காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்களை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று காலை சருகணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்களை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று காலை சருகணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாட்டின் வளர்ச்சிக்காகச் சிறப்பாகப் பணியாற்றி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என ப. சிதம்பரம் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.இந்தப் பிரச்சாரத்தில் மாவட்ட நிர்வாகி அப்பச்சி சபாபதி, பூத் கமிட்டி தலைவர் சி. அருள்தாஸ் மற்றும் ஜமால் ஆகியோர் கலந்துகொண்டனர். பொன்னலி கோட்டை, நாகமதி, நகரமங்கலம், உறுதி கோட்டை, திராணி, கோபாலபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்களை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று காலை சருகணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டார். காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்களை ஆதரித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று காலை சருகணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்டார்.நாட்டின் வளர்ச்சிக்காகச் சிறப்பாகப் பணியாற்றி வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என ப. சிதம்பரம் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.இந்தப் பிரச்சாரத்தில் மாவட்ட நிர்வாகி அப்பச்சி சபாபதி, பூத் கமிட்டி தலைவர் சி. அருள்தாஸ் மற்றும் ஜமால் ஆகியோர் கலந்துகொண்டனர். பொன்னலி கோட்டை, நாகமதி, நகரமங்கலம், உறுதி கோட்டை, திராணி, கோபாலபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா,மற்றும் நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் , கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இத்திருக் கோயிலில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய சித்திரைத் திருவிழா வரும் மே 1-ஆம் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் மற்றும் பக்தர்களுக்கான ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- விருதுநகர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய இருக்கிறது. அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதிகளுக்குட்பட்ட திம்மன்பட்டி, சூரம்பட்டி, வலையங்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் , மல்லாங்கிணறு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். அப்போது காரியாபட்டி, வெற்றிலை முருகன் பட்டியை சேர்ந்த அதிமுகவினர் 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாலை முதல் சுவாமியும் அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் நான்கு மாசி வீதி உலா வருவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று இரவு நடைபெறும் வீதியுலாவை காண்பதற்காக நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பெண்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு சாரை சாரையாக நான்ஞமாசி வீதிகளை நோக்கி வந்த வண்ணமே உள்ளனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.1
- மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரங்குச்சியில் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் மனித நேயம் கட்சி வேட்பாளர் அப்துல் சமது அவர்களை ஆதரித்து செல்வகுமார் இன்று துவரங்குறிச்சி பூதநாயகம் கோவில் அருகில் உள்ள நாடக மேடையில் பேசும்போது பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் முத்தரைய சமுதாயத்தை அசிங்கப்படுத்திய ஏளனமாக பார்த்தார்கள் தமிழக முதல்வர் நல்லாட்சி நாயகன் சமூகநீதியுடன் பார்த்தார் இந்த நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கடந்து கூட அரசியலில் புறந்தள்ள பட்டு ஒதுக்கப்பட்டு முத்தரையர் சமுதாயத்தில் சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு தந்த தாய் உள்ளம் கொண்ட முதல்வர் தான் நம்ம முதல்வர் என்று செல்வகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்1
- தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய நடைபயணத்தில் கூட்டணியின் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர், : முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்.ப. சிதம்பரம், எம்.பி, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர்.கார்த்திசிதம்பரம், எம்.பி: திமுக கூட்டணியின் தேமுதிக, SDPI, மனித நேய மக்கள் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பிற கூட்டணி கட்சிகளின் மாவட்ட, நகர நிர்வாகிகள்.கலந்து கொண்டனர், தேவகோட்டை நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். கை சின்னத்திற்கு ஆதரவு: காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடி அவர்களுக்கு 'கை' சின்னத்தில் வாக்களிக்குமாறு மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கொடிகள் ஏந்தி தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டது, கூட்டணியின் பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.1