logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கோபிசெட்டிபாளையம் நகர திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் எதிரில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா அவைத்தலைவர் சுரேஷ் தலைமையில், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி அய்யாசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் விஜய் கருப்புசாமி, வெங்கடேசன், ஸ்ரீதர், சரவணன்,முருகானந்தம், கனகு, பாலகுமார், முத்துவீரன், பழனிச்சாமி, மீரான், காளீஸ்வரன், தனசேகரன், பார்த்திபன், மோகன் ராஜ், விஷ்ணு செந்தூர், இளைஞர் அணி கார்த்திகேயன், தேவேந்திரன், சபரீஸ்வர குமார், சுகுணா, தென்றல் ரமேஷ் உட்பட மாவட்ட,நகர, வார்டு பொறுப்பாளர்கள், சார்புஅணி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

7 hrs ago
user_Vengadesh
Vengadesh
கோபிசெட்டிபாளையம், ஈரோடு, தமிழ்நாடு•
7 hrs ago
bb484452-b317-459c-8321-cf284df8b019

கோபிசெட்டிபாளையம் நகர திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா ஈரோடு வடக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகர திமுக சார்பில் பேருந்து நிலையம் எதிரில் மறைந்த முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118 வது பிறந்தநாள் விழா

a9bc2468-7775-4d71-869c-ed9b606fde55

அவைத்தலைவர் சுரேஷ் தலைமையில், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கள்ளிப்பட்டி மணி அறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி அய்யாசாமி, நகர இளைஞர் அணி செயலாளர் விஜய் கருப்புசாமி, வெங்கடேசன், ஸ்ரீதர், சரவணன்,முருகானந்தம், கனகு,

df0568db-a32b-4683-8dc3-59a06f597bec

பாலகுமார், முத்துவீரன், பழனிச்சாமி, மீரான், காளீஸ்வரன், தனசேகரன், பார்த்திபன், மோகன் ராஜ், விஷ்ணு செந்தூர், இளைஞர் அணி கார்த்திகேயன், தேவேந்திரன், சபரீஸ்வர குமார், சுகுணா, தென்றல் ரமேஷ் உட்பட மாவட்ட,நகர, வார்டு பொறுப்பாளர்கள், சார்புஅணி பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • மொஞ்சனூர் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினர் வாக்குவாதம் – 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் தரப்பினர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனிடையே, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் தலைமையிலான மற்றொரு தரப்பினர், முறையான அனுமதி பெறாமல் தாங்கள்தான் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்போம் என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா, கோமதி ஆகியோர் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து வினோத் தரப்பினர் அருகிலுள்ள பட்டா நிலத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். மோகன் தரப்பினர் முறையான அனுமதி இல்லாததால் விநாயகர் சிலை வைக்கவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மொஞ்சனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
    1
    மொஞ்சனூர் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பதில் இருதரப்பினர் வாக்குவாதம் – 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த மொஞ்சனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில், அப்பகுதியைச் சேர்ந்த வினோத் தரப்பினர் எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் முறையாக அனுமதி பெற்று மாரியம்மன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். இதனிடையே, மல்லசமுத்திரம் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் மோகன் தலைமையிலான மற்றொரு தரப்பினர், முறையான அனுமதி பெறாமல் தாங்கள்தான் மாரியம்மன் கோவிலில் விநாயகர் சிலை வைப்போம் என தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஏடிஎஸ்பி அண்ணாதுரை, திருச்செங்கோடு ஏஎஸ்பி அஸ்வினி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கோபாலகிருஷ்ணன், சுதா, கோமதி ஆகியோர் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர்.
மாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து கோவில் வளாகத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வினோத் தரப்பினர் அருகிலுள்ள பட்டா நிலத்தில் விநாயகர் சிலையை வைத்தனர். மோகன் தரப்பினர் முறையான அனுமதி இல்லாததால் விநாயகர் சிலை வைக்கவில்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் மொஞ்சனூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    4 hrs ago
  • ராசிபுரத்தில் திடீரென பெய்த கனமழையால் பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீர் 14.09.2026-RSP-HEAVY RAIN LEAVES RASIPURAM BUS STANDS FLOODED NEWS இராசிபுரம் இடி மின்னுடன் திடீரென பெய்த கனமழையால் ராசிபுரம் பேருந்து நிலையங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் இருச்சக்கர வாகன ஒட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் கடும் அவதி ..... ராசிபுரத்தில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. கனமழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றது. இதனால் பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால், சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி, மழைநீர் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    ராசிபுரத்தில் திடீரென பெய்த கனமழையால் பேருந்து நிலையத்தில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீர்
14.09.2026-RSP-HEAVY RAIN LEAVES RASIPURAM BUS STANDS FLOODED NEWS
இராசிபுரம்
இடி மின்னுடன் திடீரென பெய்த கனமழையால் ராசிபுரம் பேருந்து நிலையங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றதால் இருச்சக்கர வாகன ஒட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் கடும் அவதி .....
