logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

தூத்துக்குடி மாநகராட்சி வரலாறு தெரியாமல் பேசும் அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி கண்டனம் தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது தூத்துக்குடி மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது மாநகராட்சி மேயர் சேலத்தில் நடைபெற்ற இளைஞர் அணி மாநாட்டுக்கு சென்று விட்டார் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவில்லை ஆகையால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் தோற்கடிக்க வேண்டும் என்று அமைச்சர் நிர்மல்குமார் பேசினார். இந்நிலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பொியசாமி வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தூத்துக்குடியின் வரலாறு பற்றி அமைச்சர் நிர்மல் குமாருக்கு தெரியவில்லை தூத்துக்குடி மாநகராட்சியில் எத்தனை தெருக்கள். எத்தனை குறுக்கு சந்து உள்ளது என்று கூட தெரியாத அமைச்சர் நிர்மல்குமார் மாநகராட்சியை பற்றி பேச எந்த தகுதியும் கிடையாது மாநகராட்சி பகுதியில் வெள்ளம் ஏற்பட்டபோது அப்போதைய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் உத்தரவின் பேரில் உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு தூத்துக்குடி மாநகரிலேயே 15 நாட்களுக்கு மேல் தங்கி முகாமிட்டு மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நோில் பாா்வையிட்டு பணிகளை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொண்டார். அதுபோல் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் முகாமிட்டு வெள்ளப் பாதிப்பு பணிகளை பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் அனைத்து நடவடிக்கையும் நோில் எடுத்தனா். அதுபோல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மாவட்டம் முழுவதும் வெள்ளப்பாதிப்புக்குள்ளான இடங்களை பார்வையிட்டு அதற்கான நடவடிக்கையும் போா்கால அடிப்படையில் எடுத்து வந்தார். 2021ம் ஆண்டுக்கு முன்பு பலமுறை தூத்துக்குடி மாநகருக்கு வெள்ளம் வந்தபோது அப்போதெல்லாம் பொதுமக்கள் மழை வெள்ள நீரில் ஆறு மாதத்துக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் பரிதவித்து வந்தனர். அதுவும் குறிப்பாக அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில் தூத்துக்குடி மாநகரில் பலமுறை வெள்ளம் ஏற்பட்டது அந்த சாதாரண வெள்ளத்தில் கூட மக்கள் பல மாதம் பாதிக்கப்பட்டனர் ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 100 ஆண்டுகளுக்கு பின்பு ஏற்பட்ட பெரு வெள்ளம் தூத்துக்குடி மாநகரில் ஏற்பட்ட போது ஒரு மாதத்திற்குள் முழுவதும் சரி செய்யப்பட்டது இந்த வரலாறு கூட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை. திராவிட மாடல் ஆட்சியில் தான் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 4000 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது 53 பூங்காக்கள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்காக மட்டும் மூன்று மகளிர் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு பணிக்கு சாதாரண மக்கள் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் மாநகராட்சி சார்பில் படிப்பகம் அமைக்கப்பட்டுள்ளது இந்த படிப்பகத்தில் படித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கிப் பணிக்கு சென்றுள்ளனா். அதுபோல் அரசு பணிக்கும் பலா் சென்று உள்ளனர் என்பதை அமைச்சர் நிர்மல்குமார் உணர வேண்டும். மேலும் ஏழு குளங்கள் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது மாநகராட்சி பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டு தனியார் பள்ளிக்கு இணையாக அனைத்து வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளதால் தற்போது மாநகராட்சி அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அதுபோல திராவிட மாடல் ஆட்சி அமைவதற்கு முன்பு தூத்துக்குடி மாநகராட்சியில் கோடை காலத்தில் குடிநீருக்காக தினசரி அனைத்து பகுதிகளிலும் சாலை மறியல் நடைபெற்று வந்தது குடிநீர் என்பது அரியதாகவே கிடைத்தது ஆனால் திராவிட மாடல் ஆட்சி அமைந்த பின்பு தான் தூத்துக்குடி மாநகரில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு