logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சினி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் மஞ்சினி செயலாளர் அழகனிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் சேலம் ஆத்தூர் மஞ்சினி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

8 hrs ago
user_Selva
Selva
ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
8 hrs ago

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட மஞ்சினி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் மஞ்சினி செயலாளர் அழகனிடம் மனு அளித்தனர். இந்த மனுவில் சேலம் ஆத்தூர் மஞ்சினி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது.

More news from Tamil Nadu and nearby areas
  • தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது. திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். இவ்விழாவில் ஸ்ரீ மாரியம்மன் சாமிக்கு மாலை 5 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழா கடைசி நாளன்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலில் வந்தடைந்தது. குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். தருமபுரி குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    1
    தருமபுரி நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் ஆண்டு திருவிழா பக்தர்களின் பக்தி கோஷங்கள் முழங்க வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மலர்கள், மின்விளக்குகளால் கோவில் வளாகம் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அர்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடத்தினர். பக்தர்கள் மஞ்சள் நீர், எலுமிச்சை மாலை ஆகியவற்றை அம்மனுக்கு சமர்பித்து வேண்டிக் கொண்டனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று பால் குடம் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குப்பாகவுண்டர் தெருவில் இருந்து கடைவீதி, பால் டிப்போ வழியாக மேளதாளங்களுடன் கோவிலை வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்ற நிலையில் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பி வழிந்தது.

திருவிழாவின் ஒரு பகுதியாக கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் வரிசையில் நின்று பிரசாதம் பெற்று சென்றனர். இவ்விழாவில் ஸ்ரீ மாரியம்மன் சாமிக்கு மாலை 5 மணி அளவில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. திருவிழா கடைசி நாளன்று அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலில் வந்தடைந்தது.

குப்பாகவுண்டர் தெரு பகுதி மட்டுமல்லாமல் தருமபுரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து அம்மனை தரிசனம் செய்து சென்றனர். தருமபுரி குப்பாகவுண்டர் தெரு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    9 hrs ago
  • தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் கிருஷ்ணன் பொன்னுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் தர்மன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது, பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
    1
    தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையத்தில் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 11-ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை சார்பில் தலைவர் முருகன் தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் ராணுவ வீரர் சங்க தலைவர் கிருஷ்ணன் பொன்னுசாமி, அரிமா சங்க நிர்வாகிகள் தர்மன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது, பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் கலாம் பசுமை நல அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
    user_SURENDIRAVARMA. C
    SURENDIRAVARMA. C
    Local News Reporter Palakkodu, Dharmapuri•
    27 min ago
  • திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை அருகே உள்ள வே.துறையூர், சிறுமருதூர் இடையே உள்ள கட்டிடத்தில் அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், வே. துறையூர் மதுரகாளியம்மன் கோவில் வழியாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். குறிப்பாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதால் தினந்தோறும் பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடன் அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை. இந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆகையால் மதுபான கடை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோடிக்கை மனு அளித்தனர். லால்குடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
    1
    திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி வட்டம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலை அருகே உள்ள வே.துறையூர், சிறுமருதூர் இடையே உள்ள கட்டிடத்தில் அரசு மதுபான கடை திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த பகுதியில் அரசு மதுபான கடை திறக்கப்பட்டால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேளாண் வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள், வே. துறையூர் மதுரகாளியம்மன் கோவில் வழியாக சமயபுரம் கோவிலுக்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

குறிப்பாக அந்தப் பகுதியில் தொடர்ந்து மது பிரியர்கள் அமர்ந்து மது அருந்துவதால் தினந்தோறும் பொதுமக்கள், பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பெண்களும், பள்ளி, கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகளும் மிகுந்த அச்சத்துடன் அந்த பாதையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார்கள் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் அந்தப் பகுதியில் புதிதாக அரசு மதுபான கடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. ஆகையால் மதுபான கடை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். கிராம மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோடிக்கை மனு அளித்தனர். லால்குடி அருகே புதிதாக மதுபானக்கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை மனுவை சமர்ப்பித்துள்ளனர்.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா தெக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா, தனது கணவர் சதீஷ்குமார் மீது துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு எதிராக மனு அளித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். கௌசல்யா தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யாவை மணந்து கொண்டார். ஆனால், கணவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரி தனமாக சுற்றித் திரிந்து வருவதாகவும், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, சதீஷ்குமார் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் தில்லை நகருக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அவர் பலமுறை கௌசல்யா மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், கௌசல்யா மற்றும் தனது மகள் என்றும் பாராமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கி துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக கௌசல்யா சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கௌசல்யா தனது தாய் வீடான தேக்குப்பட்டு கிராமத்திற்கு வந்து தனது பெற்றோருடன் நடந்த சம்பவங்களை எடுத்து கூறியுள்ளார். 27/07/2026 அன்று, தனது பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது கணவர் சதீஷ்குமார் வேறொரு திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது பெண் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
    1
    திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா தெக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கௌசல்யா, தனது கணவர் சதீஷ்குமார் மீது துன்புறுத்தல் மற்றும் வன்முறைக்கு எதிராக மனு அளித்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். கௌசல்யா தனியார் பள்ளியில் பணியாற்றி வருகிறார். சதீஷ்குமார் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கௌசல்யாவை மணந்து கொண்டார். ஆனால், கணவர் வேலைக்கு செல்லாமல் ஊதாரி தனமாக சுற்றித் திரிந்து வருவதாகவும், அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, சதீஷ்குமார் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் தில்லை நகருக்கு சென்று விட்டதாக தெரிகிறது. அவர் பலமுறை கௌசல்யா மற்றும் பிள்ளைகளை அடித்து துன்புறுத்தியுள்ளார். மேலும், கௌசல்யா மற்றும் தனது மகள் என்றும் பாராமல் பல்வேறு இன்னலுக்கு ஆளாக்கி துன்புறுத்தியுள்ளார். இது தொடர்பாக கௌசல்யா சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கௌசல்யா தனது தாய் வீடான தேக்குப்பட்டு கிராமத்திற்கு வந்து தனது பெற்றோருடன் நடந்த சம்பவங்களை எடுத்து கூறியுள்ளார். 27/07/2026 அன்று, தனது பெற்றோர் மற்றும் பிள்ளைகளுடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தனது கணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தனது கணவர் சதீஷ்குமார் வேறொரு திருமணம் செய்து கொண்டதாகவும், தற்போது பெண் குழந்தை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சென்னையில் குடியிருக்கும் வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மனுவைப் பெற்றுக் கொண்ட அலுவலர் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
    user_Flower
    Flower
    Fruit & Vegetable Wholesaler திருப்பத்தூர், திருப்பத்தூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • தமிழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டம் மாநகரம் பொன்மலைப் பகுதியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒரு இளம் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இந்த ஆதங்கத்தை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இளம் பெண்ணின் ஆதங்கம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    1
    தமிழகத்தின் திருச்சி தெற்கு மாவட்டம் மாநகரம் பொன்மலைப் பகுதியில் நடைபெற்ற கழக நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் ஒரு இளம் பெண் தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இந்த ஆதங்கத்தை திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் பல்வேறு கழக நிர்வாகிகள் பங்கேற்றனர். இளம் பெண்ணின் ஆதங்கம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தில் நஞ்சம்மாள் (45) மற்றும் அவரது தம்பி மாதேஷ் (40) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் வீட்டின் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக மாதேஷின் மனைவி கீதா, கூலிப்படையை ஏவி தனது கணவர் மற்றும் அவரது அக்காவை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, கீதா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் சரவணன், கீதா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஹரிராமச்சந்திரன், ஆறுமுகம், ரங்கநாதன், சந்துரு, சண்முகம் ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதியமான்கோட்டை போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் வழங்கினர்.
    1
    தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள எர்ரப்பட்டி கிராமத்தில் நஞ்சம்மாள் (45) மற்றும் அவரது தம்பி மாதேஷ் (40) ஆகியோர் கடந்த ஜூன் மாதம் வீட்டின் முன்பு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டைக் கொலை தொடர்பாக அதியமான்கோட்டை போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொத்து தகராறு காரணமாக மாதேஷின் மனைவி கீதா, கூலிப்படையை ஏவி தனது கணவர் மற்றும் அவரது அக்காவை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, கீதா உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலனின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் சரவணன், கீதா மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த ஹரிராமச்சந்திரன், ஆறுமுகம், ரங்கநாதன், சந்துரு, சண்முகம் ஆகிய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, அதியமான்கோட்டை போலீசார் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்து, அதற்கான உத்தரவு நகலை சிறையில் வழங்கினர்.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • இந்தி திணிப்பு மற்றும் மாநில கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னப்பா தமிழர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திற்கு மாறக்கூடாது எனவும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது எனவும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும், மேலும் கல்வி உரிமையை மாநிலத்திற்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    1
    இந்தி திணிப்பு மற்றும் மாநில கல்வி உரிமையை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து, தமிழ் வழி கல்வி இயக்கம் சார்பில், திருச்சி ஜங்சன் ரயில் நிலையம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் சின்னப்பா தமிழர் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பாளர்கள் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திற்கு மாறக்கூடாது எனவும், அரசு பள்ளிகளை மூடக்கூடாது எனவும், தமிழ்நாட்டு பல்கலைக்கழக துணைவேந்தர்களை தேர்வு செய்யும் உரிமையை மாநில அரசே ஏற்க வேண்டும் எனவும், மேலும் கல்வி உரிமையை மாநிலத்திற்கே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து கோவையை நோக்கி அதிவேகத்தில் சென்ற சொகுசு கார் ஒன்று, பொரத்தூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் மீது மோதியது. இந்த விபத்தில் சேகர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சேகருக்கு அம்சவள்ளி என்ற மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்த விபத்து குறித்து விரைந்து சென்ற பாலக்கோடு காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலையில் நடந்த சொகுசு கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சொகுசு கார் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    1
    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரிலிருந்து கோவையை நோக்கி அதிவேகத்தில் சென்ற சொகுசு கார் ஒன்று, பொரத்தூர் நெடுஞ்சாலையில் நடந்து சென்ற எருதுகூடஹள்ளி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சேகர் மீது மோதியது. இந்த விபத்தில் சேகர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சேகருக்கு அம்சவள்ளி என்ற மனைவி மற்றும் மூன்று பெண்குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். இந்த விபத்து குறித்து விரைந்து சென்ற பாலக்கோடு காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நெடுஞ்சாலையில் நடந்த சொகுசு கார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான சொகுசு கார் ஓட்டுநரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த விபத்து கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    user_Just Now Karimangalam
    Just Now Karimangalam
    Media company கரீமங்கலம், தருமபுரி, தமிழ்நாடு•
    7 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.