Shuru
Apke Nagar Ki App…
இரத்தம் பரிசோதனை மற்றும் அன்னதான நிகழ்வு சேலம் மாவட்ட சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பு, ஸ்ரீ மகானந்த சித்தர் டிரஸ்ட் இணைந்து நடத்தும் இரத்த பரிசோதனை, அன்னதான நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. நிகழ்வில் இரண்டு அமைப்புகள் சார்ந்த தலைவர்கள்,நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். சேலம் சித்தர் கோயிலில் நடைபெற்றன.
கணேஷ் G
இரத்தம் பரிசோதனை மற்றும் அன்னதான நிகழ்வு சேலம் மாவட்ட சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பு, ஸ்ரீ மகானந்த சித்தர் டிரஸ்ட் இணைந்து நடத்தும் இரத்த பரிசோதனை, அன்னதான நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. நிகழ்வில் இரண்டு அமைப்புகள் சார்ந்த தலைவர்கள்,நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். சேலம் சித்தர் கோயிலில் நடைபெற்றன.
More news from தமிழ்நாடு and nearby areas
- தவெக அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி போராட்டம்! இபிஎஸ் அறிவிப்பு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் இருந்து விமான மூலம் சென்னை செல்வதற்கு முன் சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறும் போது, தமிழக வெற்றிக்கழக அரசு தேர்தல் வாக்குறுதியின் அளித்தபடி விவசாயிகளின் முழு கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மேலும் கடன் தள்ளுபடி காண அறிவிப்பு நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அறிவிக்க வேண்டும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தோடு விளையாடுவதை விட்டுவிட்டு முதல்வர் மௌனத்தை கலைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், ஒருவேளை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய அறிவிப்பு தவறும் பட்சத்தில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.1
- மாம்பாறை முனியப்பன் கோவிலில் இன்று பக்தர்கள் அடைசல் பூஜை வழிபாடு செய்தனர்1
- மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! மின் சார வாரியத்தில் பணிபுரிந்து 40வது ஆண்டில் பணி நிறைவு பாராட்டு விழா..! தருமபுரி அடுத்து சோகத்தூர் பகுதியில் உள்ள ஆட்டுக்காரன்பட்டி தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் (22.4.1987) முதல் 39 ஆண்டுகளாக பணி கடந்து 40 வது ஆண்டில் பணியை சிறப்புடன் தொடர்ந்து (31.07.2026) இன்றுடன் அதியமான்கோட்டையில் பணிபுரிந்த சின்னசாமி அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மின் சார வாரியத்தில் பணி புரியும் பணியாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பணி நிறைவு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.1
- மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர். கோத்தகிரி அருகே உள்ள இடுகொரை கிராமத்திற்கு உரிய சாலை வசதி இல்லாததால் இறந்தவரின் சடலத்தை சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்கு கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்றனர்.1
- பாப்பிரெட்டிப்பட்டி அருகே பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் ராஜசேகரன்,தலைமையில் செயலாளர் மாதையன், முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், தேர்தல் வாக்குறுதிப்படி தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க் கடன்களை உடனடியாக முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றாத அரசைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதரவு விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதரவு விலையும் வழங்க வேண்டும், வேளாண் இடுபொருட்களை இலவசமாக வழங்க வேண்டும், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும், வரும் வேளாண் பட்ஜெட் கூட்டத் தொடரில் போர்க்கால அடிப்படையில் விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.1
- குங்கும காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த எல்லைப்பிடாரியம்மன்! சேலம் அருள்மிகு ஸ்ரீ எல்லை பிடாரியம்மன் திருக்கோவிலில், இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, அம்மனுக்கு சிகப்பு நிறப்பட்டாடை அணிவித்து வண்ணமலர் மாலைகளுடன், குங்குமக் காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மனை மனமுருகி வழிபட்டனர்.1
- சேலம் செந்தாரப்பட்டி பேரூராட்சியில் உள்ள மதுபான கடை அகற்ற வேண்டி போராட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகாவிற்கு உட்பட்ட செந்தாரப்பட்டி பேரூராட்சியில் ஒன்னாவது வார்டு பகுதியில் அரசு மதுபானம் கடை இயங்கி வருகிறது இந்த மதுபான கடையை பொதுமக்களுக்கு இடைஞ்சலாக உள்ளதால் உடனடியாக மதுபான கடை அகற்ற வேண்டும் என போராட்டம் நடைபெற்றது இதனை அடுத்து அதிகாரிகள் ஒரு மாதம் அவகாசம் கேட்டதனால் போராட்டம் கைவிடப்பட்டது.1