logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

கல்வராயன் மலை சென்னிமலை பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, வெள்ளிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தொரடிப்பட்டு கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பின்னர், விநாயகர் சிலையை நீர்நிலையில் உரிய முறையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

1 day ago
user_M.P.Palani Samy
M.P.Palani Samy
Kalvarayan Hills, Kallakurichi•
1 day ago

கல்வராயன் மலை சென்னிமலை பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, வெள்ளிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலை ஊர்வலம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, தொரடிப்பட்டு கிராம மக்கள் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலையை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர். பின்னர், விநாயகர் சிலையை நீர்நிலையில் உரிய முறையில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

More news from தமிழ்நாடு and nearby areas
  • சேலத்தில் துவங்கியது மாவீரன் மக்கள் கழகம் என்ற புதிய கட்சி! பாமகவிலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து, இன்று சேலத்தில் மாவீரன் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக கரூர் பாஸ்கரனும், பொது செயலாளராக தர்மபுரி சரவணன், பொருளாளர் திருச்சி லூர்துசாமி, ஆகிய நிர்வாகிகளை இன்று முறைப்படி தேர்ந்தெடுத்தனர். மேலும் கட்சியின் புதிய கொடியையும் அறிமுகம் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    1
    சேலத்தில் துவங்கியது மாவீரன் மக்கள் கழகம் என்ற புதிய கட்சி!
பாமகவிலிருந்து பிரிந்து சென்ற நிர்வாகிகள் ஒன்றிணைந்து, இன்று சேலத்தில் மாவீரன் மக்கள் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ளனர். இக்கட்சியின் தலைவராக கரூர் பாஸ்கரனும், பொது செயலாளராக தர்மபுரி சரவணன், பொருளாளர் திருச்சி லூர்துசாமி, ஆகிய நிர்வாகிகளை இன்று முறைப்படி தேர்ந்தெடுத்தனர். மேலும் கட்சியின் புதிய கொடியையும் அறிமுகம் செய்தனர், இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    1 hr ago
  • ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு... ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர். பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    1
    ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு...

