logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

நாகை: புதிதாக கட்டப்படும் பேரூந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட நாகை சட்ட மன்ற உறுப்பினர்! நாகை, செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.30 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் வரைபடங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை நகராட்சி அலுவலர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் காண்பித்து விளக்கம் அளித்தனர்.

3 hrs ago
user_J. Nazeer Khan
J. Nazeer Khan
நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
3 hrs ago
effe19aa-2824-49c4-9113-a40cca312a2f

நாகை: புதிதாக கட்டப்படும் பேரூந்து நிலையத்தை ஆய்வு மேற்கொண்ட நாகை சட்ட மன்ற உறுப்பினர்! நாகை, செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.30 கோடியே 40 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகின்ற புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இத்திட்டத்தின் வரைபடங்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை நகராட்சி அலுவலர்கள் சட்டமன்ற உறுப்பினரிடம் காண்பித்து விளக்கம் அளித்தனர்.

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேவூர் முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32 வது ஆண்டு திருவிளக்கு பூஜை தேவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32ம் ஆண்டு ஆடி திருவிளக்கு பெருவிழா நேற்றிரவு நடைப்பெற்றது. விழாவினை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.
    1
    தேவூர் முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32 வது ஆண்டு திருவிளக்கு பூஜை
தேவூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ முத்தாள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் 32ம் ஆண்டு ஆடி திருவிளக்கு பெருவிழா நேற்றிரவு நடைப்பெற்றது.
விழாவினை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும் அதனை தொடர்ந்து அம்பாளுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது.
    user_NAGAI BABU
    NAGAI BABU
    Reportar நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    4 hrs ago
  • நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    2
    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தாலுக்கா இறையங்குடி கிராமத்தில் எழுந்தருளிக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் அருள்மிகு ஸ்ரீ வெக்காளியம்மன் ஆலயத்தில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால்,பன்னீர்,இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்று விநியோகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் ஆலயத்தில் நிர்வாகி சுப்பிரமணிய சுவாமி தலைமையில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    user_Chakravarthy
    Chakravarthy
    நாகப்பட்டினம், நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    19 hrs ago
  • நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த ஸ்கூட்டி ஹேண்டில் லாக்கை உடைத்து நைசாக திருடும் காட்சி நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி திருட்டு – சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரல் ​ நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியை ஜெராக்ஸ் கடை வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டியின் ஹேண்டில் லாக்கை காலால் உடைத்து, வாகனத்தை நைசாக திருடிச் சென்றுள்ளார். ​இந்தத் திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. ​இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஸ்கூட்டியை திருடிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஆட்சியர் அலுவலக பகுதியிலேயே நடைபெற்ற இந்தத் துணிச்சல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    1
    நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே நிறுத்தியிருந்த ஸ்கூட்டி ஹேண்டில் லாக்கை உடைத்து நைசாக திருடும் காட்சி
நாகை ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு: நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டி திருட்டு – சிசிடிவி காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரல்
​
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஜெராக்ஸ் கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
​நபர் ஒருவர் தனது ஸ்கூட்டியை ஜெராக்ஸ் கடை வாசலில் நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், பூட்டப்பட்டிருந்த ஸ்கூட்டியின் ஹேண்டில் லாக்கை காலால்  உடைத்து, வாகனத்தை நைசாக திருடிச் சென்றுள்ளார்.
​இந்தத் திருட்டு சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன.
