இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சின்னமனூர் பகுதியில் அமெரிக்க அதிபரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு சார்பில் அமெரிக்கா ஏகாதிபத்திய அதிபர் டிரம்பை கண்டித்தும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவே அமெரிக்க ராணு.வம் கைது செய்ததை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானா அருகே கட்சியின் ஒன்றிய செயலாளர் வே.ஜெய்ஹிந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.தமிழ் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.பரமேஷ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தோழர் சாம் வளவன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் சா.பாண்டியன் வழக்கறிஞர் மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் அ.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இரா.கதிரப்பன், எஸ்.ஈஸ்வரன், என்.பவுன்ராஜா, மற்றும் வைரமுத்து இருதயராஜ், ஸ்டீபன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் திரளாக பங்கேற்று அமெரிக்க அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பபட்டு கண்டன உரையாற்றினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சின்னமனூர் பகுதியில் அமெரிக்க அதிபரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேனி மாவட்ட குழு சார்பில் அமெரிக்கா ஏகாதிபத்திய அதிபர் டிரம்பை கண்டித்தும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவே அமெரிக்க ராணு.வம் கைது செய்ததை கண்டித்து தேனி மாவட்டம் சின்னமனூர் ரவுண்டானா அருகே கட்சியின் ஒன்றிய செயலாளர் வே.ஜெய்ஹிந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.தமிழ் பெருமாள், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.பரமேஷ்வரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தோழர் சாம் வளவன், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் தோழர் சா.பாண்டியன் வழக்கறிஞர் மணிகண்டன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் அ.முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இரா.கதிரப்பன், எஸ்.ஈஸ்வரன், என்.பவுன்ராஜா, மற்றும் வைரமுத்து இருதயராஜ், ஸ்டீபன் உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் திரளாக பங்கேற்று அமெரிக்க அதிபருக்கு எதிராக கோஷம் எழுப்பபட்டு கண்டன உரையாற்றினார்.
- போலீசாரால் கைது செய்யப்பட்ட காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது. திருப்பூரில் ஆக்கிரமிப்பில் இருந்ததாக குமரன் குன்று என்ற கோயில் இன்று அகற்றப்பட்டது. இதனைக் கண்டித்து அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவர் காயமடைந்து திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்ட போது காடேஸ்வரா சுப்பிரமணியம் காயமடைந்ததை கண்டித்து தேனியில் இன்று மாலை இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தேனி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த இந்து முன்னணியினர் நேரு சிலை மும்முனை சந்திப்பில் நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர் . இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை போலீசாரால் கைது செய்து அழைத்துச் சென்றனர்.1
- திமுக ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன .... கடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி இராமதாஸ் உரை..!1
- திண்டுக்கல் மாவட்டத்திற்கு முடிவுற்ற பல்வேறு நலத்திட்ட பணிகளை திருவாங்கி வைக்கவும் பலத்திட்ட நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்கவும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைவர் அலுவலகத்திற்கு வரவுள்ள நிலையில் ஏராளமான பயனாளிகள் குவிந்துள்ளனர்.1
- *மணப்பாறை அருகே புத்தாநத்தத்தில் கடை அடைப்பு போராட்டம்* திருச்சி மாவட்டம், மணப்பாறை மணப்பாறை அருகே புத்தாநத்தம்அருகே புத்தாநத்தம் ஊராட்சியை புத்தாநத்தம் மற்றும் இடையபட்டி என இரண்டு ஊராட்சியாக பிரித்து அரசாணை வெளியிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி மெய்யம்பட்டி, பாறைப்பட்டி, இடையபட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கணவாய்ப்பட்டி, கருஞ்சோலைப்பட்டி உள்ளிட்ட 18 கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில தினங்களுக்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து நேற்று புத்தாநத்தத்தில் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 100 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆட்டோ மற்றும் மினி சரக்கு வேன்களும் ஓடவில்லை. ஆனால் ஊராட்சியை பிரிப்பதற்கு