ராசிபுரத்தில் கடந்த 10 நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை வளாகங்களில் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இந்த நிலையில், இரவு திடீரென இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
கனமழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் மழைநீர் வெளியேற வழியின்றி சாக்கடை நீருடன் கலந்து குளம்போல் தேங்கி நின்றது.
இதனால் பேருந்து நிலையப் பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
மேலும், ராசிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்திலும் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றதால், சிகிச்சைக்காக வந்த புறநோயாளிகள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள் தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் கழிவுநீர் கால்வாய்களை முறையாக தூர்வாரி, மழைநீர் வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • 118 வது அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை கரூர்: அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    1
    118 வது அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா திருவுருவப் படத்திற்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
கரூர்:
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேலும், அறிஞர் அண்ணாவின் கொள்கைகள் மற்றும் சமூகநீதிக்கான அவரது பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, அவரது வழியில் தொடர்ந்து பணியாற்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    user_Karur Wood's Tv
    Karur Wood's Tv
    Photographer கரூர், கரூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • மாற்றுக் கட்சியில் இணையும் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் விரைவில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அரசியல் பணி செய்ய உள்ளதாகவும், தன்னோடு இது நாள் வரை தோளோடு தோள் கொடுத்து பயணித்த அனைவருக்கும் பதவியை பெற்று தருவேன், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், தேர்தலுக்கு இன்னும் பல காலங்கள் உள்ளதால் பொறுமையுடன் தனது அறிவிப்பை அனைவரும் இயக்கத்தக்க வகையில் வெளியிடுவேன் என முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
    1
    மாற்றுக் கட்சியில் இணையும் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள்! சேலத்தில் பரபரப்பு...
சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் விரைவில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அரசியல் பணி செய்ய உள்ளதாகவும், தன்னோடு இது நாள் வரை தோளோடு தோள் கொடுத்து பயணித்த அனைவருக்கும் பதவியை பெற்று தருவேன், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், தேர்தலுக்கு இன்னும் பல காலங்கள் உள்ளதால் பொறுமையுடன் தனது அறிவிப்பை அனைவரும் இயக்கத்தக்க வகையில் வெளியிடுவேன் என முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    10 hrs ago
  • தேர்தல் பணிமனை திறப்புவிழா விழாக்கோலம் பூண்ட தாராபுரம் தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை திடீர் கனமழையிலும் உரையாற்றிய கே.என்.நேரு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்தது. இதனால் விழா மேடையில் இருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மழையில் நனைந்தனர். இருப்பினும், மழையைப் பொருட்படுத்தாமல் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடையே உரையாற்றினார். மழையில் இருந்து தப்பிக்க தொண்டர்கள் நாற்காலிகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தலைவர்களின் பேச்சைக் கேட்டனர். சிலர் மழையில் நனைந்தபடியே நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றனர். மழை பெய்தபோதும் கூட்டம் கலைந்து செல்லாமல் இருந்தது விழாவில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது. தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தாராபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக மழையின்றி வறட்சி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவின் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் திடீரென கனமழை பெய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை அறிவித்தவுடன் திமுகவிற்கு வெற்றி மழை பெய்துவிட்டது எனக் குறிப்பிட்டார். மேலும், தாராபுரம் பகுதியில் மின்சாரக் கட்டணக் கணக்கீட்டுப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாகவும், 200 யூனிட் மின்சாரம் தொடர்பான கணக்கீட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் மின்நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மின்கட்டணமாக ரூ.2,000 செலுத்தி வந்தவர்களுக்கு ரூ.10,000 வரை கட்டணம் விதிக்கப்படுவதாகவும், அதிக மின்கட்டணம் செலுத்திய பின்னரும் தாராபுரத்தில் இரவு, பகல் என அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிலவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மகளிர் உரிமைத்தொகை குறித்து சக்கரபாணி பேச்சு முன்னாள் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தால் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார். தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்றும் அவர் பேசினார். கனமழையால் சிறப்புப் பேச்சாளர்கள் உரையாற்ற முடியவில்லை இதனிடையே, விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடைவிடாது கனமழை பெய்ததால் நிகழ்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக திட்டமிட்டபடி சிறப்புப் பேச்சாளர்கள் அனைவரும் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் தலைவர்கள் அவசர அவசரமாக உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் விழா களைகட்டியது. மழை நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் பலர் புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தின் கீழும், சாலையின் இருபுறங்களிலும் காத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர். தாராபுரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த கனமழைக்கு மத்தியில் நடைபெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா, அரசியல் பரபரப்பையும் தொண்டர்களின் உற்சாகத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
    2
    தேர்தல் பணிமனை திறப்புவிழா விழாக்கோலம் பூண்ட தாராபுரம்
தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை
திடீர் கனமழையிலும் உரையாற்றிய கே.என்.நேரு
விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கனமழை பெய்தது. இதனால் விழா மேடையில் இருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மழையில் நனைந்தனர். இருப்பினும், மழையைப் பொருட்படுத்தாமல் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடையே உரையாற்றினார்.
