Shuru
Apke Nagar Ki App…
“கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇
A.GUNASEELAN reporter 📰TN31
“கடலூரில் இளநீர் குடித்தால் கேன்சரா?” 😳 சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசிய கருத்து வைரல்! கடலூர் மாவட்டத்தில் தொழிற்சாலைகள் மற்றும் நீர்நிலைகள் தொடர்பாக சௌமியா அன்புமணி சட்டப்பேரவையில் முன்வைத்த கருத்துகள் கவனம் பெற்றுள்ளன. “இளநீர் குடித்தால் கூட பாதிப்பு ஏற்படும் சூழல்” என அவர் பேசியதாக கூறப்படும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த விவகாரம் குறித்து உங்கள் கருத்து என்ன? 👇
More news from தமிழ்நாடு and nearby areas
- ஆத்தூரில் பார்வையாளர்களைக் கவர்ந்த மாணவிகளின் பரதநாட்டியம்! ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட, அருள்மிகு வெள்ளப் பிள்ளையார் திருக்கோவிலில் நேற்று (செப் 14) விநாயகர் சதுர்த்தி விழாவினை ஒட்டி, கோயில் நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சிவ கால கேஸ்தரா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் ஆடிய பரத நடனம் பார்ப்போரைக் கவர்ந்தது. சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் நின்றவாறு, நடனத்தைக் கண்டு களித்து மாணவிகளை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். இதனால் கோவில் சன்னதியில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.1
- காஞ்சிபுரம் : மானாம்பதி ஊராட்சியில் நியாயவிலை கடையில் மாவட்ட ஆட்சியர் சினேகா ஆய்வு.! காஞ்சிபுரம் மாவட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் உள்ள நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் சினேகா அவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.1
- காஞ்சிபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி ரங்கசாமி குளம் அருகில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் 36 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இன்று மூன்றாம் நாள் விநாயகர் திருமேனி விசர்ஜன ஊர்வலம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டம் இந்து முன்னணி சார்பில் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது2
- குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி ஆர்ப்பாட்டம். திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கு,வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு எனக் கோரி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. லால்குடி அருகே சிறுமயங்குடி ஊராட்சியில் வசிக்கும் பொது மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழக்கு, வீடு இல்லாத நபர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கு மற்றும் பொது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை செய்து கொடுக்க வேண்டும் என தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் லால்குடி வட்டக் குழு செயலாளர் ராஜவேல் தலைமையில் லால்குடி ரவுண்டானாவில் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் லால்குடி ரவுண்டானாவில் இருந்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியர் அவர்களை சந்தித்து தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுமென பொதுமக்கள் முன்னிலையில் வட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் உங்களது கோரிக்கைகளை செய்து கொடுக்க முயற்சி செய்கிறேன் என தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக ராணிப்பேட்டை தொகுதி பாமக சமூக ஊடக பேரவை பொருப்பாளர் சி விநாயகம் அவர்கள்1
- தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் 3 மணி நேரமாக சாலை மறியல் தலையாமழை கிராமத்தில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்: 3மணி நேரமாக கொளுத்தும் வெயிலில் சாலையில் அமர்ந்து போராட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தலையாமழை கிராமத்தில் அடிப்படை வசதியான குடிநீர் கேட்டு, 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தலையாமழை கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் 'ஜல் ஜீவன்' திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குழாய் இணைப்புகள் அமைக்கப்பட்டும், கடந்த 6 மாதங்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட விநியோகிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரி மூலம் வழங்கப்படும் தண்ணீரும் போதுமானதாக இல்லை எனவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். குடிநீருக்காக சுமார் 5 கிலோமீட்டர் தூரமுள்ள சோழவித்தியாபுரம் கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இருசக்கர வாகனம் மற்றும் சைக்கிள் வைத்திருப்பவர்கள் மட்டுமே சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலையில், முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், வெளி ஊர்களுக்கு சென்று தண்ணீர் பிடிப்பதால் கிராமங்களுக்கிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. குளிப்பதற்கும் குடிப்பதற்கும் போதிய தண்ணீர் இன்றி பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பெரும் துயரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிராமத்துப் பெண்கள், நாகப்பட்டினம் - மேலப்பிடாகை உட்சாலையில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து, காலி குடங்களை தலையில் சுமந்தவாறு சாலையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்தது. சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் உடனடியாக வராததால், பெண்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தலையான்மழை கிராம மக்களின் குடிநீர் தாகத்தைத் தீர்க்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் மற்றும் கீழையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.1