புத்தாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும் ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால் ஊராட்சியை பிரிக்க ஆதரவு தெரிவிக்கும் ஒரு தரப்பினர் கடைகளை வழக்கம்போல் திறந்து வைத்துள்ளனர. எதிர்ப்பு தெரிவிக்கும் 18 கிராமமக்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊராட்சி பிரிப்பதால் பொருளாதார ரீதியாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்க நேரிடும் எனவே ஊராட்சியை பிரிக்கும் அரசாணையை ரத்து செய்யவேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியை இரண்டாக பிரிக்கும் ஆணையை ரத்து செய்யாவிட்டால் கருப்புக்கொடி போராட்டம் நடத்துவோம் எனவும், வரவுள்ள சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். கடையடைப்பு போர்ட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.1
- StartupTN தமிழ்நாடு அரசு தொடங்கிய StartupTN அமைப்பு மூலம், ஒவ்வொரு கிராமத்திலும் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்க இந்தத் திட்டம் நடத்தப்படுகிறது. 🎯 திட்டத்தின் நோக்கம் கிராமங்களில் உள்ள இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் தொழில் தொடங்க உதவி வேலை தேடுபவர்களை → வேலை கொடுப்பவர்களாக மாற்றுதல் உள்ளூர் வளங்களை பயன்படுத்தி நிலையான வருமானம் 👥 யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்? 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இளைஞர்கள் / பெண்கள் / SHG உறுப்பினர்கள் விவசாயிகள் & கைவினைஞர்கள் புதிய தொழில் யோசனை உள்ள யாரும் 🧑🏫 என்னென்ன உதவிகள் கிடைக்கும்? இலவச பயிற்சி & வழிகாட்டுதல் தொழில் யோசனை (Idea) தேர்வு & மேம்பாடு அரசு மானியம் / வங்கி கடன் தொடர்பான உதவி மார்க்கெட்டிங், டிஜிட்டல் விளம்பரம் Mentor support (அனுபவமுள்ள தொழில்முனைவோர்) 💼 எந்த வகை தொழில்கள்? 🥦 உணவு பதப்படுத்தல் (மில்க், மசாலா, சிறுதானியம்) 🐄 பால் & கால்நடை சார்ந்த தொழில்கள் 🧺 கைவினைப் பொருட்கள் 🌱 இயற்கை / ஆர்கானிக் விவசாயம் 🛍️ கிராம அளவிலான கடைகள் & சேவைகள் 💻 டிஜிட்டல் சேவைகள் (Online services, design, etc.) 📝 எப்படி விண்ணப்பிப்பது? StartupTN இணையதளத்தில் பதிவு உங்கள் தொழில் யோசனையை சமர்ப்பிக்கவும் மாவட்ட / கிராம அளவிலான பயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளவும் தேர்வு செய்யப்பட்டால் முழு ஆதரவு ⭐ இந்தத் திட்டத்தின் பலன் குறைந்த முதலீட்டில் தொழில் சொந்த ஊரிலேயே வேலை அரசின் நேரடி ஆதரவு நீண்டகால வருமானம் நீங்கள் விரும்பினால்: ₹50,000 – ₹5 லட்சம் முதலீட்டுக்கு ஏற்ற தொழில் யோசனைகள் பொள்ளாச்சி / கோயம்புத்தூர் பகுதிக்கு ஏற்ற கிராம தொழில்கள் விண்ணப்பம் எப்படி எழுதுவது என்று பயிற்சி அளிக்கிறார்கள்!1
- நமது கண்களே நம்மை நம்ப மறுக்கும்.1
- தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தென்காசி சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் நிவிதீத் ஆல்வா, சிறப்புரையாற்றினார் ஏஐசிசிடியூ உறுப்பினர் அசோக் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன், நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சிவஞானம், ஜெயபால், பால்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்1
- ஆண்டிபட்டி மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம், என்னை போன்று அரசியலில் சட்டமன்ற உறுப்பினராக விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி அரசுத்துறையில் ஆசிரியர், காவலர், வழக்கறிஞர் என்று உயர் பதவிகளில் வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டுமென ஆண்டிப்பட்டி அருகே அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ரங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் 53 மாணவ மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சேதுராம் தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பெருமாள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார் ஆண்டிப்பட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கலந்துகொண்டு 42 மாணவர்களுக்கும் 11 மாணவிகளுக்கும் என 53 பேர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாணவ மாணவிகளுக்கு வழங்கினார் நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் மாணவர்களுக்கு அரசியலே வேண்டாம் என்னை போன்று சட்டமன்ற உறுப்பினர் ஆவதை விரும்புவதை விட படிப்பில் கவனம் செலுத்தி ஆசிரியர் காவல் கண்கானிப்பாளர் வழக்கறிஞர் என அரசுத்துறையில் உயர் அதிகாரி பதவிகளுக்கு சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் விழாவில் மாணவ மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்1