தற்போது 24 மணி நேரமும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என்பதை அமைச்சர் நிர்மல்குமார் உணர வேண்டும் உங்களுடன் மேடையில் இருந்த பல்வேறு கட்சிக்கு சென்று வந்த நபர்கள் கூறிய தவறான தகவல்களை நீங்கள் தெரிவிக்க வேண்டாம் முதலில் நீங்கள் மாநகராட்சி முழுவதும் சுற்றி வந்து பாருங்கள் பொதுமக்கள் நன்மை கருதி எந்த அளவுக்கு மாநகராட்சி சாா்பில் பணிகள் நடைபெற்று வளர்ச்சி அடைந்துள்ளனர் என்பதை உங்களுக்கு தெரிவிப்பார்கள். முதலில் நீங்கள் பொறுப்பு வகிக்கும் மின்சாரத் துறையில் பல்வேறு குறைகள் குறைபாடுகள் உள்ளது அதனை சரி செய்ய வேண்டும் உதாரணத்துக்கு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தமிழக வெற்றிக்கழக ஆட்சி அமைந்த பின்பு பாதிக்கப்பட்டுள்ளது அதனை முதலில் நீங்கள் சரி செய்ய வேண்டும் மின்சாரம் தட்டுப்பாடு இல்லாமல் அதற்கான பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்களை மின்சார வாரிய தொழிலாளராக எங்களை அறிவிக்க வேண்டும் என்று உங்களை சந்தித்து மனு அளித்த தொழிலாளர்களுக்கு எந்த வாக்குறுதியும் நீங்கள் கொடுக்கவில்லை ஏன் அதுபோல தெர்மல் நகர் அனல் மின் நிலையத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கழிவுகள் சாம்பல்கள் கடலில் கலப்பதால் மீன் வளம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது அது போல உப்பளமும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது இதனை எல்லாம் நீங்கள் சரி செய்து விட்டு மாநகராட்சி பற்றி பேசுவதற்கு நீங்கள் வாருங்கள் வரலாறை தெரிந்து கொண்டு முதலில் பேச வேண்டும் அதுபோல எனது தந்தைக்கு முரட்டு பக்தன் என்ற பெயர் எப்படி வந்தது என்று கூட அமைச்சர் நிர்மல்குமாருக்கு தெரியவில்லை ஏழு வயது முதல் ஒரே கட்சியில் இருந்து கட்சிக்காகவும் மாவட்டத்திற்காகவும் பல்வேறு வளர்ச்சிகளுக்காக பாடுபட்ட பலனாகத்தான் அப்போதைய தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான டாக்டர் கலைஞரால் முரட்டு பக்தன் என பட்டம் என் தந்தைக்கு கொடுக்கப்பட்டது உங்களைப் போல பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்த உங்களுக்கெல்லாம் அந்த வரலாறு பற்றி தெரியாது என அமைச்சர் நிர்மல்குமாருக்கு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார்.

6 hrs ago
user_மா.சுடலைமணி
மா.சுடலைமணி
Local News Reporter தூத்துக்குடி, தூத்துக்குடி, தமிழ்நாடு•
6 hrs ago
6450ae9b-fde3-4305-9f59-69bd06f10ca7

More news from தமிழ்நாடு and nearby areas
  • உப்பள தொழிலை காக்க போராட்டம் நடத்தினால் தூத்துக்குடி தாங்காது சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை
    1
    உப்பள தொழிலை காக்க

போராட்டம் நடத்தினால் தூத்துக்குடி தாங்காது

சுபாஷ் பண்ணையார் எச்சரிக்கை
    user_மா.கணேஷ்
    மா.கணேஷ்
    Photographer ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    1 hr ago
  • தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் அனைத்திலும் உள்ளூர் கட்டிட தொழிலாளர்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்கி உதவாதம் செய்ய வேண்டும்-புதியம்புத்தூரில் ஏ.ஐ.டி.யு சி கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான தொழிலாளர்சங்க 9 வது மாவட்ட மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாவட்ட மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் பேரணியாக பஜார் வழியாக வந்து புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு ஏ.ஐ.டி.யு.சி சங்க கொடி ஏற்றப்பட்டது. மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் துவக்க உரை ஆற்றினார். முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி சிறப்புரையாற்றினார். மாநாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் பகுதியில் பல தொழிற்சாலைகளை தொடங்கிட வேண்டும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் உதவித்தொகை 4 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்திட வேண்டும், பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் 8 லட்ச ரூபாய் உதவித்தொகையை 20 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக