Shuru
Apke Nagar Ki App…
Tharmar. p
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Tharmar. p1
- விருதுநகர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய இருக்கிறது. அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதிகளுக்குட்பட்ட திம்மன்பட்டி, சூரம்பட்டி, வலையங்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் , மல்லாங்கிணறு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். அப்போது காரியாபட்டி, வெற்றிலை முருகன் பட்டியை சேர்ந்த அதிமுகவினர் 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- **விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மல்லாங்கிணறு பகுதியில் உள்ள சூரம்பட்டி, திம்மன்பட்டி, வலையங்குளம், சந்திரன்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி, வி.வி.வி. நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார்.* *இந்த சந்திப்பின்போது கிராமமக்கள் ஆமோக வரவேற்பு அளித்தனர். மேலும், தங்கம் தென்னரசுவை வரவேற்க மக்கள் பெரும் திரளாகத் திரண்டு, பூங்கொத்துகள், மாலைகள் மற்றும் உற்சாகக் கரகோஷங்களுடன் எழுப்பி வரவேற்றனர்.* உட்பட்ட மல்லாங்கிணறு பகுதியில் உள்ள சூரம்பட்டி, திம்மன்பட்டி, வலையங்குளம், சந்திரன்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி, வி.வி.வி. நகர் மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு மக்களை நேரில் சந்தித்து வாக்குச் சேகரித்தார்.* *இந்த சந்திப்பின்போது கிராமமக்கள் ஆமோக வரவேற்பு அளித்தனர். மேலும், தங்கம் தென்னரசுவை வரவேற்க மக்கள் பெரும் திரளாகத் திரண்டு, பூங்கொத்துகள், மாலைகள் மற்றும் உற்சாகக் கரகோஷங்களுடன் எழுப்பி வரவேற்றனர்.*1
- மதுரை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் பூமிநாதன் அவர்கள் தனது இறுதி கட்ட பிரச்சாரத்தை இன்று (ஏப்.21) மாலை முனிச்சாலை பகுதியில் நிறைவு செய்தார் . இக்கூட்டத்தில் மதுரை எம்.பி வெங்கடேசன் மற்றும் மதிமுக எம்.பி துரை வைகோ ஆகியோர் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை ஆற்றினார்கள். இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.1
- மானாமதுரை அருள்மிகு ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாத சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இத்திருக் கோயிலில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கொடிமரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று தொடங்கிய சித்திரைத் திருவிழா வரும் மே 1-ஆம் தேதி வரை 11 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. தினமும் சிறப்பு பூஜைகள், உற்சவங்கள் மற்றும் பக்தர்களுக்கான ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை யூனியன் பேருந்து நிறுத்தம் அருகில் துவங்கிய ரோடு ஷோ திருப்பத்தூர் சாலை வழியாக தியாகிகள் பூங்கா வரை சென்றனர். வழி நெடுகிலும் உள்ளூர் வியாபாரிகள், மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். தியாகிகள் பூங்கா அருகில் டிடிவி தினகரன் தனது மக்களுடனான சந்திப்பில் உரையின் போது மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ஊழல் அதிகரித்து அடிப்படை வசதிகள் கூட சரியாக வழங்கப்படவில்லை, வெள்ளநீர் கால்வாய் போன்ற திட்டங்கள் தாமதமாகின்றன, நிதி பயன்பாடு தெளிவாக இல்லை என்பது குறித்தும் நீர் மேலாண்மை தொடர்பாக மேகதாது அணை மற்றும் கேரளாவில் புதிய அணை போன்ற பிரச்சினைகளில் தமிழகத்தின் நலன் பாதுகாக்கப்படவில்லை என்ற கவலை குறித்தும் , இது விவசாயத்திற்கும் குறிப்பாக காவேரி டெல்டா பகுதிகளை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது போன்ற அம்சங்களை வலியுறுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்து முடித்து கொண்டார். தங்களது அங்கீகரிக்கப்பட்ட "குக்கர்" சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர் .1
- தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் வீட்டின் அருகே ரூ.14லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வருகிற 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனிடையே பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் அதிமுக கூட்டணிக் கட்சியான அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பறக்கும் படைத்த தேர்தல் அதிகாரிகள் அவரது வீட்டை சோதனை செய்ய சென்றனர். அப்போது அவர்கள் வீட்டில் இருந்து ஒரு சூட்கேஸை வீட்டின் பின்புறம் வழியாக வெளியில் வீசினார்களாம். உடனே அதிகாரிகள் அதை கைப்பற்றி பார்த்த போது அதில் ரூ.14 லட்சம் பணம் இருந்துள்ளது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் வேட்பாளர் சுந்தர்ராஜ் மற்றும் அவரது மகள் வீடுகளில் அதிரடியாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஓட்டப்பிடாரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.1
- சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டானம் ரோடு பெரிய பள்ளிவாசலில், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எஸ். மாங்குடியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம், ஜமாத் நிர்வாகிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் கட்சியின் 'கை' சின்னத்திற்கு ஆதரவு கோரினார். இந்த சந்திப்பின் போது ஜமாத் தலைவர் மஹபூப் பாட்சா,மற்றும் நிர்வாகிகள்,ஜமாத்தார்கள் , கூட்டணி கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.1