*“திருவள்ளுவருக்கு காவி பூசுவதும், அதில் அரசியல் ஆதாயம் தேடுவதும் ஏற்புடையது அல்ல” - அமைச்சர் அருண்ராஜ்* சென்னை: “ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தவறு. திருவள்ளுவருக்கு காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல” என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர். அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளோ அல்லது குறிப்பிட்ட அடையாளத்திற்குள்ளோ சுருக்குவது என்பது உலகளாவிய அவரது சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம். லோக் பவனில் (அல்லது எந்தவொரு அரசு/பொது இடங்களிலும்) திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவிப்பது தவறு.திருவள்ளுவர் எந்தவொரு மதம், சாதி, இனம், நாட்டிற்குள்ளும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை. அவரது ‘திருக்குறள்’ மனித குலம் முழுமைக்கும் பொதுவான வாழ்வியல் நெறிகளைப் பேசுகிறது. கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் கூட அவர் ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’, ‘அறவாழி அந்தணன்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர, எந்தவொரு குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரையும் அவர் குறிப்பிடவில்லை. அவரே தன்னை ஒரு பொதுவானவராக நிலைநிறுத்தும்போது, அவருக்கு ஒரு குறிப்பிட்ட மதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படும் வண்ணத்தைப் பூசுவது அவரது உலகளாவிய தத்துவத்திற்கு முரணானது. வள்ளுவர் நமக்குக் கற்றுக்கொடுத்தது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவத்தை தான்.வள்ளுவரை ஒரு குறிப்பிட்ட வண்ணத்திற்குள் அடைக்க நினைப்பது கடலை ஒரு குடத்திற்குள் அடைக்க நினைப்பதற்குச் சமம். அவர் உலக மக்கள் அனைவருக்கும் வழிகாட்டும் ஒரு பேரொளி. அவருக்குக் காவி பூசுவதும், அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து, அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை. வள்ளுவரை கலங்கப் படுத்தாதீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

- நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணியின் மறைவுக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். காலமான மோகினி மணியின் உடலுக்கு மாலை அணிவித்து தனது இறுதி மரியாதையை செலுத்திய முதலமைச்சர், நடிகர் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.1
- கிருஷ்ணகிரி விஜய் வித்யாலயா பள்ளி அருகே அமைந்துள்ள மைதானத்தில், போதை இல்லா சமுதாயத்தை உருவாக்கும் நோக்குடன் JCI சார்பில் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவல் ஆய்வாளர் மணிமாறன் இந்தப் போட்டியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வு கிருஷ்ணகிரி JCI தலைவர் கோகுல் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கிரிக்கெட் போட்டியில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி போன்ற பல்வேறு இடங்களிலிருந்து மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இந்த நிகழ்வில் ஏராளமானோரும் கலந்து கொண்டனர்.1
- தர்மபுரி மாவட்ட கைப்பந்து கழகம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான இலவச கைப்பந்து பயிற்சி முகாம் கடந்த 4ஆம் தேதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கியது. கோடைக்கால சிறப்புப் பயிற்சியாக நடைபெற்ற இந்த முகாம் தற்போது நிறைவடைந்துள்ளது. பயிற்சி நிறைவு விழாவானது மாவட்ட விளையாட்டு மைதானத்திலேயே நடைபெற்றது. இதில் கைப்பந்து கழக மாவட்டச் செயலாளர் தங்கராஜ் பயிற்சி குறித்துப் பேசினார். இணைச் செயலாளர் நிர்மல்குமார் முன்னிலை வகித்தார். தலைவர் M.G. சேகர், அ.தி.மு.க கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோகன் மற்றும் கைப்பந்து கழகத் தலைவர் பூக்கடை ரவி ஆகியோர் தலைமை தாங்கி, மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் பொருளாளர் ஜெயபால் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிறைவு விழாவில் ஜெகநாதன், ஜெயராமன், சௌந்தர்ராஜன், மணிவண்ணன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார், பார்த்திபன், வணங்காமுடி, தனபால், ராம்குமார், பிரபு, மாது, மோகன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.1
