Shuru
Apke Nagar Ki App…
பொன்னம்பட்டியில் தவெக நிர்வாகிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பிரச்சாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Usha arun News
பொன்னம்பட்டியில் தவெக நிர்வாகிகள் பங்கேற்ற இருசக்கர வாகன பிரச்சாரம் திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஆர்.கதிரவனுக்கு ஆதரவாக இன்று மாலை மருங்காபுரியை அடுத்த பொன்னம்பட்டி பேரூராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. இந்த பிரச்சாரத்தில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- திண்டுக்கல் மாவட்டம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அய்யலூரில் இன்று அதிமுக வேட்பாளர் பரமசிவத்திற்கு பொதுமக்கள் பேராதரவு கொடுத்து அவரை வரவேற்று மாலை அணிவித்து மலர்கள் தூவி சிறப்பு செய்தனர். இந்நிகழ்வில் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் டிசி ராஜமோகன் தலைமையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.1
- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா,மற்றும் நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் , கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- *நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தவன் இல்லை. இந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானமும் வேதனையும் எல்லோருக்குமே நன்றி தெரியும். அவையெல்லாம் கடந்து வந்து இன்று மீண்டும் நான்காவது முறையாக உங்களிடம் வாக்கு சேகரிக்க வந்துள்ளேன் என்று கூறி சமுதாய மக்களிடையே வாக்கு சேகரித்த போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம். தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று நிறைவு கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் இன்று சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் சமுதாய சங்கங்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் அனைத்து செட்டியார் பேரவை சங்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பொழுது அவர் தான் போடிநாயக்கனூருக்கு 15 ஆண்டுகளாக செய்த பணிகளை கூறி வாக்கு சேகரித்தார். நான் என்றுமே அதிகாரத்தை கைப்பற்ற நினைத்ததில்லை மேலும் நான் கடந்த நான்கு ஆண்டுகளாக நான் பட்ட அவமானங்களும் வேதனைகளும் எல்லோரும் அறிவார்கள். அனைத்தையும் கடந்து வந்து இன்று திமுக ஸ்டாலின் அவர்களின் ஆதரவோடு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன் தாங்கள் எனக்கு வாக்குகள் வழங்க வேண்டும் என்று கூறினார். மேலும் போடிநாயக்கனூரில் கடந்த 1957 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தொடர்ந்து இரண்டு முறை எம்எல்ஏவாக பதவி வகித்தவரும் தமிழக கேரள எல்லைப் பகுதியில் அமைந்துள்ள போடி மெட்டு மலைச்சாலையை உருவாக்கி தந்த வருமான சுப்புராஜிற்கு மதுரை மையப்பகுதியில் சிலையை அமைத்து தரவும் நம் தேச பிதா உத்தமர் மகாத்மா காந்திக்கு போடிநாயக்கனூரில் சிலை இல்லாத நிலையில் அவருக்கும் சிலை அமைத்து தரவும் உரிய ஏற்பாடுகள் செய்வேன் என்றும் உறுதியளித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.1
- மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இத்திருக் கோயிலில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய சித்திரைத் திருவிழா வரும் மே 1-ஆம் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் மற்றும் பக்தர்களுக்கான ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- Post by G.thangarasu1
- youtube subscribe like video1
- தமிழகமெங்கும் வரும் (ஏப்ரல் 23ந்தேதி) சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பொதுமக்கள் எந்த வித அச்சமின்றி 100% வாக்களிக்க வேண்டும். இதனையடுத்து இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில் பிரச்சாரத்தை மாற்று வழிகளில் செய்தல் மற்றும் வாக்களிக்க பணம் பட்டுவாடா செய்தல்,பொருட்கள், மதுபானம் வழங்குதல் உள்ளிட்ட தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் போன்ற செயல்கள் நடப்பது தெரிய வந்தால் 1950, 8939146100, 100 ஆகிய எண்களில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என திருச்சி மாவட்டத்தில் உள்ள காவல் துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.1
- அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் பத்மநாதன் இன்று இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் இதில் போடி வீரபாண்டிய கட்டபொம்மன் சிலை பகுதியில் இருந்து , திருவள்ளுவர் சிலை, காவல் நிலையம், தேவர் சிலை உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் தனது ஆதரவாளர்களுடன் வீதி வீதியாக சென்று பொது மக்களை சந்தித்து தென்னந்தோப்பு சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்1
- Post by Tharmar. p1