logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

Looking for Job Job Title : பாதுகாவலர் Job Field : கம்பெனி Expected Salary : 25000 City / Locality : திருச்சி Experience Level : 10+ Years Job Type : Full Time Education Qualification : 12th Pass

18 hrs ago
user_Kalidass K
Kalidass K
Lalgudi, Tiruchirappalli•
18 hrs ago

Looking for Job Job Title : பாதுகாவலர் Job Field : கம்பெனி Expected Salary : 25000 City / Locality : திருச்சி Experience Level : 10+ Years Job Type : Full Time Education Qualification : 12th Pass

More news from தமிழ்நாடு and nearby areas
  • புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில், 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் பிரியங்கா பங்கேற்றார். டாக்டர் பிரியங்கா, யோகாசனப் பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தும், மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவும், கவனச்சிதறல் ஏற்படாது, உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் என பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகாசனப் பயிற்சிகளை செய்து காட்டி, சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், நோய்களுக்குத் தகுந்த உணவு முறைகள், அக்குபஞ்சர் மற்றும் அரோமா தெரபி பற்றியும், உடம்பில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பல வகையான மூலிகை பொடிகள் வழங்கப்படும் எனவும் விளக்கமளித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    3
    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அரசு மருத்துவமனையில், 12வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மருத்துவமனை தலைமை மருத்துவர் மகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் பிரியங்கா பங்கேற்றார்.

டாக்டர் பிரியங்கா, யோகாசனப் பயிற்சி நினைவுத்திறனை மேம்படுத்தும், மனதை உற்சாகமாக வைத்திருக்க உதவும், கவனச்சிதறல் ஏற்படாது, உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் என பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்தார். அவர் மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு யோகாசனப் பயிற்சிகளை செய்து காட்டி, சிகிச்சை முறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், நோய்களுக்குத் தகுந்த உணவு முறைகள், அக்குபஞ்சர் மற்றும் அரோமா தெரபி பற்றியும், உடம்பில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பல வகையான மூலிகை பொடிகள் வழங்கப்படும் எனவும் விளக்கமளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
    user_Batcha
    Batcha
    செய்தியாளர் இலுப்பூர், புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    15 hrs ago
  • புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நெம்மேலிக்காடு கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் நடுவே உயர்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இந்த கம்பிகளைத் தாங்கி நிற்கும் மூன்று மின்கம்பங்கள் காங்கிரீட் உதிர்ந்து, எந்நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளன. இந்த மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்தால், அப்பகுதியில் பெரிய அளவிலான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, இந்த மூன்று ஆபத்தான மின் கம்பங்களையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிர்வாகம் உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தாலுகா நெம்மேலிக்காடு கிராமத்தில் உள்ள ஒரு குளத்தின் நடுவே உயர்அழுத்த மின்கம்பிகள் செல்கின்றன. இந்த கம்பிகளைத் தாங்கி நிற்கும் மூன்று மின்கம்பங்கள் காங்கிரீட் உதிர்ந்து, எந்நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளன.

