எம்எல்ஏ அருள் மீது மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார்! சேலத்தில் பரபரப்பு சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கார்த்தியின் சட்டம் ஆலோசகர்கள், இன்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன் றை அளித்துள்ளனர். அதில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ அருள் இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்று பதிவாகியுள்ள கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்தும் கட்சியின் கொடியும் அடையாளங்களும் பாமக தலைவர் அன்புமணி தலைவராக உள்ள அக்கட்சியின் அடையாளங்கள் ஆகும். மேலும் அருள் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கும்படியும், பாட்டாளி மக்கள் கட்சி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அருள் ராமதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எம்எல்ஏ அருள் மீது மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார்! சேலத்தில் பரபரப்பு சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கார்த்தியின் சட்டம் ஆலோசகர்கள், இன்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன் றை அளித்துள்ளனர். அதில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ அருள் இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்று பதிவாகியுள்ள கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்தும் கட்சியின் கொடியும் அடையாளங்களும் பாமக தலைவர் அன்புமணி தலைவராக உள்ள அக்கட்சியின் அடையாளங்கள் ஆகும். மேலும் அருள் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கும்படியும், பாட்டாளி மக்கள் கட்சி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அருள் ராமதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் கார்த்தியின் சட்டம் ஆலோசகர்கள், இன்று சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன் றை அளித்துள்ளனர். அதில் பாமகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ அருள் இந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்று பதிவாகியுள்ள கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவர் பயன்படுத்தும் கட்சியின் கொடியும் அடையாளங்களும் பாமக தலைவர் அன்புமணி தலைவராக உள்ள அக்கட்சியின் அடையாளங்கள் ஆகும். மேலும் அருள் என்பவர் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி கட்சிக்கு பெரும் அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதால், அவர் மீது சட்டப்படி நடவடிக்கைகளை எடுக்கும்படியும், பாட்டாளி மக்கள் கட்சி நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அருள் ராமதாஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த புகார் மனு சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.1
- தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு. தர்மபுரி சட்டசபை தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க.வேட்பாளர் டாக்டர் வி.இளங்கோவன் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட தடங்கம் இந்திரா நகர் அவ்வை வழி ஒட்டப்பட்டி உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டு ஆரத்தி எடுத்தும் மேல தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்ப்பளித்தனர். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி முரசு சின்னத்திற்கு வாக்களிக்க பிரசாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் தேமுதிக நிர்வாகிகள் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.1
- கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்றது. வேட்பாளர் செல்வகுமார் அவர்களை மாவட்ட செயலாளர் அறிமுகப்படுத்தி கை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற செய்ய வேண்டும் என்றார்.1
- கிருஷ்ணகிரி லைன் கொள்ளையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளர் அறிமுக மற்றும் செயல்வீரர்கள் கூட்டம்நடைபெற்றது இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் செல்வகுமார்,பர்கூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மதியழகன் மற்றும் கூட்டணி கட்சி சார்ந்த மாவட்ட தலைவர்கள், மற்றும்நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.1
- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் திமுக வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் பிரச்சாரம் செய்யும் பொழுது பதிலடி கொடுத்துள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என திமுக வேட்பாளர் செந்தில்குமார் நேற்று பேசியிருக்கிறார். திண்டுக்கல்லிற்கு மருத்துவ கல்லூரியை கொண்டு வந்துள்ளேன் நான் என்ன பணிகள் செய்தேன் என மாநகராட்சி அலுவலகத்தில் உள்ளது கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் வெட்கம், மானம், சூடு, சொரணை, இல்லாத ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. திண்டுக்கல் கோட்டை என சொல்லி வருபவர்கள் வாங்கள் பார்த்து கொள்ளலாம் யார் கோட்டை என்று அதிமுக வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டி பகுதியில் காரசார பேச்சு.1
- அவிநாசி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் போட்டியிடுகிறார். அதனை முன்னிட்டு இன்று அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வடுகபாளையம் பிச்சாண்டம் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக ஆட்சியின்போது செய்த சாதனைகள் மத்திய பாஜகவின் திட்டங்கள் உள்ளிட்டவற்றைக் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- தமிழக வெற்றி கழகம் கிருஷ்ணகிரி மத்திய மாவட்டம் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் எம் லோகேஷ் அவர்களின் சார்பாக இரண்டாயிரத்து மேற்பட்டவர் மாற்றக் கட்சி இருந்த TVK இணைந்தார் இணைப்பு விழா1
- பென்னாகரம் அருகே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட 2பேர் கைது பென்னாகரம் அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்ட 2 பேரை மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பென்னாகரம் அடுத்த ரங்காபுரத்தில் சட்ட விரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் அடங்கிய குழுவினர் பென்னாகரம் போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அஞ்சேஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ரங்காபுரத்தில் சட்டவிரோதமாக கருவில் உள்ள குழந்தையின் பாலினம் ஆணா?பெண்ணா? என கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபடுவதாக தர்மபுரி மாவட்ட சுகாதார அலுவலர் மருத்துவர் ராஜேந்திரன் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ், சுகாதார ஆய்வாளர்கள் பசுபதி, ரவிந்தர், வசந்தவேலன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ குழுவினர் ரங்காபுரத்தில் செந்தில் என்பவரது வீட்டை சோதனை செய்தபோது கருவில் உள்ள குழந்தை ஆண, பெண்ணா என கண்டறியும் உபகரணங்கள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது. இதையெடுத்து, அங்கிருந்த மாத்திரைகள் மற்றும் உபகரணங்களை பறிமுதல் செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட ரங்காபுரம் செந்தில் மகள் பரிமளா, வயது 34டிப்ளமோ நர்சிங் படித்து விட்டு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கண்டறிந்து வந்துள்ளார். இவருக்கு ஆதனூர் கிராமத்தை சேர்ந்த சாந்தி, வயது47 என்பவரின் உதவியோடு கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பென்னாகரம் இன்ஸ்பெக்டர்பாபு சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் இருவரையும் கைது செய்த பென்னாகரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு பாலக்கோடு பகுதியில் கருக்கலைப்பு செய்ததாக இருவரையும் சுகாதாரத் துறையினர் பிடிக்க சென்றபோது பரிமளா தலைமுறைவாகி ஜாமினில் வெளிவந் உள்ளதாகவும் மீண்டும் பென்னாகரம் பகுதியில் கருக்கலைப்பில் ஈடுபட்ட போது பிடிபட்டதாகவும் மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தனர்.1