சிவகங்கை: உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக கருணாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் கருணாஸ், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வாணியங்குடி பஞ்சாயத்து, பையூர், பழமை நகர், சமத்துவபுரம், அண்ணா நகர், சீனிவாச நகர், குறிஞ்சி நகர், வல்லனி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கி ஆதரவு கோரினார். பிரசாரத்தின் போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், “உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, உங்கள் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பேன்” என உறுதியளித்த கருணாஸ், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை: உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவாக கருணாஸ் தீவிர வாக்கு சேகரிப்பு சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் கருணாஸ், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வாணியங்குடி பஞ்சாயத்து, பையூர், பழமை நகர், சமத்துவபுரம், அண்ணா நகர், சீனிவாச நகர், குறிஞ்சி நகர், வல்லனி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கி ஆதரவு கோரினார். பிரசாரத்தின் போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், “உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, உங்கள் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பேன்” என உறுதியளித்த கருணாஸ், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் கருணாஸ், தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். வாணியங்குடி பஞ்சாயத்து, பையூர், பழமை நகர், சமத்துவபுரம், அண்ணா நகர், சீனிவாச நகர், குறிஞ்சி நகர், வல்லனி உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கி ஆதரவு கோரினார். பிரசாரத்தின் போது பொதுமக்கள் ஆரத்தி எடுத்து, மலர் மாலைகள் அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர். மேலும், “உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து, உங்கள் குறைகளை சட்டமன்றத்தில் எடுத்துரைப்பேன்” என உறுதியளித்த கருணாஸ், வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். இந்த பிரசாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பெரிய பள்ளிவாசல் பின்புறம் வசித்து வருபவர் சம்சுதீன் ( வயது 53). இவர் தனது மனைவி ஆயிஷா மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 8-ம் தேதியான இன்று, ஆயிஷா அருகில் உள்ள வீட்டிற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது வீட்டில் இருந்து கரும்புகை வெளியேறியது. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை அடுத்து ஓடி வந்து பார்த்த ஆயிஷா, தனது வீடு மளமளவெனத் தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும், அதற்குள் வீட்டின் உள்ளே இருந்த பெரும்பாலான பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்வரும் பொருட்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது: ஏசி (AC), பிரிட்ஜ், வாஷிங் மெஷின். கட்டில், பீரோ, மெத்தை மற்றும் சோபா. பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 25,000 ரொக்கப் பணம் ஆகியவை தீயில் கருகி நாசமானதாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வார்டு கவுன்சிலரும், திமுக நகர செயலாளருமான பாலா மற்றும் முன்னாள் கவுன்சிலர் மும்தாஜ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இது குறித்து தேவகோட்டை நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் யுபிஎஸ் (UPS) வெடித்ததே இந்த தீ விபத்திற்கு முக்கியக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.1
- *திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பஞ்சாலை தொழிலாளி வெட்டி படுகொலை; கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்* விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் நடந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார். அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.4
