logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

மும்முடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு: 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் நடவடிக்கை! 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், மும்முடி பகுதியில் அமைந்துள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப. இன்று (செப்-16) நேரில் சென்று ஆய்வு செய்தார். ​அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு மற்றும் தூய்மைப் பராமரிப்பு குறித்து நேரில் பார்வையிட்ட ஆட்சியர், பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளை எவ்வித தொய்வுமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.

1 hr ago
user_K Suresh
K Suresh
Insurance Agent கங்காவல்லி, சேலம், தமிழ்நாடு•
1 hr ago
73190d62-bb74-4bca-b94d-5315e8032e34

மும்முடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு: 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் நடவடிக்கை! 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், மும்முடி பகுதியில் அமைந்துள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இ.ஆ.ப. இன்று (செப்-16) நேரில் சென்று ஆய்வு செய்தார். ​அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருந்துகள் இருப்பு மற்றும் தூய்மைப் பராமரிப்பு குறித்து நேரில் பார்வையிட்ட ஆட்சியர், பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளை எவ்வித தொய்வுமின்றி உடனுக்குடன் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர். மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு
    1
    தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கிய எஸ்.ஐ சிவசக்தி மீது புகார்.நடவடிக்கை எடுக்காவிட்டால் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது சங்கத்தின் தலைவர் எச்சரிக்கை


ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஓட்டுநரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாகக் கூறி, தனியார் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில், பெரம்பலூர் செல்லும் தனியார் பேருந்தை வீரகனூர் பகுதியை சேர்ந்த ஓட்டுநர் அரவிந்தன் மற்றும் நடத்துனர் சதீஷ் ஆகியோர் இயக்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஏ.டி.சி. அதிகாரி வெங்கடேஷ், அந்த தனியார் பேருந்தை வழிமறித்ததாகவும், அரசு பேருந்து சென்ற பின்னரே தனியார் பேருந்தை இயக்க வேண்டும் என கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்று ஓட்டுனர் தெரிவித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  ஆத்தூர் நகர சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி வந்து உள்ளார், அப்போது ஓட்டுநர் அரவிந்தனை சரமாரியாக தாக்கி உள்ளார் என்று தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்கள்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பேருந்துகள் வெளியே செல்லும் வழித்தடத்தை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சப்-இன்ஸ்பெக்டர் சிவசக்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் சங்கத் தலைவர் கலைச்செல்வன் கூறுகையில், “எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் திடீரென ஓட்டுநரை தாக்கி உள்ளார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்று மாவட்ட எஸ் பி ககு புகார் அளிக்க உள்ளார் என்று தெரிவித்தனர்.
மேலும் சங்க நிர்வாகிகள் கூறுகையில், “எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் திடீரென தாக்கியதால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில்  தனியார் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்தூர் புதிய பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஒரு
    user_Selva
    Selva
    ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    1
    ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்!
ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    user_Kannapiran S
    Kannapiran S
    Local News Reporter ஆத்தூர், சேலம், தமிழ்நாடு•
    17 hrs ago
  • கல்வராயன் மலை சென்னிமலை பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, வெள்ளிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தொரடிப்பட்டு கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பின்னர், விநாயகர் சிலையை நீர்நிலையில் உரிய முறையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    1
    கல்வராயன் மலை சென்னிமலை  பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, வெள்ளிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தொரடிப்பட்டு கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பின்னர், விநாயகர் சிலையை நீர்நிலையில் உரிய முறையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    user_M.P.Palani Samy
    M.P.Palani Samy
    Kalvarayan Hills, Kallakurichi•
    18 min ago
  • ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்த அமைச்சர் பார்த்திபன்! தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற விதியின் 110 கீழ் அறிவித்தபடி பொதுமக்கள் இனி தங்களுடைய வாகன பதிவு சான்றிதழ் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை அதற்கு மாறாக டிஜிட்டல் சேவை மூலம் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து இன்று சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இந்த டிஜிட்டல் சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் லலீத் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    1
    ஓட்டுனர் உரிமம் டிஜிட்டல் சேவையை துவக்கி வைத்த அமைச்சர் பார்த்திபன்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்ற விதியின் 110 கீழ் அறிவித்தபடி பொதுமக்கள் இனி தங்களுடைய வாகன பதிவு சான்றிதழ் மற்றும் லைசன்ஸ் பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகங்களுக்கு செல்ல தேவை இல்லை அதற்கு மாறாக டிஜிட்டல் சேவை மூலம் தங்களுடைய ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவித்ததை தொடர்ந்து இன்று சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தில் இந்த டிஜிட்டல் சேவைகளை போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு ஆவணங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர்  லலீத் ஆதித்ய நீலம் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின. மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    1
    ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் குளம்போல் தேங்கிய மழைநீரால் வாரச்சந்தை வியாபாரிகள், பயணிகள் கடும் அவதி...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. நகரில் பெய்த மழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது.
அதே பகுதியில் வாரச்சந்தை நடைபெற்ற நிலையில், சந்தை வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு சந்தை பொருட்கள் மழைநீரில் மூழ்கின.
மேலும், பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீரால் பயணிகள், மாணவர்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர். மழைநீர் முறையாக வெளியேறுவதற்கான வசதி இல்லாததே தண்ணீர் தேங்குவதற்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... ராசிபுரம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....
    1
    ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை...

