திடீரென 'தவெக' பெயராக மாறிய பஸ் போர்டு. அரசுப் பேருந்தின் LED திரையை ஹேக் செய்தது எப்படி?. சைபர் கிரைம் அதிரடி..!!! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சமீபத்தில் திருச்சியிலிருந்து கம்பம் நோக்கி சென்றபோது, அதன் வழித்தட காட்டி எல்.இ.டி திரையில் ஊர் பெயர்களுக்கு பதிலாக நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ஒளிர விடப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அந்த காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அரசு பேருந்தில் அரசியல் கட்சியின் பெயர் எவ்வாறு வந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். மேலும் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் எல்.இ.டி திரையை இயக்கும் மென்பொருள் பலகையை ஹேக் செய்து, அதில் இருந்த தகவல்களை மாற்றியமைத்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, பேருந்தில் உள்ள வைஃபை இணைப்பின் கடவு சொல்லை கண்டறிந்து, அதன் மூலம் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்தின் மதர்போர்டு மாற்றப்பட்டு சரியான வழித்தட விவரங்கள் மீண்டும் பதிவேற்றப்பட்டன. இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, இனிவரும் காலங்களில் இத்தகைய ஊடுருவல்கள் நிகழாத வண்ணம் டிஜிட்டல் பலகைகளின் பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
திடீரென 'தவெக' பெயராக மாறிய பஸ் போர்டு. அரசுப் பேருந்தின் LED திரையை ஹேக் செய்தது எப்படி?. சைபர் கிரைம் அதிரடி..!!! தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தை சேர்ந்த அரசு பேருந்து ஒன்று சமீபத்தில் திருச்சியிலிருந்து கம்பம் நோக்கி சென்றபோது, அதன் வழித்தட காட்டி எல்.இ.டி திரையில் ஊர் பெயர்களுக்கு பதிலாக நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் ஒளிர விடப்பட்டது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர, அந்த காட்சிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. அரசு பேருந்தில் அரசியல் கட்சியின் பெயர் எவ்வாறு வந்தது என்ற கேள்வி எழுந்த நிலையில், இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணையை தொடங்கினர். மேலும் முதற்கட்ட விசாரணையில், அடையாளம் தெரியாத நபர்கள் பேருந்தின் எல்.இ.டி திரையை இயக்கும் மென்பொருள் பலகையை ஹேக் செய்து, அதில் இருந்த தகவல்களை மாற்றியமைத்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக, பேருந்தில் உள்ள வைஃபை இணைப்பின் கடவு சொல்லை கண்டறிந்து, அதன் மூலம் மர்ம நபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பேருந்தின் மதர்போர்டு மாற்றப்பட்டு சரியான வழித்தட விவரங்கள் மீண்டும் பதிவேற்றப்பட்டன. இந்த ஹேக்கிங் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறிய சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, இனிவரும் காலங்களில் இத்தகைய ஊடுருவல்கள் நிகழாத வண்ணம் டிஜிட்டல் பலகைகளின் பாதுகாப்பு வசதிகளை பலப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- பெண்களுடன் வயலில் இறங்கி நாற்று நட்டு அதிமுக வேட்பாளர் நூதன பிரச்சாரம். வீரப்பூரில் பொன்னர்- சங்கருக்கு மணிமண்டபம் மணப்பாறை அதிமுக வேட்பாளர் வாக்குறுதி. ஒரேநாளில் 80 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு. திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக சார்பில் டாக்டர். விஜயகுமார், இன்று மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஒன்றிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஆனையூரில் தொடங்கி கூடத்திப்பட்டி, அமயபுரம், நல்லாம்பிள்ளை, உடையாபட்டி, வீரப்பூர், பூசாரி பட்டி, அரசுநிலைப்பாளையம், அணியாப்பூர் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து வருகின்றனர். வீரப்பூர் பூசாரிபட்டியில் பொதுமக்களிடையே பேசுகையில் அண்ணன்மார் சுவாமிகளான பொன்னர் - சங்கருக்கு வீரப்பூரில் மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். வருங்கால சந்ததியினருக்கு கல்விதான் முக்கியம் எனவே குழந்தைகள் படிக்க வையுங்கள் என்றும் அறிவுரை கூறினார். அமயபுரம் அருகே சென்றபோது அங்கு வயலில் நாற்று நட்டபெண்களை பார்த்தவுடன் வண்டியில் இருந்து இறங்கிச் சென்று வயலில் நாற்று நட ஆரம்பித்தார். வேட்பாளர் பெண்களுக்கு இணையாக நாற்று படுவதைப் பார்த்த பெண்கள் ஆச்சர்யமடைந்தனர். பின்னர் அவர்களிடம் வாக்கு சேகரித்த வேட்பாளர் நானும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன்தான் நாற்று நடுவது எனக்கு பிடிக்கும் என்று கூறினார். வேட்பாளருடன் அதிமுக, பாஜக, அமமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியின் திமுக வேட்பாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் நகரின் பல வார்டுகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். 18, 19, 20, 26, 27 வார்டுகளில் பெண்கள் ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். நகர் செயலாளர் பொன்னுச்சாமி, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி , முன்னாள் கவுன்சிலர் கணேசன்,18வது வார்டு கவுன்சிலர் ராஜேஸ்வரி ராஜேந்திரன்,வார்டு செயலாளர் சங்கமங்கலம் சங்கர்உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ‘உதயசூரியன்’ சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அவர், அடிப்படை வசதிகளை மேம்படுத்த உறுதி அளித்தார். ஏப்.23ல் தேர்தல் நடைபெற உள்ளது.1
- Post by Muruga...Technician2
- சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கார்த்தியின் சட்டம் ஆலோசகர்கள், இன்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன் றை அளித்துள்ளனர். அதில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ அருள் இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்று பதிவாகியுள்ள கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்தும் கட்சியின் கொடியும் அடையாளங்களும் பாமக தலைவர் அன்புமணி தலைவராக உள்ள அக்கட்சியின் அடையாளங்கள் ஆகும். மேலும் அருள் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கும்படியும், பாட்டாளி மக்கள் கட்சி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அருள் ராமதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- *திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் கோவில் திருவிழாவில் கையில் வாளுடன் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிந்த இளைஞர்களை தட்டிக் கேட்ட பஞ்சாலை தொழிலாளி வெட்டி படுகொலை; கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி 3 மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் போராட்டம்* விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மற்றும் மாங்குளத்தை சேர்ந்த மாரிக்கண்ணன் என்ற இரு இளைஞர்கள் கஞ்சா போதையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கையில் பெரிய வாளுடன் சுற்றி திரிந்துள்ளனர். இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த பஞ்சாலை தொழிலாளியான வேல்முருகன்(33) என்பவர் கோவில் விழா கமிட்டி உறுப்பினராக இருந்ததால் கையில் வாளுடன் சுற்றித்திரிந்த கருப்பசாமி மற்றும் மாரி கண்ணன் இருவரையும் தட்டி கேட்டு சத்தம் போட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் நடந்த இருவரும் உன்னை வெட்டிக் கொள்ளாமல் விடமாட்டோம் என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து விழா முடிந்து இன்று அதிகாலை நேரத்தில் ராமலிங்காமில் அருகே உள்ள டீக்கடையில் வேல்முருகன் நண்பர்களுடன் வந்து டீ குடித்துவிட்டு மீண்டும் சவ்வாஸ்புரம் திரும்பி உள்ளார். அப்போது சவ்வாஸ்புரம் தொடக்கக் வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே நடந்து சென்று கொண்டிருக்கும்போது அங்கு இருளில் மறைந்திருந்த கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணன் இருவரும் தாங்கள் வைத்திருந்த வாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வேல்முருகன் நண்பர்கள் அங்கிருந்து தப்பி ஓடி திருச்சுழி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தையை ஏற்காமல் தொடர்ந்து மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் மாரிமுத்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார் மூன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். திருச்சுழி காவல் நிலைய போலீசார் தலைமறைவாக உள்ள கருப்பசாமி மற்றும் மாரிக்கண்ணனை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை உள்ளதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.4
- தேனி மாவட்டத்தில் இன்று காலை முதல் வெப்ப சலனம் அதிகமாக இருந்தது மதியத்திற்கு மேல் தேனி மாவட்டம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இரவு 7.30 மணிக்கு திடீர் என்று மழை பெய்தது. மேலும் தேனி அல்லிநகரம் பொம்மையகவுண்டன்பட்டி அரண்மனைப்புதுர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஆங்காங்கே சாரல் மழை பெய்தது இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்1
- திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீ.பெரியப்பட்டி அருகே கோட்டை பூலாம்பட்டியில் தமிழக வெற்றி கழகம் வேட்பாளர் R.கதிரவனுக்கு விசில் சின்னத்தில் வாக்கு கேட்டு சேகரிப்பு ஈடுபாட்டில் நேற்று இரவு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்வானது அப்பகுதியில் வீடு வீடாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் இப்பகுதியை சேர்ந்த தவெக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.2
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளர் தமிழரசி ரவிக்குமார், மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 21 மற்றும் 22வது வார்டு பகுதிகளில் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிக்க வந்த அவரை, 21வது வார்டு கவுன்சிலர் செல்வகுமார் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றது சிறப்பாக அமைந்தது. வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களைச் சந்தித்த தமிழரசி ரவிக்குமார், கை சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த நிகழ்வில் நகர் செயலாளர் பொன்னுச்சாமி, நகர்மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத் தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்த அவர், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற உறுதியளித்தார்.1
- தேனியில் கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் தேர்தல் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது தேனியில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% வக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர் இதேபோல் தேனியில் உள்ள கனரா வங்கி சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதத்தில் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது தேனி மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரஞ்ஜித் சிங் மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் பயிற்சி மையத்தில் உள்ள மாணவர்கள் 100% வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இந்த கையெழுத்து இயக்கத்தில் மாணவர்கள் அனைவரும் பங்கேற்று 100% வாக்களிப்பது குறித்து கையெழுத்திட்டனர்.இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கனரா வங்கி பயிற்சி மையத்தின் மேலாளர் ரவிக்குமார் அலுவலர்கள் மாணவர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்1