- தூத்துக்குடியில் பைபாஸ் சாலையில் மறவன் மடம் அருகே பல ஏக்கர் பரப்பளவில் படர்ந்திருந்த முள்செடிகளில் ஏற்பட்ட காட்டுத்தீயைச் தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி அணைத்தனர். தூத்துக்குடி மறவன் மடம் அருகே உள்ள காலி நிலங்களில் வளர்ந்திருந்த முள்செடிகள் நேற்று திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கின. இது குறித்துச் சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாகச் சிப்காட் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், ஏட்டு இசக்கி ராஜன், ஓட்டுநர் மணிகண்டன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் முத்து ஜெயக்குமார், சாமுவேல் ஆகியோர் தீயணைப்பு ஊர்தியுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெயிலின் தாக்கம் மற்றும் பலத்த காற்று காரணமாகத் தீ மளமளவெனப் பரவி, பல ஏக்கர் நிலங்களைச் சூழ்ந்தது. தீ எரிந்த பகுதிக்கு அருகிலேயே பெட்ரோல் விற்பனை நிலையம் மற்றும் மர யார்டுகள் இருந்ததால் பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தீயணைப்புத் துறையினர், உடனடியாகத் தனியார் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்தனர். ஜேசிபி மூலம் எரியாத முள்செடிகளை அப்புறப்படுத்தித் தீ மேலும் பரவாமல் தடுத்தனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காட்டுத்தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்களின் இந்தச் சமயோசியமான நடவடிக்கையைப் பொதுமக்களும், வணிக நிறுவன உரிமையாளர்களும் வெகுவாகப் பாராட்டினர். இது குறித்துச் சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் பொதுமக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் கூறியிருப்பதாவது: "கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் மற்றும் தனியார் நில உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து தங்கள் பகுதியில் உள்ள காய்ந்த முள்செடிகளை ஜேசிபி மூலம் அகற்ற வேண்டும். இதன் மூலம் தீ விபத்துகளையும், பெரும் பொருள் சேதங்களையும் தவிர்க்கலாம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், தீயணைப்புத் துறையினரின் மீட்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவும் வேண்டும் எனத் தெரிவித்தார்.1
- திண்டுக்கல் நாடார் உறவின்முறை சங்கத்தின் சார்பாக நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில், அதிமுக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திண்டுக்கல் சி. சீனிவாசனுக்கு சங்கத்தினர் தங்கள் முழு ஆதரவை அளித்தனர். இந்த முக்கிய நிகழ்வில் முன்னாள் மேயர் மருதராஜ் மற்றும் நாடார் உறவின்முறை சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர். இது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுகவின் தேர்தல் பணிகளுக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.1
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சமீபத்தில் திருச்சியிலிருந்து கம்பம் நோக்கி சென்றபோது, அதன் வழித்தட காட்டி எல்.இ.டி திரையில் ஊர் பெயர்களுக்கு பதிலாக நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ஒளிர விடப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அந்த காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அரசு பேருந்தில் அரசியல் கட்சியின் பெயர் எவ்வாறு வந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். மேலும் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் எல்.இ.டி திரையை இயக்கும் மென்பொருள் பலகையை ஹேக் செய்து, அதில் இருந்த தகவல்களை மாற்றியமைத்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, பேருந்தில் உள்ள வைஃபை இணைப்பின் கடவு சொல்லை கண்டறிந்து, அதன் மூலம் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்தின் மதர்போர்டு மாற்றப்பட்டு சரியான வழித்தட விவரங்கள் மீண்டும் பதிவேற்றப்பட்டன. இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, இனிவரும் காலங்களில் இத்தகைய ஊடுருவல்கள் நிகழாத வண்ணம் டிஜிட்டல் பலகைகளின் பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.1
- *இலங்கங்குறிச்சியில் மாரியம்மன் கோயில் அருகே கிணற்றிற்கு தடுப்பு வேலி அமைத்து தருவதாக மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி.* *ஒரேநாளில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு.* திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் 50 கிராமங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தொடங்கி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். இளங்காங்குறிச்சி பொதுமக்களிடையே பேசுகையில் குழந்தைகள் தடுமாறி விழுந்தால் உயிர் போய்விடும் உயிரோட அருமை எனக்கு மட்டும் தெரியும் அதனால் கிணற்றுக்கு தடுப்பு வேலி வெற்றி பெற்றவுடன் சொந்த செலவில் அமைத்து தருகிறேன் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது . வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் நகரின் பல வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 18, 19, 20, 26, 27 வார்டுகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி , முன்னாள் கவுன்சிலர் கணேசன்,18வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன்,வார்டு செயலாளர் சங்கமங்கலம் சங்கர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், அடிப்படை வசதிகளை மேம்படுத்த உறுதி அளித்தார். ஏப்.23ல் தேர்தல் நடைபெற உள்ளது.1