ராசிபுரம்
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் மிதமான மழை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.
ராசிபுரம், பட்டணம், வடுகம், நாமகிரிப்பேட்டை, குருசாமிபாளையம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
காலை முதலே வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பம் தணிந்து, ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதமான குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. மழை காரணமாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மிதமான மழை பெய்து வருகிறது....
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    23 hrs ago
  • அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். அரியலூர் கட்டுமான தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும். மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.
    1
    அரியலூர் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனஸ் ஐயாயிரம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம். 
அரியலூர் கட்டுமான தொழிலாளர்  உதவி ஆணையர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் 5,000 ஆயிரம் வழங்க வேண்டும்.
மணல் ஜல்லி கம்பி பொருட்களின் விலை உயர்வை ஏற்படுத்த வேண்டும். 
மாநில நல வாரியங்கள் அதிகாரங்கள் பறிக்கும் சமூக பாதுகாப்பு சட்ட தொகுப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கட்டுமான தொழிலாளர் கலந்து கொண்டனர்.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 57வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர்கள், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் அப்பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சியில் உரிமம் பெற்று தருவதாக கூறி பல்லாயிரம் ரூபாய் ஒவ்வொரு கடைகளிலும் வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு இதுவரை லைசென்ஸ் பெற்று தராமல் ஏமாற்றி வருகிறார் இது குறித்து அவரிடம் கேட்டால், என்னை பகைத்துக் கொண்டால் யாரும் கடை நடத்த முடியாது என மிரட்டி வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது எனவே மாநகராட்சி ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
    1
    வியாபாரிகளை மிரட்டும் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்! சேலத்தில் பரபரப்பு...
சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்திற்கு உட்பட்ட 57வது வார்டு பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடை உரிமையாளர்கள், மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர் அப்பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் மாநகராட்சியில் உரிமம் பெற்று தருவதாக கூறி பல்லாயிரம் ரூபாய் ஒவ்வொரு கடைகளிலும் வசூல் செய்துள்ளதாகவும், ஆனால் தங்களுக்கு இதுவரை லைசென்ஸ் பெற்று தராமல் ஏமாற்றி வருகிறார் இது குறித்து அவரிடம் கேட்டால், என்னை பகைத்துக் கொண்டால் யாரும் கடை நடத்த முடியாது என மிரட்டி வருவதால் தங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது எனவே மாநகராட்சி ஆணையாளர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட வியாபாரிகள் இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.