​இச்சம்பவம் குறித்து பெறப்பட்ட புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஸ்கூட்டியை திருடிச் சென்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த ஆட்சியர் அலுவலக  பகுதியிலேயே நடைபெற்ற இந்தத் துணிச்சல் திருட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    4 hrs ago
  • கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் முளைப்பாரி திருவிழா நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தாலுக்கா கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நான்காம் வருடமாக சடையன் கோட்டகம் அருள்வாக்கு வெண்ணிலா அம்மா தலைமையிலும் மேனகா, சத்யா ,மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையிலும் பெருமாள் குளக்கரையில் இருந்து 108 முளைப்பாரி பெண் பக்தர்கள் தலையில் சுமந்து சேவுராயர் அய்யனார் மற்றும் சிவன் கோவில் வழியாக மேலப்பிடாரி கடை தெருவில் இருந்து ஊர்வலமாக சிவன் பார்வதி மேடம் அணிந்தவர்களுடன் இணைந்து மேல வாத்தியங்களுடன் வான வேடிக்கை நடைபெற்று அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது மேலும் அலங்கரிக்கப்பட்டஅம்மனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த முளைப்பாரி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    1
    கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் முளைப்பாரி திருவிழா
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் தாலுக்கா கருங்கன்னி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு நான்காம் வருடமாக  சடையன் கோட்டகம்  அருள்வாக்கு      வெண்ணிலா அம்மா  தலைமையிலும் மேனகா, சத்யா ,மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையிலும் பெருமாள் குளக்கரையில் இருந்து 108 முளைப்பாரி பெண் பக்தர்கள் தலையில் சுமந்து சேவுராயர் அய்யனார் மற்றும் சிவன் கோவில் வழியாக மேலப்பிடாரி கடை தெருவில் இருந்து ஊர்வலமாக சிவன் பார்வதி மேடம் அணிந்தவர்களுடன் இணைந்து மேல வாத்தியங்களுடன் வான வேடிக்கை நடைபெற்று அருள்மிகு ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது மேலும் அலங்கரிக்கப்பட்டஅம்மனுக்கு  மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது  இந்த முளைப்பாரி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    user_Packya Rasu
    Packya Rasu
    Media company திருக்குவளை, நாகப்பட்டினம், தமிழ்நாடு•
    3 hrs ago
  • பாபநாசம் பகுதியில் ஆடி 18 முன்னிட்டு சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆடி 18 முன்னிட்டு ஓலைச் சப்பரம் வடிவத்தில் சப்பரம் தயாரித்து வருகின்றனர். இந்த சப்பரத்தினை குழந்தைகளுக்கு பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த தொழிலில் ஈடுபடும் தச்சு தொழிலாளர்கள் கூறியதாவது ... நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சப்பரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் , மரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக அடிப்படை வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    பாபநாசம் பகுதியில் ஆடி 18 முன்னிட்டு  சப்பரம் தயாரிக்கும் பணி தீவிரம்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கணபதி அக்ரஹாரம் பகுதியில் நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
ஆடி 18 முன்னிட்டு ஓலைச் சப்பரம் வடிவத்தில் சப்பரம் தயாரித்து வருகின்றனர். 
இந்த சப்பரத்தினை குழந்தைகளுக்கு  பெரியவர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். 
இந்த தொழிலில் ஈடுபடும் தச்சு தொழிலாளர்கள் கூறியதாவது ...
நான்கு தலைமுறைகளாக சப்பரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுவதாகவும், தங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்க வேண்டும் என்றும், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், சப்பரம் தயாரிக்க பயன்படுத்தும் மூலப் பொருட்கள் விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்படுவதாகவும் , மரங்கள் குறைந்த விலையில் கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து உடனடியாக அடிப்படை வசதிகள் தொழிலாளர்களுக்கு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_A. Mathankumar
    A. Mathankumar
    Local News Reporter கும்பகோணம், தஞ்சாவூர், தமிழ்நாடு•
    25 min ago
  • வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம் கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்
    1
    வடலூர் வள்ளலார் கோவிலுக்கு புதிய தீர்ப்பு மக்கள் கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் வடலூர் வள்ளலார் கோவிலின் புதிய தீர்ப்பை அளித்துள்ளனர் இதனால் மக்கள் கொண்டாட்டம்
    user_A.GUNASEELAN reporter  📰TN31
    A.GUNASEELAN reporter 📰TN31
    Press advisory பண்ருட்டி, கடலூர், தமிழ்நாடு•
    8 hrs ago
  • மீனவர் பிரச்சனை குறித்து தமிழக அரசு, மத்திய அரசு உதவியோடு, இலங்கை அரசிடம் பேசி நிரந்தர சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் - திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:-- வரும் திங்கட்கிழமை காலை இலங்கை ஜனாதிபதியை கூட்டாகச் சந்தித்து, சமூகம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ள, இந்திய உள்ள வெளியுறவு செயலாளரைச் சந்திப்பதற்கான உடன்பாடும் திட்டமும் எட்டப்பட்டுள்ளது. கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். அயல் நாட்டில் நடக்கும் இது போன்ற அரசியல் பிரச்சினைகளில் உடனடியாகக் கருத்து தெரிவிப்பதை விட, நிலைமைகளை சீர்தூக்கி பார்த்து செயல்படுவதே தங்கள் நிலைப்பாடு என்றார். *தமிழக மீனவர்களை கண்டித்து, யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு:-* இது வெறும் ராஜதந்திரப் பிரச்சினை மட்டுமல்ல; இரு நாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, சட்டரீதியான பார்வையைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் சமூக உடன்பாட்டை இருதரப்பும் காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக மாநில அரசு மத்திய அரசு உதவியோடு, இலங்கை மீன்வளத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து ஒரு நிரந்தரச் சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்றார். இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் பல மானிய உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் பேசும் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுவதைப் போல, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் இந்திய அரசின் அனுசரணை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த தற்போதைய அரசு இழுத்தடித்து வருவது குறித்தும் ஜனாதிபதியுடன் சந்திப்பின்போது விவாதிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மீண்டு வரும் இலங்கை பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. யுத்த காலத்தில் ராணுவம் மற்றும் அரசுப் படைகளால் கையகப்படுத்தப்பட்ட, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் திங்கட்கிழமை நடக்கும் ஜனாதிபதி சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்திப் பேசப்படும் என தெரிவித்தார்.