உயர்த்தி வழங்க வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிரசவ உதவித்தொகை மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்கிற கணக்கின்படி ஆறு மாத சம்பளம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும், திருமண உதவித் தொகையை ரூபாய் ஒரு லட்சம் உயர்த்த வேண்டும், 3 குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை என்பதை கைவிட்டு, தொழிலாளர்களின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி உதவித் தொகையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை வருடம் 5000 ரூபாயும், 10, 11, 12 படிப்பதற்கு ஆண் பெண் இரு குழந்தைகளுக்கும் வருடம் பத்தாயிரம் ரூபாய் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு முழு செலவுகளையும் நல வாரியமே ஏற்க அரசாணை வெளியிட வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூபாய் 5 லட்சம், பணியிட விபத்து இல்லாத வேறு வகையான விபத்து மரணத்திற்கு ரூபாய் 5 லட்சம், ஈமச்சடங்கு நிதி ரூபாய் 50,000 ஓய்வூதியம் ரூபாய் 6000 வழங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும். கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் பாதிக்கப்படும்போதும் சாதாரண காலங்களிலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் இ எஸ் ஐ மருத்துவ வசதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அதுவரை விபத்துக்கான சிகிச்சையை வாரியம் ஏற்க வேண்டும், விபத்து காலத்தில் சம்பள இழப்பு ஏற்படாமல் சம்பள நிவாரணம் வழங்க வேண்டும் மேற்கண்ட தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்புகளையும் நிறைவேற்றுவதற்காக கட்டிடம் கட்டுபவரிடம் வசூலிக்கப்படும் நலநிதி ஒரு சதம் என்பதை திட்ட மதிப்பில் 5 சதம் என்று உயர்த்தி வசூலிக்க வேண்டும் கட்டுமான தொழிலுக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச கூலி அரசாணைப்படி உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையில் அரசாணையை திருத்த வேண்டும் தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் அனைத்திலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்கி உதவாதம் செய்ய வேண்டும். மாதத்தில் எல்லா நாட்களும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள் தங்குமிட வசதிகள் தமிழ்நாட்டில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவர் மகாராஜன், துணைத் தலைவர் சண்முகராஜ், வைரவன் நிர்வாக குழு மேரி தங்கம், புஷ்பவல்லி, மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சேது ஆகியோர் புதிய நிர்வாகிகளாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் முருகன் மாநாட்டு பொருளாளர் பால்ராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன் ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் பாலமுருகன் பாபு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வன் சிபிஐ பச்சம்மாள் ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    1
    தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் அனைத்திலும் உள்ளூர் கட்டிட தொழிலாளர்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்கி உதவாதம் செய்ய வேண்டும்-புதியம்புத்தூரில் ஏ.ஐ.டி.யு
சி கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட  மாநாட்டில் தீர்மானம்
ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தில்
ஏ.ஐ.டி.யு.சி கட்டுமான தொழிலாளர்சங்க 9 வது மாவட்ட மாநாடு இன்று  நடைபெற்றது.
இந்த மாவட்ட மாநாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான கட்டிட தொழிலாளர்கள் மற்றும் ஏ.ஐ.டி.யு.சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 
முன்னதாக புதியம்புத்தூர் பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து ஏ.ஐ.டி.யு.சி சங்கத்தினர் பேரணியாக பஜார் வழியாக வந்து புதியம்புத்தூர் தனியார் திருமண மண்டபத்தை  வந்தடைந்தனர். தொடர்ந்து அங்கு ஏ.ஐ.டி.யு.சி சங்க கொடி  ஏற்றப்பட்டது.
மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் துவக்க  உரை ஆற்றினார். முன்னாள் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பெரியசாமி சிறப்புரையாற்றினார்.