- காஞ்சிபுரம் : பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கலெக்டர் சினேகா நேரில் ஆய்வு.! உங்களைத் தேடி உங்கள் ஊரில் எனும் திட்ட முகாம் நடைபெற்றது . இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் மானாம்பதி ஊராட்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தி,சினேகா அவர்கள் காமதேனு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கால்நடை விவசாயிகளிடமிருந்து பால் கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.!1
- கும்பாபிஷேக விழாவில் முளைப்பாரி எடுத்து கும்மி அடித்து கொண்டாடிய பெண்கள். திருச்சி மாவட்டம் லால்குடி அருகே முள்ளால் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்தும்,கும்மி அடித்தும் விழாவில் கலந்து கொண்டனர்.1
- மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிலங்களில் வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் துவக்கம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஏலகிரி மலையில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ், மலைப்பகுதிகளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் 2026-27 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் முதன்மை நோக்கம், மலைவாழ் பழங்குடியின மக்களின் சொந்த நிலங்களில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தையும் நீண்டகால வருமானத்தையும் மேம்படுத்துவதாகும். வேளாண் பயிர்களுடன் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம். ஒரே நிலப்பரப்பிலிருந்து பல்வேறு வகையா பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். வருமான வாய்ப்புகளைப் சில்வர் ஓக் மரங்களை நடவு செய்வதன் மூலம் பல்வேறு பயன்கள் கிடைக்கின்றன. சில்வர் ஓக் மரங்களுடன் மிளகு போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பயிர்களை ஒருங்கிணைத்து வளர்ப்பதன் மூலம், ஒரே நிலப்பரப்பிலிருந்து பழங்குடியின குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும். மேலும், மரங்கள் முதிர்ச்சியடைந்த பின்னர் கிடைக்கும் தடி மரம் உள்ளிட்ட மரப்பொருட்களை குடும்பத் தேவைகளுக்குப் பயன்படுத்துவதுடன், தேவைக்கேற்ப விற்பனை செய்வதன் மூலமும் நல்ல கூடுதல் வருமானம் பெற முடியும். அதேவேளையில், மலைப்பகுதிகளைப் பசுமையாக்குவதன் மூலம் அப்பகுதிகளின் இயற்கை வளங்களும் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். மலைவாழ் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் இம்மலைகளின் நிலம், நீர் மற்றும் வன வளங்களுடன் நெருக்கமாக இணைந்துள்ளதால், மலைப்பகுதிகளின் பசுமையைப் பாதுகாப்பது அவர்களின் வாழ்வாதாரத்தின் நீண்டகால நிலைத்தன்மைக்கு உதவும். எனவே, இத்திட்டத்தில் வேளாண் காடு வளர்ப்பின் மூலம் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது முதன்மை நோக்கமாகவும், அதனுடன் மலைப்பகுதிகளைப் பசுமையாக்கி, அப்பகுதிகளின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களின் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்வது துணை நோக்கமாகவும் அமைகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026-27 ஆம் ஆண்டில் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் 8 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், மேற்குத் தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மலைப் பகுதிகளில் 2 இலட்சம் சில்வர் ஓக் மரக்கன்றுகளும், என மொத்தம் 10 இலட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 10 இலட்சம் மரக்கன்றுகளுக்கான நாற்றங்கால் மற்றும் நடவு செலவு உட்பட மொத்த திட்டச் செலவு ரூ.4.00 கோடியாகும். இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சி மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வி.இரஞ்சித் குமார் தலைமையில், ஏலகிரி மலைப்பகுதியில் திருமுருகன் சொந்தமான நிலத்தில் சில்வர் ஓக் மரக்கன்றுகளை நடவு செய்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் (TBGPCCR) கீழ் செயல்படுத்தப்படும் சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 5 சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.5.00 இலட்சம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சியும், சூழல் மேம்பாட்டுக் குழுவின் சுற்றுலா வழிகாட்டி காவலர்களுக்கு சீருடைகள் மற்றும் பைனாகுலர்கள் வழங்கும் நிகழ்ச்சியும் மாண்புமிகு வனத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வேலூர் வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் மாரிமுத்து மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் திருப்பத்தூர் வனக்கோட்டம் மற்றும் திருப்பத்தூர் கோட்ட வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.3