மழையில் இருந்து தப்பிக்க தொண்டர்கள் நாற்காலிகளைத் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு தலைவர்களின் பேச்சைக் கேட்டனர். சிலர் மழையில் நனைந்தபடியே நிகழ்ச்சியில் தொடர்ந்து பங்கேற்றனர். மழை பெய்தபோதும் கூட்டம் கலைந்து செல்லாமல் இருந்தது விழாவில் குறிப்பிடத்தக்கதாக அமைந்தது.
தாராபுரத்தில் மின்வெட்டு, மின்கட்டணப் பிரச்சினை
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், தாராபுரம் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக மழையின்றி வறட்சி நிலவி வந்த நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யாவின் தேர்தல் பணிமனை திறப்பு விழாவில் திடீரென கனமழை பெய்துள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரை அறிவித்தவுடன் திமுகவிற்கு வெற்றி மழை பெய்துவிட்டது எனக் குறிப்பிட்டார்.
மேலும், தாராபுரம் பகுதியில் மின்சாரக் கட்டணக் கணக்கீட்டுப் பணிகள் தொய்வாக நடைபெறுவதாகவும், 200 யூனிட் மின்சாரம் தொடர்பான கணக்கீட்டுப் பணிகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களால் மின்நுகர்வோர் பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மின்கட்டணமாக ரூ.2,000 செலுத்தி வந்தவர்களுக்கு ரூ.10,000 வரை கட்டணம் விதிக்கப்படுவதாகவும், அதிக மின்கட்டணம் செலுத்திய பின்னரும் தாராபுரத்தில் இரவு, பகல் என அறிவிக்கப்படாத மின்வெட்டு தொடர்ந்து நிலவி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மகளிர் உரிமைத்தொகை குறித்து சக்கரபாணி பேச்சு
முன்னாள் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தால் வேலையில்லாத படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.
தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்றும், திமுக ஆட்சியில் வழங்கப்பட்டு வந்த மகளிர் உரிமைத்தொகையான ரூ.1,000 மட்டுமே தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து மகளிருக்கும் ரூ.2,500 மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படவில்லை என்றும் அவர் பேசினார்.
கனமழையால் சிறப்புப் பேச்சாளர்கள் உரையாற்ற முடியவில்லை
இதனிடையே, விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இடைவிடாது கனமழை பெய்ததால் நிகழ்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. மழை காரணமாக திட்டமிட்டபடி சிறப்புப் பேச்சாளர்கள் அனைவரும் உரையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
மழை தொடர்ந்து பெய்ததால் தலைவர்கள் அவசர அவசரமாக உரையாற்றிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இருப்பினும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஒரே இடத்தில் திரண்டிருந்ததால் விழா களைகட்டியது.
மழை நின்றுவிடும் என்ற எதிர்பார்ப்பில் பலர் புதிய பேருந்து நிலைய மேம்பாலத்தின் கீழும், சாலையின் இருபுறங்களிலும் காத்திருந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் தொண்டர்கள் மழையில் நனைந்தபடியே அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தாராபுரத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த கனமழைக்கு மத்தியில் நடைபெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா, அரசியல் பரபரப்பையும் தொண்டர்களின் உற்சாகத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    14 hrs ago
  • தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    1
    தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது.
தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    3 hrs ago
  • NGGO காலனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கற்சிலை வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு சுற்றுப்பகுதி பொதுமக்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர். மாலை விநாயகர் திருவீதி உலா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், சுதாகர், மணி, சரவணன், ஜீவானந்தம், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    4
    NGGO காலனியில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி
கற்சிலை வடிவில் பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து வழிபாடு
சுற்றுப்பகுதி பொதுமக்கள் திரளாக வந்து தரிசனம் செய்தனர்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர்.  
விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே அசோகபுரம், என் ஜி ஜி ஓ காலனி பகுதியில் இந்து முன்னணி சார்பில் கோவில் வடிவில் செட் அமைத்து கற்சிலை வடிவில் பிரம்மாண்டமான விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தனர். சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், சுண்டல், கொழுக்கட்டைகள் அன்னதானமாக வழங்கினர்.  மாலை விநாயகர் திருவீதி உலா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் தியாகராஜன், சுதாகர், மணி, சரவணன், ஜீவானந்தம், ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
    user_ரமேஷ்குமார்
    ரமேஷ்குமார்
    பத்திரிகையாளர் கோயம்புத்தூர் வடக்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    2 hrs ago
  • பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: 300-க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கல்... ராசிபுரம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா ராசிபுரம் நகரம் 23-வது வார்டு பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மா. கார்த்திக் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவுவழங்கப்பட்டது.
    1
    பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா: 300-க்கும் மேற்பட்டோருக்கு காலை உணவு வழங்கல்...

ராசிபுரம்
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா ராசிபுரம் நகரம் 23-வது வார்டு பகுதியில் நடைபெற்றது.
கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் விஸ்வநாத் ஆலோசனைப்படி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மா. கார்த்திக் தலைமையில் விழா நடைபெற்றது. இதில் பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் காலை உணவுவழங்கப்பட்டது.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    5 hrs ago
  • காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் விஜய், மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க அலுவலக கட்டிடத்தில் தமிழ்நாடு கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் கல் நல்ல சாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள பெஸ்ட் நகரை சேர்ந்த முத்துச்சாமி வயது 55 என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய கல் நல்ல சாமி தெரிவித்ததாவது:- காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் என விவசாயிகள் சங்கம் சார்பில் பகிரங்க சவால் விடுத்துள்ளது. தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. விவசாயிகள் சங்க நிர்வாகிகள், காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். கட்சி மாறுவது காலம் காலமாக நடப்பதுதான்! அப்போது பேசிய விவசாயிகள் சங்க நிர்வாகி, அரசியல் கட்சிகளில் இருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றொரு கட்சிக்குச் செல்வது காலம் காலமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார். கட்சி மாறுபவர்களுக்கு உரிய பதவியும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த அவர், இதற்குத் திருவள்ளுவரின் குறளையும் மேற்கோள் காட்டினார். “கட்சி மாறுபவர்களுக்கு உரிய மரியாதையும் சன்மானமும் வழங்க வேண்டும் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். ‘உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக்கொளல்’ என்பது வள்ளுவர் காட்டிய வழி. இதிகாச காலத்திலேயே தரப்பு மாறுவது இருந்திருக்கிறது” என்று தெரிவித்தார். ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு! தொடர்ந்து, காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அளித்து வரும் வாக்குறுதிகள் குறித்து அவர் பேசுகையில், விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். “தாராபுரம் தொகுதியில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தாலும் சரி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமி அல்லது இடதுசாரித் தலைவர்கள் வந்தாலும் சரி, யார் வந்தாலும் எங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது. காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். அவ்வாறு நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கத் தயாராக இருக்கிறோம். இந்தக் கேள்வியை முன்னிறுத்தித்தான் நாங்கள் தேர்தலில் களமிறங்குகிறோம். ஏட்டுச் சுரைக்காய், கானல் நீர், மாய மான் ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு அலைவது போல அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு வெறும் நம்பிக்கைகளை மட்டுமே அளித்து வருகின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகளால் விவசாயிகளுக்கு என்ன பயன். காவிரி நதிநீர் பிரச்சினை விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான தெளிவான திட்டங்கள் உள்ளனவா என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர். தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகளை அளிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். காவிரி விவகாரத்தில் தீர்வு காண முடியும் என்று கூறும் அரசியல் தலைவர்கள், அதற்கான வழிமுறைகளையும் நடைமுறைச் சாத்தியங்களையும் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டனர். தாராபுரம் தேர்தல் களத்தில் புதிய விவாதம்! தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ள ரூ.10 கோடி பரிசு சவால் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் பதில் என்ன? தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வார்களா? காவிரி விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும், தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    1
    காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் 
கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் விஜய்,  மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி
ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க அலுவலக கட்டிடத்தில் தமிழ்நாடு கல் இயக்க ஒருங்கிணைப்பாளர் கல் நல்ல சாமி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது தாராபுரம் இடைத்தேர்தலில் அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் உள்ள பெஸ்ட் நகரை சேர்ந்த முத்துச்சாமி வயது 55 என்ற வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைத்து பேசிய கல் நல்ல சாமி தெரிவித்ததாவது:-
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்றும் 
கல் இறக்குவதும் பருகுவதும் போதைப்பொருள் என நிரூபித்தால் அது குறித்து வாதிட விவசாய சங்க நிர்வாகிகளுடன் அரசியல் தலைவர்கள் வந்து அதை நிரூபித்தால் அவர்களுக்கும் 10 கோடி வழங்கப்படும் என விவசாயிகள் சங்கம் சார்பில் பகிரங்க சவால் விடுத்துள்ளது.
தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எந்த அரசியல் தலைவராக இருந்தாலும் இந்தச் சவாலை ஏற்கத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
விவசாயிகள் சங்க நிர்வாகிகள், காவிரி நதிநீர் விவகாரம் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.
கட்சி மாறுவது காலம் காலமாக நடப்பதுதான்!
அப்போது பேசிய விவசாயிகள் சங்க நிர்வாகி, அரசியல் கட்சிகளில் இருந்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றொரு கட்சிக்குச் செல்வது காலம் காலமாக நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்டார்.
கட்சி மாறுபவர்களுக்கு உரிய பதவியும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த அவர், இதற்குத் திருவள்ளுவரின் குறளையும் மேற்கோள் காட்டினார்.
“கட்சி மாறுபவர்களுக்கு உரிய மரியாதையும் சன்மானமும் வழங்க வேண்டும் என்று வள்ளுவரே கூறியிருக்கிறார். ‘உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன் இழைத்திருந்து எண்ணிக்கொளல்’ என்பது வள்ளுவர் காட்டிய வழி. இதிகாச காலத்திலேயே தரப்பு மாறுவது இருந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
ரூ.10 கோடி பரிசு அறிவிப்பு!
தொடர்ந்து, காவிரி நதிநீர் விவகாரத்தில் அரசியல் கட்சிகள் அளித்து வரும் வாக்குறுதிகள் குறித்து அவர் பேசுகையில், விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைக்கு இதுவரை நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
“தாராபுரம் தொகுதியில் தற்போதைய முதல்வர் ஜோசப் விஜய் பிரச்சாரத்திற்கு வந்தாலும் சரி, முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தாலும் சரி, எடப்பாடி பழனிசாமி அல்லது இடதுசாரித் தலைவர்கள் வந்தாலும் சரி, யார் வந்தாலும் எங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுங்கள். அவ்வாறு நிரூபித்தால் அவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கத் தயாராக இருக்கிறோம்.
இந்தக் கேள்வியை முன்னிறுத்தித்தான் நாங்கள் தேர்தலில் களமிறங்குகிறோம். ஏட்டுச் சுரைக்காய், கானல் நீர், மாய மான் ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு அலைவது போல அரசியல் கட்சிகள் விவசாயிகளுக்கு வெறும் நம்பிக்கைகளை மட்டுமே அளித்து வருகின்றன. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளால் விவசாயிகளுக்கு என்ன பயன்.
காவிரி நதிநீர் பிரச்சினை விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. எனவே, தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் நடைமுறையில் சாத்தியமாகுமா என்பதையும், அவற்றை நிறைவேற்றுவதற்கான தெளிவான திட்டங்கள் உள்ளனவா என்பதையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என விவசாயிகள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காக வெற்று வாக்குறுதிகளை அளிப்பதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
காவிரி விவகாரத்தில் தீர்வு காண முடியும் என்று கூறும் அரசியல் தலைவர்கள், அதற்கான வழிமுறைகளையும் நடைமுறைச் சாத்தியங்களையும் வெளிப்படையாக விளக்க வேண்டும் என்பதே தங்களது எதிர்பார்ப்பு என்றும் குறிப்பிட்டனர்.
தாராபுரம் தேர்தல் களத்தில் புதிய விவாதம்!
தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ள ரூ.10 கோடி பரிசு சவால் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் அளிக்கும் பதில் என்ன? தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் தலைவர்கள் இந்தச் சவாலை ஏற்றுக்கொள்வார்களா? காவிரி விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவார்களா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும், தேர்தல் வாக்குறுதிகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்பதையும் வலியுறுத்தியே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    user_Dpm news
    Dpm news
    Photographer தாராபுரம், திருப்பூர், தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.