மாநாட்டில்  படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் ஓட்டப்பிடாரம் மற்றும் புதியம்புத்தூர் பகுதியில் பல தொழிற்சாலைகளை  தொடங்கிட வேண்டும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற  தொழிலாளர்களுக்கு வீடு கட்டும் உதவித்தொகை 4 லட்சத்திலிருந்து 10 லட்சமாக உயர்த்திட வேண்டும், பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடையும் தொழிலாளர் குடும்பத்திற்கு வழங்கப்படும் 8 லட்ச ரூபாய் உதவித்தொகையை 20 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக உயர்த்தி வழங்க வேண்டும்.
பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பிரசவ உதவித்தொகை மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்கிற கணக்கின்படி ஆறு மாத சம்பளம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வழங்க வேண்டும், திருமண உதவித் தொகையை ரூபாய் ஒரு லட்சம் உயர்த்த வேண்டும், 3 குழந்தைகளுக்கு மட்டும் கல்வி உதவித்தொகை என்பதை கைவிட்டு, தொழிலாளர்களின் அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி உதவித் தொகையில் ஒன்றாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை வருடம் 5000 ரூபாயும், 10, 11, 12 படிப்பதற்கு ஆண் பெண் இரு குழந்தைகளுக்கும் வருடம் பத்தாயிரம் ரூபாய் மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு முழு செலவுகளையும் நல வாரியமே ஏற்க அரசாணை வெளியிட வேண்டும்.
இயற்கை மரணத்திற்கு ரூபாய் 5 லட்சம், பணியிட விபத்து இல்லாத வேறு வகையான விபத்து மரணத்திற்கு ரூபாய் 5 லட்சம், ஈமச்சடங்கு நிதி ரூபாய் 50,000 ஓய்வூதியம் ரூபாய் 6000 வழங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்கள் விபத்தில் பாதிக்கப்படும்போதும் சாதாரண காலங்களிலும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் வகையில் இ எஸ் ஐ மருத்துவ வசதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அதுவரை விபத்துக்கான சிகிச்சையை வாரியம் ஏற்க வேண்டும், விபத்து காலத்தில் சம்பள இழப்பு ஏற்படாமல் சம்பள நிவாரணம் வழங்க வேண்டும் மேற்கண்ட தொழிலாளர்களின் அனைத்து பாதுகாப்புகளையும் நிறைவேற்றுவதற்காக கட்டிடம் கட்டுபவரிடம் வசூலிக்கப்படும் நலநிதி ஒரு சதம் என்பதை திட்ட மதிப்பில் 5 சதம் என்று உயர்த்தி வசூலிக்க வேண்டும் கட்டுமான தொழிலுக்காக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குறைந்தபட்ச கூலி அரசாணைப்படி உதவியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும்.
மாதம் 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும் வகையில் அரசாணையை திருத்த வேண்டும் தனியார் மற்றும் அரசு கட்டுமான பணிகள் அனைத்திலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீத பணியிடங்கள் ஒதுக்கி உதவாதம் செய்ய வேண்டும். மாதத்தில் எல்லா நாட்களும் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு சட்டப்படியான பாதுகாப்புகள் தங்குமிட வசதிகள் தமிழ்நாட்டில்  கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
தொடர்ந்து புதிய நிர்வாகிகளாக  மாவட்டத் தலைவர் மகாராஜன், துணைத் தலைவர் சண்முகராஜ், வைரவன்  நிர்வாக குழு மேரி தங்கம், புஷ்பவல்லி, மாவட்ட பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட செயலாளர் சேது ஆகியோர் புதிய நிர்வாகிகளாக இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் முருகன் மாநாட்டு பொருளாளர் பால்ராஜ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கரும்பன் ஏ ஐ டி யூ சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணைச் செயலாளர் பாலமுருகன் பாபு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் செல்வன் சிபிஐ பச்சம்மாள்  ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    user_Pooraja V
    Pooraja V
    ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    4 hrs ago