இந்த மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்தால், அப்பகுதியில் பெரிய அளவிலான விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாத சூழலைப் பயன்படுத்தி, இந்த மூன்று ஆபத்தான மின் கம்பங்களையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக நிர்வாகம் உடனடியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_P.Senthilvelan
    P.Senthilvelan
    Insurance Agent அறந்தாங்கி, புதுக்கோட்டை, தமிழ்நாடு•
    17 hrs ago
  • எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஒரு யோசனையை முன்வைத்தார். இந்த யோசனையை C.M விஜய் உற்று கவனித்தார்.
    1
    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஒரு யோசனையை முன்வைத்தார். இந்த யோசனையை C.M விஜய் உற்று கவனித்தார்.
    user_R. Suresh
    R. Suresh
    Local News Reporter கரூர், கரூர், தமிழ்நாடு•
    20 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையின் வெள்ளிமலை அருகே அமைந்துள்ள மொட்டையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் நூலகத்தை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், நீண்ட நாட்களாக பயன்பாடின்றி மூடப்பட்டிருக்கும் நூலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். அத்துடன், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய விளையாட்டு மைதான வசதியை ஏற்படுத்தவும், போதிய பாதுகாப்பு இல்லாத அரசுப் பள்ளிக்கு தடுப்புச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வு மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகளால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையின் வெள்ளிமலை அருகே அமைந்துள்ள மொட்டையனூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் நூலகத்தை சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் ராகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, அப்பகுதி பொதுமக்களை சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும், நீண்ட நாட்களாக பயன்பாடின்றி மூடப்பட்டிருக்கும் நூலகத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் உறுதியளித்தார். அத்துடன், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில் புதிய விளையாட்டு மைதான வசதியை ஏற்படுத்தவும், போதிய பாதுகாப்பு இல்லாத அரசுப் பள்ளிக்கு தடுப்புச் சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்ற உறுப்பினரின் இந்த ஆய்வு மற்றும் அவர் அளித்த வாக்குறுதிகளால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் அனைத்தும் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வந்த கடும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த சூழலில், நேற்று இரவு (19.06.2026) விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டாலும், குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    1
    கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வந்த கடும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலை காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். இந்த சூழலில், நேற்று இரவு (19.06.2026) விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டாலும், குளிர்ந்த சூழ்நிலை நிலவியதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
    user_Premkumar prem Prem
    Premkumar prem Prem
    Engineer விருத்தாசலம், கடலூர், தமிழ்நாடு•
    21 hrs ago
  • நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. புதிதாக ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த புகைப்பட பதாகையை மர்ம நபர்கள் கிழித்தெறிந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக என்.டி. இடிமுரசு கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் அறிவழகன், மாவட்ட செயலாளர்கள் நாக.அருட்செல்வன், சு.ம.செல்வராசு, மாநில வர்த்தக அணி செயலாளர் ஜவகர், மாவட்ட செய்தி தொடர்பாளர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பூவை.மனோகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சிவராமன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் புரட்சிவளவன், வேளாங்கண்ணி நகர செயலாளர் நாராயணன், ஒன்றிய பொருளாளர் பிரபு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை வளவன் குட்டியப்பா, சசி இளையராஜா ஒன்றிய குழு, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மேகலா வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    1
    நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. புதிதாக ஒன்றிய செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கட்சியினரால் வைக்கப்பட்டிருந்த புகைப்பட பதாகையை மர்ம நபர்கள் கிழித்தெறிந்தனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வேட்டைக்காரனிருப்பு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக என்.டி. இடிமுரசு கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினார். இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் அறிவழகன், மாவட்ட செயலாளர்கள் நாக.அருட்செல்வன், சு.ம.செல்வராசு, மாநில வர்த்தக அணி செயலாளர் ஜவகர், மாவட்ட செய்தி தொடர்பாளர் மதியழகன், மாவட்ட துணை செயலாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பூவை.மனோகர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் இளையராஜா, மாவட்ட கலை இலக்கிய பேரவை அமைப்பாளர் குமார், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சிவராமன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட துணை செயலாளர் புரட்சிவளவன், வேளாங்கண்ணி நகர செயலாளர் நாராயணன், ஒன்றிய பொருளாளர் பிரபு, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை வளவன் குட்டியப்பா, சசி இளையராஜா ஒன்றிய குழு, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் மேகலா வீரமணி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வேதாரண்யம் காவல் துணை கண்காணிப்பாளர் அண்ணாதுரை நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து, போராட்டக்காரர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    8 hrs ago
  • கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட மேழாத்துகுழி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கட்ரமணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வபோதகர் ஆகியோர் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர். பின்னர், குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பழுதடைந்திருந்த மோட்டார் அகற்றப்பட்டு புதிய மோட்டார் பொருத்தும் பணி விரைந்து மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் வெறும் மூன்று மணி நேரத்திற்குள் புதிய மோட்டார் பொருத்தப்பட்டு கிராம மக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த குடிநீர் பிரச்சினை சில மணி நேரங்களிலேயே தீர்வு காணப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தங்களது கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
    1
    கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை வட்டத்திற்குட்பட்ட மேழாத்துகுழி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக கடுமையான குடிநீர் பிரச்சினை நிலவி வந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வெங்கட்ரமணன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வபோதகர் ஆகியோர் பொதுமக்களின் குறைகளை நேரடியாகக் கேட்டறிந்தனர். பின்னர், குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக, பழுதடைந்திருந்த மோட்டார் அகற்றப்பட்டு புதிய மோட்டார் பொருத்தும் பணி விரைந்து மேற்கொள்ளப்பட்டது.

