Shuru
Apke Nagar Ki App…
மணப்பாறையில் தவெகவினர் பிரச்சாரத்திற்கு ஒலிபெருக்கி பயன்படுத்த போலீசார் தடை: தவெகவினர் போராட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே பெரியார் சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒலிபெருக்கி வைக்க மணப்பாறை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர் . இதனால் தவெக நிர்வாகிகள் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இன்று மாலை நின்று போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.
Usha arun News
மணப்பாறையில் தவெகவினர் பிரச்சாரத்திற்கு ஒலிபெருக்கி பயன்படுத்த போலீசார் தடை: தவெகவினர் போராட்டம் மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே பெரியார் சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒலிபெருக்கி வைக்க மணப்பாறை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர் . இதனால் தவெக நிர்வாகிகள் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இன்று மாலை நின்று போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- குளித்தலையில் அண்ணா திமுக சார்பில் கடந்த 30 நாட்களாக வாக்குகள் சேகரிக்க உதவிய பொறுப்பாளர்களுக்கும் கழக நண்பர்களுக்கும் அனைவருக்கும் அண்ணா திமுக சார்பாக குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடும் எஸ் கருணாகரன் அவர்கள் நன்றிகளை தெரிவித்து குளித்தலை பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு பொதுமக்கள் இடையே அண்ணா திமுகவுக்கு அனைவரும் வாக்குகள் அளிக்க வேண்டும் என பிரச்சாரம் மேற்கொண்டார்1
- 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் சசிகலா மற்றும் மருத்துவர் அய்யா ராமதாஸ், ஸ்ரீ காந்திமதி அறிவித்த 120 தொகுதிகளில் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி இன்று பாரதிய இந்து மக்கள் கட்சி சார்பில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்வில், வே. மலைக்கோட்டை தர்மா தலைமையில் பால்குடம் எடுத்து, மாவிளக்கு இட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தீயணைப்பு நிலையத்தில் 20/04/2026 இன்று தீ தொண்டு நாள் வார விழாவை முன்னிட்டு ஆத்தூர் நிலைய அலுவலர் சு.கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கலந்து கொண்டு ஆத்தூர் சடையாண்டி கோயில் அருகில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா வாட்டர் கம்பெனியில் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி பணியாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு சார்ந்த துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய ரோடு ஷோ திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரை சென்றனர். வழி நெடுகிலும் உள்ளூர் வியாபாரிகள், மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தியாகிகள் பூங்கா அருகில் டிடிவி தினகரன் தனது மக்களுடனான சந்திப்பில் உரையின் போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஊழல் அதிகரித்து அடிப்படை வசதிகள் கூட சரியாக வழங்கப்படவில்லை, வெள்ளநீர் கால்வாய் போன்ற திட்டங்கள் தாமதமாகின்றன, நிதி பயன்பாடு தெளிவாக இல்லை என்பது குறித்தும் நீர் மேலாண்மை தொடர்பாக மேகதாது அணை மற்றும் கேரளாவில் புதிய அணை போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படவில்லை என்ற கவலை குறித்தும் , இது விவசாயத்திற்கும் குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது போன்ற அம்சங்களை வலியுறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்து கொண்டார். தங்களது அங்கீகரிக்கப்பட்ட "குக்கர்" சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர் .1
- மதுரை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் பூமிநாதன் அவர்கள் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை இன்று (ஏப்.21) மாலை முனிச்சாலை பகுதியில் நிறைவு செய்தார் . இக்கூட்டத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் மற்றும் மதிமுக எம்.பி துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- விருதுநகர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய இருக்கிறது. அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதிகளுக்குட்பட்ட திம்மன்பட்டி, சூரம்பட்டி, வலையங்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் , மல்லாங்கிணறு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். அப்போது காரியாபட்டி, வெற்றிலை முருகன் பட்டியை சேர்ந்த அதிமுகவினர் 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மணப்பாறை பேருந்து நிலையம் எதிரே பெரியார் சிலை அருகே பிரச்சாரம் செய்ய அனுமதி பெற்றிருந்தனர். இந்நிலையில் ஒலிபெருக்கி வைக்க மணப்பாறை காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தனர் . இதனால் தவெக நிர்வாகிகள் பேருந்து நிலையம் எதிரே உள்ள சாலையில் இன்று மாலை நின்று போலீசாருக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து பெரிதும் பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் போலிசார் நடத்திய பேச்சுவார்த்தையில் கலைந்து சென்றனர்.1