சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம் 1.தக்காளி(தரம்-I) - ரூ.18 (தரம்-II)-ரூ.15 2.உருளைக் கிழங்கு-(ஊட்டி)-ரூ. இண்டூர்- ஆக்ரா -ரூ.30 3.சின்னவெங்காயம் l - ரூ.50-45 சின்னவெங்காயம் ll - ரூ.40 4. பெரிய வெங்காயம் l- ரூ.42-38 பெரிய வெங்காயம் ll- ரூ.35 5. பச்சை மிளகாய் ரூ.45 புல்லட்-ரூ.48 6. கத்தரி நாட்டு-ரூ.55 கத்தரி ப்ளு வரி காய் -ரூ.50 கத்திரி (பச்சை)-ரூ.45 7. வெண்டைக்காய் - ரூ.40-35 8.முருங்கைகாய்- ரூ.40 9.பீர்க்கங்காய் -ரூ.40-35 10.சுரக்காய் (வால்) - ரூ.22 நாட்டு சுரக்காய் (குண்டு, பந்தல்)-ரூ.25 11. வெள்ளை புடல் - ரூ.25 பச்சை புடல் -ரூ. 12.பாகற்காய்-ரூ.-50 13. தேங்காய் - ரூ.60-55 14. முள்ளங்கி -ரூ.30-25 15.வெள்ளை பீன்ஸ் - ரூ.80 பச்சை பீன்ஸ் -ரூ. 16. அவரை கொம்பு-ரூ பட்டை -ரூ. ஊசி-ரூ.70 பச்சை-ரூ.70 பட்டை-ரூ. 17.கேரட் (ஊட்டி)- ரூ.108 கருமந்துறை கேரட்- 18.வெற்றிலை- 19.மாங்காய்-ரூ.40-30 20.பூவன் வாழை- ரூ.40 தேன் வாழை - ரூ.45 ரஸ்தாளி - ரூ.60 செவ்வாழை - ரூ.70 21.கீரைகள் - ரூ.25 22.பப்பாளி - ரூ.30-25 23.மாம்பழம் ரூ.50-40 24.சப்போட்டா -ரூ.40 25. டிராகன் பழம் ரூ.
சேலம் மாவட்டம் ஆத்தூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம் 1.தக்காளி(தரம்-I) - ரூ.18 (தரம்-II)-ரூ.15 2.உருளைக் கிழங்கு-(ஊட்டி)-ரூ. இண்டூர்- ஆக்ரா -ரூ.30 3.சின்னவெங்காயம் l - ரூ.50-45 சின்னவெங்காயம் ll - ரூ.40 4. பெரிய வெங்காயம் l- ரூ.42-38 பெரிய வெங்காயம் ll- ரூ.35 5. பச்சை மிளகாய் ரூ.45 புல்லட்-ரூ.48 6. கத்தரி நாட்டு-ரூ.55 கத்தரி ப்ளு வரி காய் -ரூ.50 கத்திரி (பச்சை)-ரூ.45 7. வெண்டைக்காய் - ரூ.40-35 8.முருங்கைகாய்- ரூ.40 9.பீர்க்கங்காய் -ரூ.40-35 10.சுரக்காய் (வால்) - ரூ.22 நாட்டு சுரக்காய் (குண்டு, பந்தல்)-ரூ.25 11. வெள்ளை புடல் - ரூ.25 பச்சை புடல் -ரூ. 12.பாகற்காய்-ரூ.-50 13. தேங்காய் - ரூ.60-55 14. முள்ளங்கி -ரூ.30-25 15.வெள்ளை பீன்ஸ் - ரூ.80 பச்சை பீன்ஸ் -ரூ. 16. அவரை கொம்பு-ரூ பட்டை -ரூ. ஊசி-ரூ.70 பச்சை-ரூ.70 பட்டை-ரூ. 17.கேரட் (ஊட்டி)- ரூ.108 கருமந்துறை கேரட்- 18.வெற்றிலை- 19.மாங்காய்-ரூ.40-30 20.பூவன் வாழை- ரூ.40 தேன் வாழை - ரூ.45 ரஸ்தாளி - ரூ.60 செவ்வாழை - ரூ.70 21.கீரைகள் - ரூ.25 22.பப்பாளி - ரூ.30-25 23.மாம்பழம் ரூ.50-40 24.சப்போட்டா -ரூ.40 25. டிராகன் பழம் ரூ.
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- தேவரடியார் குப்பம் சுற்றுஉட்டகப் பகுதிகளில் லேசான சாரல் மழை. ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, தேவரடியார் குப்பம், ஊராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான முருக்கம்பாடி, மேலந்தல், காங்கியனூர், தேவனூர், ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். விவசாயிகள் மேலும் மழை எதிர்பார்க்கின்றனர்1
- மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.1
- மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர். கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.1
- பாலக்கோட்டில் அனைத்து துறை ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் பொருளாளர் சுப்ரமணி, துணைத் தலைவர் முருகன் மற்றும் மூத்த நிர்வாகிகள் ராமசாமி, காவேரியப்பன், ரகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், அரசாணை எண் 123-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும், ஓய்வூதியர்களிடம் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் ரூ.644 தொகையை ரத்து செய்ய வேண்டும், 10 சதவீத ஓய்வூதிய உயர்வை வழங்க வேண்டும், ஓய்வூதியர்களின் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்க வேண்டும், முதியோர் ஓய்வூதியர்களை தங்களது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலைக்கு தள்ளக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஓய்வூதியர் நலக் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், ஓய்வூதியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் முருகேசன், அன்பழகன், சாந்தா, சின்னபாப்பா, ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டதுடன், ஏராளமான ஓய்வூதியர்களும் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்1
- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.1
- குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த எல்லைப்பிடாரியம்மன்! சேலம் அருள்மிகு ஸ்ரீ எல்லை பிடாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிகப்பு நிறப்பட்டாடை அணிவித்து வண்ணமலர் மாலைகளுடன், குங்குமக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.1
- சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு பகுதியில் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது இதனை அடுத்து அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதனால் போராட்டம் கைவிடப்பட்டது.1