ராசிபுரம் அருகே வீட்டின் அருகே புகுந்த 8 அடி நீள மலைப்பாம்பு – தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்பு...
ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியில் வீட்டின் அருகே புகுந்த சுமார் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை குள்ளாண்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவின்குமார். கொல்லிமலை அடிவாரப் பகுதியில் வசித்து வரும் இவரது வீட்டின் அருகே மலைப்பாம்பு ஒன்று புகுந்ததாக ராசிபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு நிலைய வீரர்கள், வீட்டின் அருகே பதுங்கியிருந்த மலைப்பாம்பை பாம்பு பிடிக்கும் இடுக்கி மூலம் லாவகமாக உயிருடன் மீட்டனர்.
பின்னர் மீட்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மீட்கப்பட்ட மலைப்பாம்பு சுமார் 8 அடி நீளம் கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
    user_ILAYARAJA
    ILAYARAJA
    Local News Reporter ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா... தூய்மை பணியாளர்களுக்கு சேலை, இனிப்பு வழங்கிய பாஜகவினர்..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா பாஜக சார்பில் நடைபெற்றது. பாஜக ஒன்றிய செயலாளர் விஜய சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் பணியாற்றி வரும் 15-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    1
    பிரதமர் மோடியின் 76-வது பிறந்தநாள் விழா...
தூய்மை பணியாளர்களுக்கு சேலை, இனிப்பு வழங்கிய பாஜகவினர்.....
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் பகுதியில், பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாள் விழா பாஜக சார்பில் நடைபெற்றது.
பாஜக ஒன்றிய செயலாளர் விஜய சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் பணியாற்றி வரும் 15-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு சேலைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    user_Aravinth
    Aravinth
    ராசிபுரம், நாமக்கல், தமிழ்நாடு•
    3 hrs ago
  • மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, மாவட்டத்தில் குடிநீர், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் 2 முதல் 3 ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
    1
    மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி
மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி
தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தினர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, மாவட்டத்தில் குடிநீர், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார்.
மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் 2 முதல் 3 ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார்.
மேலும், தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
    user_DPI EXPRESS NEWS
    DPI EXPRESS NEWS
    Psychologist Dharmapuri, Tamil Nadu•
    1 hr ago
  • ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி.ஏரியை மீட்க அதிரடி உத்தரவு பொதுமக்கள் மகிழ்ச்சி அரியலூர் - ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி. : முற்றிலும் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரியை மீட்க அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவு. அரியலூர் மாவட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சன்னாசிநல்லூர் கிராமத்தில் 125 நாள் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கிருந்த 'செரலான் ஏரி' முழுதும் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்ட ஆட்சியர் ந.மிருணாளினி கடும் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர், சர்வேயர் ஆகியோரை அழைத்து செரலான் ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? என்கின்ற விவரத்தை ஆட்சியர் ந.மிருணாளினி கேட்டு கோப்புகளை பார்வையிட்டார். சுமார் 7.30 ஏக்கர் பரப்பளவு உள்ள செரலான் ஏரி, சுமார் 6 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த ஆக்கிரமிப்பை எப்படி அனுமதித்தீர்கள்? இதுவரை ஏன் அகற்றாமல் உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய ஆட்சியர், உடனடியாக ஏரி ஆக்கிரமிப்பை மீட்க உத்தரவிட்டார். அப்போது ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பயிர் சாகுபடி செய்திருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். தரிசாக உள்ள இடங்களை உடனடியாக மீட்கவும், பயிர் செய்த இடங்களை சாகுபடி முடிந்தவுடன் மீட்க ஆட்சியர் ந.மிருணாளினி உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார். ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஏரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், உடனடியாக ஏரியை மீட்டு நீராதாணத்தை காக்க உத்தரவிட்டது செந்துறை சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
    1
    ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி.ஏரியை மீட்க அதிரடி உத்தரவு பொதுமக்கள் மகிழ்ச்சி 
அரியலூர் - ஏரியை காணவில்லை மாவட்ட ஆட்சியர் அதிர்ச்சி. 
: முற்றிலும் ஆக்கிரமிப்பில் இருந்த ஏரியை மீட்க அலுவலர்களுக்கு உடனடியாக உத்தரவு.
அரியலூர் மாவட்டத்தில் 
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்”
திட்டத்தின் கீழ் இரண்டாவது நாளாக 
செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சன்னாசிநல்லூர் கிராமத்தில் 125 நாள் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய சென்றபோது, அங்கிருந்த 'செரலான் ஏரி' முழுதும் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்ட ஆட்சியர் ந.மிருணாளினி கடும் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக வருவாய்த்துறையினர், வட்டார வளர்ச்சி அலுவலர், சர்வேயர் ஆகியோரை அழைத்து செரலான் ஏரியின் மொத்த பரப்பளவு எவ்வளவு? என்கின்ற விவரத்தை ஆட்சியர் ந.மிருணாளினி கேட்டு கோப்புகளை பார்வையிட்டார்.
சுமார் 7.30 ஏக்கர் பரப்பளவு உள்ள செரலான் ஏரி, சுமார் 6 ஏக்கர் அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இந்த ஆக்கிரமிப்பை எப்படி அனுமதித்தீர்கள்? இதுவரை ஏன் அகற்றாமல் உள்ளீர்கள்? என கேள்வி எழுப்பிய ஆட்சியர், உடனடியாக ஏரி ஆக்கிரமிப்பை மீட்க உத்தரவிட்டார். 
அப்போது ஒரு சிலர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் பயிர் சாகுபடி செய்திருப்பதாக அரசு அலுவலர்கள் தெரிவித்தனர். தரிசாக உள்ள இடங்களை உடனடியாக மீட்கவும், பயிர் செய்த இடங்களை சாகுபடி முடிந்தவுடன் மீட்க ஆட்சியர் ந.மிருணாளினி உத்தரவிட்டு புறப்பட்டு சென்றார்.  
ஆய்வுக்கு சென்ற இடத்தில் ஏரியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்த ஆட்சியர், உடனடியாக ஏரியை மீட்டு நீராதாணத்தை காக்க உத்தரவிட்டது செந்துறை சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
    user_Milkaj
    Milkaj
    அரியலூர், அரியலூர், தமிழ்நாடு•
    3 hrs ago
  • தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக சௌமியா அன்புமணி பேட்டி தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
    1
    தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக சௌமியா அன்புமணி பேட்டி
தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.
    user_G Krishnan
    G Krishnan
    பத்திரிகையாளர் பாலக்கோடு, தருமபுரி, தமிழ்நாடு•
    11 hrs ago
  • வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர்  பாமகவில்  இணைந்தனர்.
    1
    வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் 

பாமகவில்  இணைந்தனர்.
    user_Periyasamy
    Periyasamy
    பத்திரிகையாளர் Dharmapuri, Tamil Nadu•
    22 hrs ago
  • சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்! சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அடுத்துள்ள ராக்கிப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சிலர் பட்டியலின மக்களை உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதியில் உள்ள சிலர் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சாலையில் அமர்ந்து பெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சை தொடர்ந்து சமாதானம் அடைந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு ஆட்சியரிடம் சென்று முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பில் ஏற்பட்டது.
    1
    சேலம் ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்!
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி அடுத்துள்ள ராக்கிப்பட்டி பகுதியில் ஏராளமான பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே உள்ள சிலர் பட்டியலின மக்களை உடனடியாக வீடுகளை காலி செய்து வெளியேற வேண்டும் இல்லையென்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அப்பகுதியில் உள்ள சிலர் தங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாகவும் இதற்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இன்று அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் சாலையில் அமர்ந்து பெரும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய சமாதான பேச்சை தொடர்ந்து சமாதானம் அடைந்த மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு ஆட்சியரிடம் சென்று முறையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சி அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பில் ஏற்பட்டது.
    user_Rajendran
    Rajendran
    salem mail & City mail Reporter சேலம், சேலம், தமிழ்நாடு•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.