  • திருச்செந்தூர் அருகே உடன்குடியில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து மீது போலீசார் வழக்கு பதிவு. திருச்செந்தூர் அருகே உடன்குடியில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து மீது போலீசார் வழக்கு பதிவு. திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் உடன்குடி பஜாரில் நகை பட்டறை தொழில் வைத்து நடத்தி வருகிறார். ஊரில் உள்ள உச்சிமாகாளி அம்மன், பட்டறை அம்மன் கோவில் கமிட்டி தலைவராகவும் உள்ளார்‌. மேலும், அந்த கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தை பயன்படுத்துவது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து என்பவருக்கும் ஊர் மக்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை கொடை நடத்துவது வழக்கம். தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் கட்டுமான பணிகள் சிறப்பாக நிறைவேற வேண்டி கடந்த 19.7.2026 ம் தேதி இரவு சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர். இதில் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். பூஜை நடைபெற்று கொண்டிருக்கும்போது ஜிபி முத்து தனது வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை நடத்துவதாக குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு கைகலப்பாக மாறியது. இதையடுத்து குலசேகரபட்டினம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 19/7/2026 அன்று கோவிலில் நடைபெற்ற பூஜையை, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மாந்திரீக பூஜை நடத்துவது போன்று கடந்த 29.7.2026 அன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகியது. இதையடுத்து உச்சினிமாகாளி அம்மன் கோவில் கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டணம் போலீசார், ஜிபி முத்து மீது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தீய எண்ணத்துடன் மத நம்பிக்கை அவமதிக்கும் வகையில் பொம்மைகளை வைத்து மாந்திரீக பூஜை செய்ததாக சமூக வலைதளங்களில் ஊர் மக்களை அவமதிக்கும் வகையிலும், ஊர் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த பிரச்சனை தொடர்பாக இந்த ஆண்டில் இதுவரை ஜிபி முத்து மீது மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    1
    திருச்செந்தூர் அருகே உடன்குடியில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து மீது போலீசார் வழக்கு பதிவு.
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து மீது போலீசார் வழக்கு பதிவு.
திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரம் பகுதியில் வசித்து வருபவர் பாலகிருஷ்ணன். இவர் உடன்குடி பஜாரில் நகை பட்டறை தொழில் வைத்து நடத்தி வருகிறார். 
ஊரில் உள்ள உச்சிமாகாளி அம்மன், பட்டறை அம்மன் கோவில் கமிட்டி தலைவராகவும் உள்ளார்‌. மேலும், அந்த கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தை பயன்படுத்துவது தொடர்பாக அதே ஊரை சேர்ந்த சமூக வலைதள பிரபலம் ஜிபி முத்து என்பவருக்கும் ஊர் மக்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. 
இந்த கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமை கொடை நடத்துவது வழக்கம். தற்போது கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் கட்டுமான பணிகள் சிறப்பாக நிறைவேற வேண்டி கடந்த 19.7.2026 ம் தேதி இரவு சிறப்பு பூஜை நடத்தியுள்ளனர். இதில் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். 
பூஜை நடைபெற்று கொண்டிருக்கும்போது ஜிபி முத்து தனது வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை நடத்துவதாக குற்றம் சாட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு கைகலப்பாக மாறியது. 
இதையடுத்து குலசேகரபட்டினம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 19/7/2026 அன்று கோவிலில் நடைபெற்ற  பூஜையை, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மாந்திரீக பூஜை நடத்துவது போன்று கடந்த 29.7.2026 அன்று சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரல் ஆகியது.