அதிகாரிகளின் துரித நடவடிக்கையால் வெறும் மூன்று மணி நேரத்திற்குள் புதிய மோட்டார் பொருத்தப்பட்டு கிராம மக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக நீடித்து வந்த குடிநீர் பிரச்சினை சில மணி நேரங்களிலேயே தீர்வு காணப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், தங்களது கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் நன்றியைத் தெரிவித்தனர்.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    கல்வராயன் மலைகள், கள்ளக்குறிச்சி, தமிழ்நாடு•
    16 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு கடைவீதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கம், மற்றும் நூறுநாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உடனடியாகக் கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம், ஒன்றிய செயலாளர் வீ.ராஜகுரு தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், நூற்றாண்டுகளாக தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக இருந்து வந்த 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைக்கும் 'விபி ஜி ராம்ஜி' என்ற புதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரினர். மேலும், 100 நாள் வேலை நாட்களை 200 ஆக உயர்த்தி, தினக்கூலியை ₹700 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் கண்டன உரைகளில் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.சசிரேகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.அலெக்சாண்டர், டி.செல்லையன், எம்.ஞானசேகரன், எல்.தமிழ்மாறன், ஆர்.தங்கதுரை, கிளை செயலாளர்கள் எஸ்.கே.ஸ்டாலின், ஜி.ரகுபதி, டி.சௌந்தரராஜன், மற்றும் கட்சி பொறுப்பாளர் எஸ்.ஜேம்ஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    1
    நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு கடைவீதியில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசின் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு, நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு அமலாக்கம், மற்றும் நூறுநாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை உடனடியாகக் கைவிட வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம், ஒன்றிய செயலாளர் வீ.ராஜகுரு தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், நூற்றாண்டுகளாக தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும், கிராமப்புற ஏழைகளின் வாழ்வாதாரமாக இருந்து வந்த 100 நாள் வேலை திட்டத்தைச் சிதைக்கும் 'விபி ஜி ராம்ஜி' என்ற புதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் கோரினர். மேலும், 100 நாள் வேலை நாட்களை 200 ஆக உயர்த்தி, தினக்கூலியை ₹700 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்றும் கண்டன உரைகளில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வேணு, மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.சசிரேகா ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கே.அலெக்சாண்டர், டி.செல்லையன், எம்.ஞானசேகரன், எல்.தமிழ்மாறன், ஆர்.தங்கதுரை, கிளை செயலாளர்கள் எஸ்.கே.ஸ்டாலின், ஜி.ரகுபதி, டி.சௌந்தரராஜன், மற்றும் கட்சி பொறுப்பாளர் எஸ்.ஜேம்ஸ் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    19 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், அய்யலூர் வேங்கனூர் முதல் வடுகபட்டி வரை எரியோடு செல்லும் தார் சாலை புதுப்பிக்கும் பணி, கடந்த சட்டசபைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், ஜல்லிகள் கொட்டப்பட்டு அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலைப்பணியை உடனடியாக மீண்டும் துவங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    1
    திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஒன்றியம், அய்யலூர் வேங்கனூர் முதல் வடுகபட்டி வரை எரியோடு செல்லும் தார் சாலை புதுப்பிக்கும் பணி, கடந்த சட்டசபைத் தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால், ஜல்லிகள் கொட்டப்பட்டு அரைகுறையாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலைப்பணியை உடனடியாக மீண்டும் துவங்கிட வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    user_Sangili.v
    Sangili.v
    Architect வேடசந்தூர், திண்டுக்கல், தமிழ்நாடு•
    21 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.