பாலக்கோடு அருகே சின்னாறு அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு 140 நாட்களுக்கு வினாடி 400கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் சதீஷ் திறந்து வைத்தார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி கிராமத்தில் உள்ள சின்னாறு அணை நிரம்பியது. தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையேற்று அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இன்று தருமபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் விவசாய பாசனத்திற்காக வலது புறகால்வாய் வழியாக வினாடிக்கு 400 கன அடி தண்ணீரை திறந்து வைத்து, மலர் தூவினார். இதில் பழைய ஆயக்கட்டு ஐந்து ஏரிகளுக்கும், புதிய ஆயக்கட்டு பாசன பகுதிகளுக்கு 140 நாட்களுக்கு திறக்கப்படும். இதன் மூலம் பஞ்சப்பள்ளி, பெரியானூர், போடிகுட்டப்பள்ளி, அத்திமுட்லு மாரண்டஅள்ளி, கொலசனஅள்ளி, பி.செட்டிஅள்ளி, ஜெர்த்தலாவ், பாலக்கோடு, குஜ்ஜரஅள்ளி, எர்ரனஅள்ளி, பேளாரஅள்ளி, சாமனூர் ஆகிய கிராமங்களில் உள்ள பழைய ஆயக்கட்டு பரப்பு 2626 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு பரப்பு 1874 ஏக்கர் மொத்தம் 4500ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகின்றன. மேலும் தண்ணீரை கிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சட்ட மன்ற உறுப்பினர் கே.பி.அன்பழகன், பாரளுமன்ற உறுப்பினர் மணி மற்றும் பொதுபணித்துறை அதிகாரிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

- பென்னாகரம் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை சாலை மறியல தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய பதிலளிக்காமல் சென்றதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஏரியூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக, சுமார் ஒரு மணி நேரம் ஏரியூர் பென்னாகரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- திமுக தொண்டர் அணி அமைப்பாளருக்கு அறிவாள் வெட்டு, காவல்த்துறையினர் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் 7வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினரான இவர் திமுகவில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் கடந்த 15 தினங்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்கும், ஆறுமுகத்திற்கும் மகன் காணாமல் போனது தொடர்பாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இதனை காரணம் காட்டி வீட்டிலிருந்த ஆறுமுகத்தை மர்ம நபர்கள் சிலர் அறிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஆறுமுகம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.1
- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் வீதி அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில், தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த லட்சுமி என்ற தூய்மை பணியாளரை பூக்கடை உரிமையாளர் நல்லசாமி என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தூய்மை பணியாளர்கள், கடையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.1
- திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இனம் கல் பாளையம் கிராமத்தில் பள்ளி எதிரே குப்பை போல் குறைந்திருக்கும் குப்பைகள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து இன்னும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகிறார்கள் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.1
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.06) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 3000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1