Shuru
Apke Nagar Ki App…
பழனி திண்டுக்கல் அடுத்த தாண்டி இது கள்ளிப்பட்டி மேடை அருகே *தாடிக்கொம்பு அருகே குடிபோதையில் 2 பிரிவினருக்கு இடையே தகராறு - 5 பேர் கைது* திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே கள்ளிப்பட்டி நாடக மேடை அருகே குடிபோதையில் 2 பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆழக்குவார்பட்டியை சேர்ந்த பகவதி, ராஜ்குமார், திவாகர், சூர்யா, மாதவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Sudharsan
பழனி திண்டுக்கல் அடுத்த தாண்டி இது கள்ளிப்பட்டி மேடை அருகே *தாடிக்கொம்பு அருகே குடிபோதையில் 2 பிரிவினருக்கு இடையே தகராறு - 5 பேர் கைது* திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே கள்ளிப்பட்டி நாடக மேடை அருகே குடிபோதையில் 2 பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது இந்த மோதலில் கள்ளிப்பட்டியை சேர்ந்த முத்துச்சாமி உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டதாக ஆழக்குவார்பட்டியை சேர்ந்த பகவதி, ராஜ்குமார், திவாகர், சூர்யா, மாதவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
More news from Dindigul and nearby areas
- திண்டுக்கல் சிறுமலை வனசரகத்தின் முக்கிய அறிவிப்பு விவசாயிகளுக்கு1
- தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் மாவட்ட ஆட்சியர் தீவிர கள ஆய்வு தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமின் ஒரு பகுதியாக, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆட்சியர், அப்பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகையகவுண்டன்பட்டியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலக் கட்டுமானப் பணிகள். புதுப்பட்டியில் அரசு சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி வசதிகள் மற்றும் தரம். காமயகவுண்டன்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் துணை மின்நிலைய (Substation) கட்டுமானப் பணிகள். உத்தமபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் புதிய கட்டடக் கட்டுமானப் பணிகள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகச் செயல்பாடுகள். ராயப்பன்பட்டியில் காவல் நிலையம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகச் செயல்பாடுகள். ஆனைமலையான்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் கிராம நிர்வாக அலுவலகக் (VAO Office) கட்டடம் மற்றும் அங்கன்வாடி மையச் செயல்பாடுகள். இந்த ஆய்வுகளின்போது பணிகளை ஆய்வு செய்தார். ஆய்வின்போது விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் (RDO), வட்டாட்சியர் (Tahsildar), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (BDO), ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மற்றும் அரசுத் துறைகளின் பல்வேறு உயர் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.1
- சின்னமனூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை முல்லை ஆற்றில் கரைத்தனர் தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி மற்றும் இந்து எழுச்சி முன்னனியினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மிக விமர்சையாக நடைபெற்றது. 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக கொண்டு சென்று முல்லைப் பெரியாற்றில் கரைத்தனர். தேனி மாவட்டம் சின்னமனூரில் இந்து முன்னணி, இந்து எழுச்சி முன்னனியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடினார்கள். விழாவினை முன்னிட்டு நகரின் முக்கிய வீதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் திருமேனி உருவச் சிலைகளை வைத்து அருகம்புல், எரிக்கலை மற்றும் கொளுக்கட்டைகளை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தும் பொங்கல் வைத்தும் அன்னதானம் வழங்கியும் மிக விமர்சையாக வழிபாடுகளை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் முக்கிய நிகழ்வாக இன்று நகரின் முக்கிய வீதிகளில் விநாயகர் திருமேனி உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் போது சாலையின் இரு புறமும் நின்றிருந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு பிரசாதமாக பொறி கடலைகளை வழங்கிச் சென்று முல்லைப் பெரியாற்றில் விநாயகரின் திரு உருவமேனி சிலைகளை கரைத்தனர். விழாவில் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 700 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு) திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள சேம்பிலியூத்து என்ற மலை கிராமத்தில் உள்ள எஸ்டேட்டில் நேற்று விநாயகர் சதுர்த்தி அன்று வலம் வந்த ஒற்றைக் காட்டு யானை. (எஸ்டேட்டில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு)1
- கன்னிவாடி அருகே கிணற்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளி தவறி விழுந்து படுகாயம் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே சோமலிங்க சுவாமி கோவில் செல்லும் வழியில் நாட்ராயன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் உரை அமைக்கும் பணி மேற்கொள்ள கிணற்றுக்குள் இறங்கிய பெரியகுளம், கல்லுப்பட்டி சேர்ந்த ஈஸ்வரன்(32) என்பவர் கம்பி வடம் அறுந்து விழுந்ததில் கிணற்றுக்குள் சென்ட்ரிங் கம்பி உடலில் குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆத்தூர் தீயணைப்புதுறையினர் கம்பியை அறுத்து மீட்பு வலையை பயன்படுத்தி ஈஸ்வரனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்1
- வருசநாடு அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வழங்கவில்லை என குற்றம் சாட்டி அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட தங்கம்மாள்புரம் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலிகுடங்களுடன் வருசநாடு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டுபுறமும் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கூட்டுகுடிநீர் திட்டத்திலிருந்து தங்கம்மாள்புரம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு வரும் குடிநீரை புதிதாக கடைகள் வணிக நிறுவனங்களுக்கு இணைப்பு கொடுத்து முழுவதுமாக எடுத்து கொள்வதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடியிருப்புகளுக்கு குடிநீரே வழங்கப்படவில்லை என்றும் இதை கேட்டால் குடிநீர் எடுத்து விடும் குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களும், ஊராட்சி பணியாளர்களும் அலட்சியமாக பதில் கூறுவதாகவும் குற்றம் சாட்டி தொடர்ச்சியாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கடமலைக்குண்டு காவல்துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர் குடிநீர் கேட்டு நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடமலைகுண்டு- வருசநாடு சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- கரூரில் ADMK வடக்கு பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா கரூர் மாவட்டம் அதிமுக வடக்கு பகுதி சார்பில் இன்று அலுவலகம் திறக்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி கரூர் மாவட்ட கழக செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் அதிமுக வடக்குப் பகுதி கட்சி அலுவலகம் திறப்பு விழா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர் இந்த நிகழ்ச்சியில் அருண் டெக்ஸ் தங்கவேலு என்.எஸ்.கிருஷ்ணன் வடக்கு பகுதி நிர்வாகிகள் அவைத் தலைவர் மணி வார்டு செயலாளர்கள் சரவணன்.பிரபு. சுப்பிரமணி.மகாமுனி.. வடக்கு பகுதி நிர்வாகிகள் வழக்கறிஞர் கலைராஜன் இந்தியன் கார்த்திக்.ராஜா.மகேஷ்.பெரியசாமி. கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தனர்1
- திண்டுக்கல்லில் இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான குடை பறைபட்டியிலிருந்து முஸ்லிம்கள் அதிகம் வாழும் பேகம்பூர் வழியாக வருடம் தோறும் காவல்துறையினருக்கு பெரும் தலைவலியாக இருந்து வரும் விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது1