Shuru
Apke Nagar Ki App…
🌙✨ பிறை நிலவுக்கு அருகே ஜொலித்த அரிய வானியல் நிகழ்வு #highlights #BreakingNews#chennai #BreakingNews #வானியல்நிகழ்வு #பிறைநிலவு #வெள்ளிகிரகம் #சுக்கிரன் #அரியநிகழ்வு #வானியல் #புகைப்படம் #சமூகவைரல் 🌙✨ பிறை நிலவுக்கு அருகே ஜொலித்த அரிய வானியல் நிகழ்வு #highlights #BreakingNews#chennai #BreakingNews #வானியல்நிகழ்வு #பிறைநிலவு #வெள்ளிகிரகம் #சுக்கிரன் #அரியநிகழ்வு #வானியல் #புகைப்படம் #சமூகவைரல்
David
🌙✨ பிறை நிலவுக்கு அருகே ஜொலித்த அரிய வானியல் நிகழ்வு #highlights #BreakingNews#chennai #BreakingNews #வானியல்நிகழ்வு #பிறைநிலவு #வெள்ளிகிரகம் #சுக்கிரன் #அரியநிகழ்வு #வானியல் #புகைப்படம் #சமூகவைரல் 🌙✨ பிறை நிலவுக்கு அருகே ஜொலித்த அரிய வானியல் நிகழ்வு #highlights #BreakingNews#chennai #BreakingNews #வானியல்நிகழ்வு #பிறைநிலவு #வெள்ளிகிரகம் #சுக்கிரன் #அரியநிகழ்வு #வானியல் #புகைப்படம் #சமூகவைரல்
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆத்தூரில் தங்க கவசத்தில் அருள் பாலித்த வெள்ளப் பிள்ளையார். சேலம் மாவட்டத்தில் உள்ள, ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோயிலில் இன்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் முன்னதாக பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கவசம் சாற்றப்பட்டு, பூஜைகள் வெகு விமர்சியாக நடைபெற்றது. பின்னர் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு, பக்தர்களுக்கு தங்க கவசத்தில் வெள்ளப் பிள்ளையார் அருள் பாலித்து வருகிறார். விநாயகர் சதுர்த்தி என்பதால் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் அதிகரித்து வருகிறது.2
- டிப்பர் லாரியிலிருந்து கொட்டப்பட்ட மண் பொதுமக்கள் அவதி அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் வெங்கட கிருஷ்ணாபுரம் அருகே சாலையில் மணல் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தில் இருந்து மண் சாலையில் கொட்டிச் சென்றுள்ளது. ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் இந்த சாலையில் பயணித்தே அரியலூரை வந்தடைய முடியும். இந்நிலையில் சாலையில் கொட்டிக் கிடந்த மண்ணைக் கடந்து செல்லும் கனரக வாகனங்களின் வேகத்தினால் அதிலிருந்து எழும் மண் துகள்கள் இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் அவதிக்குள்ளாக்கியது. கண்களில் வந்து விழுந்த மண் துகள்களால் வாகனத்தை இயக்க முடியாது பொதுமக்கள் அவதியுற்றனர். உடனடியாக சாலையில் கொட்டிக் கிடக்கும் இந்த மண்ணை அகற்றி வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக பயணிக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.1
- உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அமைத்து தருவதாக மாநில துணைத்தலைவர் உறுதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி பகுதியில் இரவில் மர்ம நபர்கள் அண்ணல் அம்பேத்கர் சிலையை உடைத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவரும் நந்தனார் கல்வி கழக தலைவருமான டாக்டர் கே ஐ மணிரத்தினம் அவர்கள் மண் சிலைக்கு பதிலாக வெண்கல சிலை அதே இடத்தில் நிறுவி தருவதாக உறுதியளித்துள்ளார்1
- கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்கம்! கடலூர் மாவட்டத்தில் 2026–27ஆம் ஆண்டுக்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாம் தொடக்க விழா புவனகிரி அருகே உள்ள ஆயிப்பேட்டை ஊராட்சியில் நடைபெற்றது. 2026–27ஆம் ஆண்டிற்கான சிறப்பு கால்நடை சுகாதார முகாமை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், சிறந்த கால்நடைகளுக்கு பரிசுகளும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி செலுத்துதல், குடற்புழு நீக்கம், சினை பரிசோதனை, மாடுகள் மற்றும் ஆடுகளுக்கு சிறந்த சிகிச்சை வழங்குதல், தாது உப்பு கலவை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பு, சிறு அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. கால்நடைகளில் ஏற்படும் தோல் கழலை நோய் (Lumpy Skin Disease–LSD) மற்றும் கோமாரி நோய் தடுப்பு முறைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வும் வழங்கப்பட்டது. இந்த முகாமின் மூலம் கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும் அதிகாரிகள் விளக்கமளித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்களின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு துறையினர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். கால்நடைகளை நோய்களில் இருந்து பாதுகாத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இதுபோன்ற சிறப்பு கால்நடை சுகாதார முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.1
- அதிமுக மாவட்ட செயலாளர் சிதம்பரத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு சிதம்பரம் வண்டி கேட்டில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.1
- மாற்றுக் கட்சியில் இணையும் முன்னாள் பாமக எம்எல்ஏ அருள்! சேலத்தில் பரபரப்பு... சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதி பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், தான் விரைவில் அனைவரும் வியக்கத்தக்க வகையில் மிகப்பெரிய அரசியல் இயக்கத்தில் சேர்ந்து அரசியல் பணி செய்ய உள்ளதாகவும், தன்னோடு இது நாள் வரை தோளோடு தோள் கொடுத்து பயணித்த அனைவருக்கும் பதவியை பெற்று தருவேன், விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும், தேர்தலுக்கு இன்னும் பல காலங்கள் உள்ளதால் பொறுமையுடன் தனது அறிவிப்பை அனைவரும் இயக்கத்தக்க வகையில் வெளியிடுவேன் என முன்னாள் எம்எல்ஏ அருள் இன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார்.1
- தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் 118-வது அண்ணா பிறந்தநாள் விழா அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டது. தர்மபுரி திமுக கட்சியின் சார்பில் பேருந்து நிலையம் அருகே இருந்து ஊர்வலமாக தர்மபுரி 4 ரோடு பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு நகர செயலாளர்கள் நாட்டான் மாது .கௌதம். தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்பு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். தடங்கம் சுப்பிரமணி முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மசெல்வன். மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர் என் பி பெரியண்ண ஏ எஸ் சண்முகம் இளரணி துனை அமைப்பாளர்கள் அசோகன் . வழக்கறிஞர் அசோக் குமார். ஒன்றிய செயலாளர் காவேரி கோட்டைகோவில் அறங்காவலர் குழு தலைவர். சுருளிராஜன். நகர மன்ற உறுப்பினர். மாதேஸ்வரன். நிர்வாகிகள் முல்லைவேந்தன். வெல்டிங் ராஜா. மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.1
- சேலம் ஜான்சன் நகரில் விநாயகர் சதுர்த்தி விழா! தவெக மாநில மகளிர் அணி நிர்வாகி பங்கேற்பு..... சேலம் ஜான்சன் நகர் எட்டாவது கிழக்கு வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கணபதி ஆலயத்தில், இன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மகளிர் அணி இணை செயலாளர் பிரியா விஜய் தமிழன் பார்த்திபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வணங்கினர்.2