனூர் ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சதீஷ்குமார் (34) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவரின் மகன் பிரவீன் (22) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்துவின் மகன் உடையார் மற்றும் உடையாரின் மகன் தென்னரசு ஆகிய இருவர் தப்பி ஓடி தலைமறைவாகினர். அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தப்பி ஓடியவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மணல் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் தற்போது வரை மணல் திருட்டு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் டிராக்டர் ஒன்றும் மற்றொரு சரக்கு வாகனம் என இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தொண்டி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்று மணல் திருட்டு: இருவர் கைது, தலை மறைவான மேலும் இதுவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மல்லனூர் ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சதீஷ்குமார் (34) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவரின் மகன் பிரவீன் (22) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்துவின் மகன் உடையார் மற்றும் உடையாரின் மகன் தென்னரசு ஆகிய இருவர் தப்பி ஓடி தலைமறைவாகினர். அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தப்பி ஓடியவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மணல் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் தற்போது வரை மணல் திருட்டு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் டிராக்டர் ஒன்றும் மற்றொரு சரக்கு வாகனம் என இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தொண்டி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆற்று மணல் திருட்டு: இருவர் கைது, தலை மறைவான மேலும் இதுவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா மல்லனூர் ஆற்றுப் பகுதியில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றுப் பகுதியிலிருந்து மணல் ஏற்றிக்கொண்டு வந்த இரண்டு வாகனங்களை நிறுத்திச் சோதனை செய்தனர். அதில் சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மணல் திருட்டில் ஈடுபட்ட மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் சதீஷ்குமார் (34) மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்திரகாசன் என்பவரின் மகன் பிரவீன் (22) ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய மல்லனூர் பகுதியைச் சேர்ந்த மணிமுத்துவின் மகன் உடையார் மற்றும் உடையாரின் மகன் தென்னரசு ஆகிய இருவர் தப்பி ஓடி தலைமறைவாகினர். அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தப்பி ஓடியவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு மணல் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், அதில் தற்போது வரை மணல் திருட்டு வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட்டு வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் டிராக்டர் ஒன்றும் மற்றொரு சரக்கு வாகனம் என இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தொண்டி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.1
- ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானை இரவு முழுவதும் பகலில் மலையும் இரவில் பனிமூட்டமும் காணப்பட்டது3
- நேரம் தவறி இயக்கப்படும் பேருந்தால் மக்கள் அவதி; தேவகோட்டை-மானகிரி வழியாக மதுரை செல்லும் பேருந்து காலியாகச் செல்லும் அவலம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து மானகிரி வழியாக மதுரை செல்லும் அரசுப் பேருந்து, அட்டவணைப்படி சரியான நேரத்திற்கு இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக, பல நாட்கள் பேருந்து பயணிகள் இன்றிக் காலியாகவே இயக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்தப் பேருந்து தினசரி காலை 7.50 மணிக்கு தேவகோட்டையில் இருந்து புறப்பட்டுச் செல்ல வேண்டும். ஆனால், இன்று அந்தப் பேருந்து காலை 9.20 மணிக்குத்தான் புறப்பட்டது. நேர மாற்றம் மற்றும் பேருந்து மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், அதில் பயணிகளே இல்லாமல் காலியாகச் சென்றதை அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்துப் பதிவு செய்துள்ளனர். தேவகோட்டை, மானகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை செல்லும் மாணவர்கள், விவசாயிகள், அரசு அலுவலகத்தினர் மற்றும் மருத்துவச் சிகிச்சைக்குச் செல்பவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் இந்தப் பேருந்தையே நம்பியுள்ளனர். ஆனால், நேரம் தவறி இயக்கப்படுவதால் அவர்களின் அன்றாடப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பேருந்து நேரம் தவறுவதற்குக் காரணம் தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு வழிவிடுவதற்காகவா என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர். அரசுப் போக்குவரத்துக் கழகம் பொதுமக்களுக்கான சேவையை முறையாகச் செய்ய வேண்டுமே தவிர, தனியார் நலனைப் பாதுகாக்கும் வகையில் செயல்படக் கூடாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, இந்தப் பேருந்து தினசரி சரியான நேரத்திற்கு இயக்கப்பட வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து, பேருந்தை முறையான நேரத்தில் இயக்கித் தர வேண்டுமென பொதுமக்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.1
- புதுக்கோட்டை மாவட்டம் கீழாநிலைக்கோட்டை அரியநாயகி அம்மனுக்கு பௌர்ணமி பூஜை புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கீழாநிலைக்கோட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீ அரியநாயகி அம்மனுக்கு இன்று பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.சிறப்பு சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த அரியநாயகி அம்மனை கீழாநிலைக்கோட்டை மற்றும்சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரியில் பேரணி நடைபெற்றது பிங்க் அக்டோபர் 2026 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியை முதல்வர் மணி கொடியாசைக்கு துவக்கி வைத்தார் மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் பிங்க் கலர் பலூன்களை கையில் ஏந்தியவாறுஊர்வலமாக சென்றனர் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது பயிற்சி மாணவர்கள் பிங்க் கலர் பலூன்களை வானத்தில் பறக்க விட்டனர்1
- மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* மதுரை மாவட்டம் திருமங்கலம் உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும்-கடந்த ஆட்சியில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டுள்ளது சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும்-அன்பில் மகேஷ் கைது குறித்து டாக்டர் சரவணன் பேட்டி* *ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சி இது* சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் 225வது ஆண்டு குருபூஜை விழா இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிவகங்கை காளையார் கோவிலிலும், தென் மாவட்டங்களிலும், மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ள மருது பாண்டியர் சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருமங்கலம் செவரக்கோட்டையில் உள்ள மாமன்னர் மருதுதிருவர்களின் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும்போது: வெள்ளையர்களுக்கு எதிராக முதலில் சிப்பாய் கழகம் என வடநாட்டு அரசியலில் பதிவாகி இருக்கும் அதற்கும் நூறாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் முதல் போர் பிரகடனம் செய்யப்பட்டது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் வாழ்த்துக்களுடன் பொதுச் செயலாளர் ஆனந்த், பொறுப்பு அமைச்சர் நிர்மல் குமார் அவர்களின் வாழ்த்துக்களுடன் திருமங்கலத்தில் உள்ள தவெக நிர்வாகிகளுடன் மறுதிருவர் சிலைக்கு மரியாதை செலுத்தியுள்ளோம். கடந்த சட்டமன்ற தேர்தலில் சொற்ப வாக்குகளில் இங்கு வெற்றி வாய்ப்பை இழந்தோம். உப்பு தின்னவன் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும் கடந்த திமுக ஆட்சியில் பிடி அரசு குமார் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 100 கோடி கையூட்டு செய்யப்பட்டுள்ளது என ஆதாரம் இருக்கும் பட்சத்தில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். சட்ட நடைமுறை அதை வெளிச்சத்திற்கு கொண்டு வரும், சட்ட ஒழுங்கு என்பது தனிமனித ஒழுக்கத்தை சார்ந்து தான் நம்ம பார்க்க வேண்டும். ஜனவரி 1 முதல் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று இல்லாவிட்டாலும் இந்த ஐந்து வருடத்திற்குள் அது நிச்சயமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இருக்கும் போதே மாண்புமிகு பாரத பிரதமர் அதை திறந்து வைப்பார். புரட்சித்தலைவர் கட்சி தொடங்கும் போது எப்படி விர் கொண்டு இருந்ததோ அதைவிட ஒரு படி மேல்தான் நம்முடைய முதல்வரின் செயல்பாடு உள்ளது. கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகள் சரி செய்யும் நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆறு மாத காலத்தில் அனைத்து பொறுப்பாளர்களும் நியமிக்கப்படுவார்கள். அடுத்த முப்பது வருடத்திற்கு எந்த மாற்றமும் கிடையாது தமிழக முதல்வர் விஜய் சாரின் ஆட்சி தான் நடக்கும், ஊழலை ஒழிக்கும் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது லஞ்சம் வாங்குவதற்கு அரசு அதிகாரிகள் பயப்படுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யக்கூடிய ஆட்சியாக இன்னும் இருபது முப்பது ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடிக்கும் ஆட்சியாக உள்ளது.1
- காரியாபட்டியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா எழுச்சியுடன் அனுசரிக்கப்பட்டது. அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள முக்குலத்தோர் உறவின்முறை கட்டிட மணிமண்டபத்தில், மாமன்னர் மருதுபாண்டியர்களின் 225-வது ஜெயந்தி விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. விழாவில் முதற்கட்டமாக, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தலைமையில் திமுக நிர்வாகிகள் மருதுபாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அதிமுக ஒன்றியச் செயலாளர் தலைமையிலான நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தின் காரியாபட்டி நகரச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள், பாஜக மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மலரஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளூர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வீர வணக்கத்தைச் செலுத்தினர். ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராகத் துணிச்சலுடன் போரிட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரத்தையும், தியாகத்தையும் இளைய தலைமுறையினர் போற்றும் வகையில் இந்த நிகழ்வு அமைந்தது. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் ஒரே இடத்தில் திரண்டு மரியாதை செலுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதே போன்று காரியாபட்டி பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றிக் கழகம் சார்பாகவும் முக்கு ரோடு பகுதியில் மருது சேனை சார்பாகவும் வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் திரு உருவப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது .1
- திருவாடானை அருகே தெருநாய்கள் கடித்துப் புள்ளிமான் பரிதாப பலி! ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள கல்லூர் கிராமத்து வயல்வெளியில் பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடப்பதாக விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், மானின் உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், உணவு மற்றும் நீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறிய அந்தப் புள்ளிமானைத் தெருநாய்கள் கூட்டமாகத் துரத்திக் கடித்துக் கொன்றிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த புள்ளிமானின் உடல், கால்நடை மருத்துவர்கள் மூலம் உடற்கூறாய்வு (Post-mortem) செய்யப்பட்ட பிறகு, உரிய முறையில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது1