logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

டெண்டர் முறைகேடு புகாரில் நடவடிக்கை: பாஜக வழக்கைத் தொடர்ந்து டெண்டர், பணி உத்தரவு ரத்து. தூத்துக்குடி, ஏப். 20: தூத்துக்குடி மாநகராட்சியில் ஏற்கனவே முடிக்கப்பட்ட பணிகளுக்காக மீண்டும் டெண்டர் விடப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட டெண்டர்களையும் அதற்கான பணி உத்தரவுகளையும் மாநகராட்சி ஆணையர் ரத்து செய்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் மதுபாலன் அவர்களால் கடந்த 2025 ஏப்ரல் 4ஆம் தேதி மின்னணு ஏல அறிவிப்பு வெளியிட்டது. இதில் மொத்தம் ஐந்து பணிகள் இடம்பெற்றிருந்தன. அவற்றில் 1, 2 மற்றும் 5ஆம் எண்களில் இடம்பெற்ற பணிகளாக பி.என்.டி. காலனி 12வது தெருவில் உள்ள விளையாட்டு மைதானம், மாநகராட்சி அலுவலகத்தின் பின்புற தார்சாலை மற்றும் கருப்பட்டி சொசைட்டி ஜங்ஷனில் உள்ள ஆயிரம் பிறை பூங்காவில் வேலி அமைத்து மின்விளக்குகள் நிறுவுதல் ஆகியவை அடங்கும். இதில் பி என் டி காலனியில் உள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கருப்பட்டி சொசைட்டி அருகில் உள்ள ஆயிரம் முறை பூங்காவில் உள்ள பணிகள் ஏற்கனவே முடிக்கப்பட்டு, 2025 பிப்ரவரி 17ஆம் தேதி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜூவன் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டதாகவும் அதேபோல் மாநகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலை அமைக்கும் பணியானது டெண்டர் விடுவதற்கு முன்பே தொடங்கப்பட்ட தாகவும் எனவே இந்த குறிப்பிட்ட வேலைக்கான டெண்டர்களை ரத்து செய்ய வேண்டும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு ரிட் வழக்கு தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவு பெற்றிருந்தார். இந்த வழக்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு மூத்த வழக்கறிஞரை ஆணையராக நியமித்து, குறிப்பிடப்பட்ட மூன்று இடங்களையும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதன்படி, கடந்த மார்ச் 15ஆம் தேதி தூத்துக்குடிக்கு வந்த ஆணையர், முறைகேடு நடந்ததாக கூறப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்து உயர் நீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்திருந்த நிலையில் தற்போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக உள்ள ப்ரியங்கா அவர்கள் சம்பந்தப்பட்ட டெண்டர்களையும், அதற்கான பணி உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். தற்பொழுது சட்டமன்றத் தேர்தல் பரப்புரையானது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் வேலையில் இந்த டெண்டர் ரத்து உத்தரவானது தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
2 hrs ago
f53e170e-ac94-4797-9dff-10f913f7bcd3

More news from தமிழ்நாடு and nearby areas
  • தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி கடற்கரை பூங்காவில் 'தேர்தல் திருவிழா' நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தத் தனித்துவமான முயற்சியைப் பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
    1
    தூத்துக்குடி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி கடற்கரை பூங்காவில் 'தேர்தல் திருவிழா' நடைபெற்றது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றி வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்திப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தத் தனித்துவமான முயற்சியைப் பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர்.
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    43 min ago
  • Post by தமிழ்நாடுஅரசியல்
    1
    Post by தமிழ்நாடுஅரசியல்
    user_தமிழ்நாடுஅரசியல்
    தமிழ்நாடுஅரசியல்
    Financial Analyst தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில் பள்ளி வாசல் வளாகத்தில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர் பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    3
    கயத்தாறில் ஹனீபா ஸீரா அறக்கட்டளை சார்பில்  பள்ளி வாசல் வளாகத்தில்  கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 9,10,11,12, மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி ஆலோசகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குறித்து  தமிழ் நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளர்  பொறியாளர் ஆர்.முஹம்மது அனஸ் அவர்களின் சிறப்புரையாற்றினார். இதில் மாண மாணவிகள் மேற்படிப்புகள் எதை தேர்ந்தெடுத்து படிக்கலாம் அதற்கான வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆற்றினார்.இந்த நிகழ்ச்சியிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வனர் ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில செயலாளர் பீரப்பா, மற்றும் ஆசிரியர்கள் பக்ரூதீன்,தீஷ்வான், நிர்வாகிகள் பக்கீரப்பா, ஜாஸ்ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
    user_பூல்பாண்டி
    பூல்பாண்டி
    Grain Shop கயத்தாறு, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    17 hrs ago
  • நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று காலை சேரன்மகாதேவி பேருந்து நிறுத்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்பாசமுத்திரம் காங்கிரஸ் வேட்பாளர் vb துரை இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஏராளமான திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்
    2
    நெல்லை மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்று காலை சேரன்மகாதேவி பேருந்து நிறுத்த பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அம்பாசமுத்திரம் காங்கிரஸ் வேட்பாளர் vb துரை இன்று திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஏராளமான திமுக கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    3 hrs ago
  • தென்காசி நகராட்சி பகுதியில் திமுக வேட்பாளரின் இறுதி கட்ட பிரச்சாரம் நடந்தது இதில் மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், வேட்பாளர் கலை கதிரவன் நகராட்சி சேர்மன் சாதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி நகராட்சி பகுதியில் திமுக வேட்பாளரின் இறுதி கட்ட பிரச்சாரம் நடந்தது இதில் மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், வேட்பாளர் கலை கதிரவன் நகராட்சி சேர்மன் சாதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    9 min ago
  • கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை தேர்தல் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இதனைத் துவக்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
    1
    கன்னியாகுமரி மாவட்டத்தில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை தேர்தல் விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இதனைத் துவக்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற இந்த ஓட்டம், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
    user_Magson jones
    Magson jones
    அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி, தமிழ்நாடு•
    7 hrs ago
  • விருதுநகர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய இருக்கிறது. அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதிகளுக்குட்பட்ட திம்மன்பட்டி, சூரம்பட்டி, வலையங்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் , மல்லாங்கிணறு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார். அப்போது காரியாபட்டி, வெற்றிலை முருகன் பட்டியை சேர்ந்த அதிமுகவினர் 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    விருதுநகர் மாவட்டம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் அமைச்சர் தங்கம் தென்னரசு தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் வருகின்ற 23ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணி உடன் தேர்தல் பரப்புரைகள் நிறைவடைய இருக்கிறது.
அதனால் அமைச்சர் தங்கம் தென்னரசு மல்லாங்கிணறு பகுதிகளுக்குட்பட்ட திம்மன்பட்டி, சூரம்பட்டி, வலையங்குளம், முடியனூர், கோவில்பட்டி, அயன்ரெட்டியாபட்டி பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரத்தில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
அப்போது திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் , மல்லாங்கிணறு பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டம் கொண்டு வந்தது குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார்.
அப்போது காரியாபட்டி, வெற்றிலை முருகன் பட்டியை சேர்ந்த அதிமுகவினர் 5-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். அவர்களை அமைச்சர் சால்வை அணிவித்து வரவேற்றார்.
உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_குமார்
    குமார்
    Kariapatti, Virudhunagar•
    47 min ago
  • திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱
    1
    திருச்சி அந்தோணியார் கோவிலில் முட்டி போட்டு தரிசனம் மக்கள் மத்தியில் அதிர்ச்சி😱😱😱
    user_பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    பொ.புஷ்பா தூத்துக்குடி விஷன்
    Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
    19 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.