இதையடுத்து உச்சினிமாகாளி அம்மன் கோவில் கமிட்டி தலைவர் பாலகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டணம் போலீசார், ஜிபி முத்து மீது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தீய எண்ணத்துடன் மத நம்பிக்கை அவமதிக்கும் வகையில் பொம்மைகளை வைத்து மாந்திரீக பூஜை செய்ததாக சமூக வலைதளங்களில் ஊர் மக்களை அவமதிக்கும் வகையிலும், ஊர் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ வெளியிட்டதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த பிரச்சனை தொடர்பாக இந்த ஆண்டில் இதுவரை ஜிபி முத்து மீது மொத்தம் மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    user_திகழன்
    திகழன்
    Local News Reporter திருச்செந்தூர், தூத்துக்குடி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாஞ்சோலை முழுவதும் வனத்துறைக்கு கட்டுப்பாட்டு கீழ் வந்த அதை அடுத்து நேற்று மதியம் மாஞ்சோலைக்குச் செல்லும் பேருந்து மணிமுத்தாறு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    1
    நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்குச் செல்ல தொழிலாளர்களுக்கு அனுமதி மறுப்பு 
நெல்லை மாவட்டம் மாஞ்சோலைக்கு செல்ல தொழிலாளர்களுக்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாஞ்சோலை முழுவதும் வனத்துறைக்கு கட்டுப்பாட்டு கீழ் வந்த அதை அடுத்து நேற்று மதியம் மாஞ்சோலைக்குச் செல்லும் பேருந்து மணிமுத்தாறு பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு அங்கு இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
    user_S.Maria selvam
    S.Maria selvam
    சேரன்மகாதேவி, திருநெல்வேலி, தமிழ்நாடு•
    15 hrs ago
  • தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் வீ த லீடர்ஸ் சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியை மாவட்ட வீ த_க்ஷ லீடர்ஸ் தன்னார்வலர்கள் மற்றும் சுமு முருகன், மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    1
    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 
வீ த லீடர்ஸ் சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாணவர்கள் ஸ்கேட்டிங் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது 
நிகழ்ச்சியை மாவட்ட வீ த_க்ஷ லீடர்ஸ் தன்னார்வலர்கள் மற்றும் சுமு முருகன், மாடசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
    user_King
    King
    தென்காசி, தென்காசி, தமிழ்நாடு•
    10 hrs ago
  • மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர் பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    1
    மறைந்த விசிக நிர்வாகி உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருமாவளவன் 
மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் உடல் நலக்குறைவால் மறைந்த திருமங்கலம் சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர்  பழக்கடை சுப்ரமணியன் அவர்களின் திருவுடலுக்கு இன்று (ஆக.1) மதுரை வந்த விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார். உடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
    user_சு.இரத்தினவேல்
    சு.இரத்தினவேல்
    Madurai South, Tamil Nadu•
    7 hrs ago
  • ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து  பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு  ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    1
    ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் செல்லாத தனியார் பேருந்து 

பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு 

ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விடாமல் சென்ற தனியார்  பேருந்து பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஶ்ரீவில்லிபுத்தூர் நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜபாளையம் அருகே நக்கனேரியை சேர்ந்தவர் மாஸ்கோமணி.வழக்குறைஞர். இவர் கடந்த 2025 டிசம்பர் 19-ம் தேதி மதுரையில் இருந்து ஶ்ரீவில்லிபுத்தூருக்கு தனியார் பேருந்தில் பயணம் செய்தார். அவர் மதுரை பாண்டி கோயில் பேருந்து நிறுத்தத்தில் ஏறிய போது, ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது சர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும் என நடத்துனர் கூறியுள்ளார். பேருந்து நிலையத்திற்குள் ஏன் செல்லாது என மாஸ்கோ மணி கேட்டபோது, ரூல்ஸ் எல்லாம் பேசக்கூடாது எனக் கூறி பயணிகள் முன்னிலையில் நடத்துனர் அவமரியாதையாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாமல் சர்ச் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு பேருந்து ராஜபாளையம் சென்றது. இதுகுறித்து மாஸ்கோமணி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பேருந்து நிறுவனம் சார்பில் மதுரை பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்து ஸ்டீயரிங் பழுதானதால், ஓட்டுநர் சரி செய்து எடுத்து வர 20 நிமிடம் தாமதம் ஆனதால் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என மதுரையிலேயே நடத்துனர் கூறியதை பயணிகள் ஏற்றுக் கொண்டதாகவும், புகார்தாரர் வழக்குறைஞர் என்பதால் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளார். பேருந்து புறப்படும் போது ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையம் செல்லாது என அறிவித்து விட்டதால் இதை சேவை குறைபாடாக கருத முடியாது என வாதிடப்பட்டது. இந்த வழக்கில் பேருந்து முறையான வழித்தடங்களில் செல்லாமல், குறித்த நிறுத்தம் செல்லாமல் பயணியை இறக்கி விட்டது சேவை குறைபாடு என தெரிவித்த குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி ஆகியோர், பயணிக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க உத்தரவிட்டனர்.
    user_Prabakaran Praba
    Prabakaran Praba
    ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.