- நல்லம்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாக நடைபெறும் நாட்டுக்கோழி சந்தை, இன்று (மே 31) நடைபெற்றது. இந்த சந்தையில் கோழிகளின் வரத்து குறைந்ததால் அவற்றின் விலை கணிசமாக அதிகரித்தது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகளும் பங்கேற்ற இந்த சந்தையில், ஒரு நாட்டுக்கோழி ₹480 முதல் ₹1,500 வரை விற்பனையானது. இன்று மொத்தமாக ₹4.20 லட்சம் மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.1
- நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த அருள்மிகு வல்லாங்குளத்து முத்து மாரியம்மன் கோயிலில், வைகாசி விசாகம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் தனி சன்னதியில் அருள்பாலித்து வரும் ஸ்ரீசண்முகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனைகளும் நடத்தப்பட்டன. இந்த சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.1
- தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்காவில் உள்ள தேவராயன்பேட்டை ஊராட்சி, கீழத்தெரு கிராமத்தில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த ஒரு மாதமாக குடிநீர் இன்றி கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சரிவர சுத்தம் செய்யப்படாததால், மஞ்சள் பாசிகள் நிறைந்த குடிநீரை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது ஒரு மாத காலமாக அந்த தண்ணீரும் வரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தப் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகள், தினசரி வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் உடல்நலம் குன்றிய முதியவர்கள் உள்ளிட்டோர் பேருந்து வசதி மற்றும் சாலை வசதி இல்லாததால் சிரமப்படுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாகச் செய்து தர வேண்டும் என தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- தருமபுரியிலுள்ள சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் விற்பனைக்காக சுமார் 200 ஆடுகளைக் கொண்டு வந்தனர். சோலை கொட்டாய், செட்டிகரை, நல்லம்பள்ளி, குள்ளனூர், குண்டலபட்டி, நார்த்தம்பட்டி, அதியமான் கோட்டை, தடங்கம், ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, பெரியாம்பட்டி, மாட்லாம்பட்டி, ராஜா பேட்டை, லளிகம், தோப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இந்த ஆடுகள் கொண்டு வரப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பிற வியாபாரிகள் என பலர் ஆடுகளை வாங்க வந்திருந்தனர். சந்தையில் சிறிய ஆட்டுக்குட்டிகள் ₹2,000 முதல் விற்பனையான நிலையில், பெரிய அளவிலான ஆடுகள் ₹20,000 வரை விற்பனை செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக, தருமபுரி சந்தைப்பேட்டை ஆட்டுச் சந்தையில் ₹18 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.1
- தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வரும் நிலையில், சனிக்கிழமை அன்று காலை முதல் கடும் வெப்பம் நிலவியது. பின்னர், மாலை நேரத்தில் பாலக்கோடு, கடமடை, நாகதாசம்பட்டி, பாப்பாரப்பட்டி, பி.அக்ரஹாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல், நல்லம்பள்ளி, தொப்பூர், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் மொரப்பூர் போன்ற பிற பகுதிகளிலும் மிதமான மழை பதிவாகியுள்ளது. இந்த மழையின் காரணமாக, பாதுகாப்பு கருதி தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மின்நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்நிறுத்தம் தற்போது வரை தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.1
- சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த திரிணாமுல் காங்கிரஸ் MP அபிஷேக் பானர்ஜி மீது முட்டை மற்றும் கல் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் சோனார்பூர் பகுதியில் நடந்த இந்தத் தாக்குதலின்போது, அவரைப் "பங்காளதேஷி" என்று கூறி சிலர் முட்டைகளையும் கற்களையும் வீசியுள்ளனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அபிஷேக் பானர்ஜிக்கு கிரிக்கெட் ஹெல்மெட் அணிவிக்கப்பட்டு, அவர் அந்த இடத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, திரிணாமுல் காங்கிரஸ் MP அபிஷேக் பானர்ஜி, இது பாஜகவின் சதி என்று நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார்.1