    1
    மீனவர் பிரச்சனை குறித்து
தமிழக அரசு, மத்திய அரசு உதவியோடு, இலங்கை அரசிடம் பேசி நிரந்தர சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் - திருச்சியில் இலங்கை எம்பி பேட்டி! 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில்:--
வரும் திங்கட்கிழமை காலை இலங்கை ஜனாதிபதியை கூட்டாகச் சந்தித்து, சமூகம் சார்ந்த மிக முக்கியமான பிரச்சினைகள் குறித்துப் பேசத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரையும் சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ள, இந்திய உள்ள வெளியுறவு செயலாளரைச் சந்திப்பதற்கான உடன்பாடும் திட்டமும் எட்டப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் தமிழகத்திற்கு இடையேயான நதிநீர் பங்கீடு பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலமும் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையிலும் தீர்க்க வேண்டும். அயல் நாட்டில் நடக்கும் இது போன்ற அரசியல் பிரச்சினைகளில் உடனடியாகக் கருத்து தெரிவிப்பதை விட, நிலைமைகளை சீர்தூக்கி பார்த்து செயல்படுவதே தங்கள் நிலைப்பாடு என்றார்.
*தமிழக மீனவர்களை கண்டித்து,
யாழ்ப்பாணத்தில் இலங்கை மீனவர்கள் கருப்பு கொடி போராட்டம் நடத்தியது குறித்த கேள்விக்கு:-* 
இது வெறும் ராஜதந்திரப் பிரச்சினை மட்டுமல்ல; இரு நாட்டு மீனவ சமூகங்களின் வாழ்வாதாரப் பிரச்சினை. எனவே, சட்டரீதியான பார்வையைத் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் சமூக உடன்பாட்டை இருதரப்பும் காண வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை 
தமிழக மாநில அரசு மத்திய அரசு உதவியோடு, இலங்கை மீன்வளத்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுடன் இணைந்து ஒரு நிரந்தரச் சுமுகத் தீர்வை எட்ட வேண்டும் என்றார். 
இந்தியா இலங்கைக்கு ஒரு நேச நாடு என்ற அடிப்படையில் பல மானிய உதவிகளை வழங்கி வருகிறது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் பேசும் மக்களுக்கு வீட்டுத் திட்டங்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுவதைப் போல, தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கும் இந்திய அரசின் அனுசரணை கிடைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.  
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த தற்போதைய அரசு இழுத்தடித்து வருவது குறித்தும் ஜனாதிபதியுடன் சந்திப்பின்போது விவாதிக்கப்படும்.
நாட்டின் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது மீண்டு வரும் இலங்கை பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
யுத்த காலத்தில் ராணுவம் மற்றும் அரசுப் படைகளால் கையகப்படுத்தப்பட்ட, தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள தனியார் காணிகள் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இது தொடர்பாகவும் திங்கட்கிழமை நடக்கும் ஜனாதிபதி சந்திப்பில் முக்கியமாக வலியுறுத்திப் பேசப்படும் என தெரிவித்தார்.
    user_Msd
    Msd
    திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு•
    22 hrs ago
  • திருக்குவளை சமத்துவபுரத்தில் அருள்மிகு நல்லமுத்து மாரியம்மன் ஆலய 108 திருவிளக்கு பூஜை நாகை மாவட்டம் திருக்குவளை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆடி திருவிழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. பெற்றது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், அன்னதானம் மற்றும் கஞ்சிவார்த்தல், சந்தனகாப்பு அலங்காரமும் 108 பெண்கள் விரதமிருந்து 108 திருவிளக்கு பூஜையும் நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி விஜயா குமரவேல் செய்திருந்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.
    1
    திருக்குவளை சமத்துவபுரத்தில் அருள்மிகு நல்லமுத்து மாரியம்மன் ஆலய 108 திருவிளக்கு பூஜை
நாகை மாவட்டம் திருக்குவளை சமத்துவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து மாரியம்மன் ஆலய 3-ஆம் ஆடி திருவிழா மற்றும் திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது.
பெற்றது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், அன்னதானம் மற்றும் கஞ்சிவார்த்தல், சந்தனகாப்பு அலங்காரமும் 108 பெண்கள் விரதமிருந்து 108 திருவிளக்கு பூஜையும் நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி விஜயா குமரவேல் செய்திருந்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் ஏராளமனோர் பங்கேற்றனர்.
    user_MAHENDRAN
    MAHENDRAN
    Local News Reporter Kilvelur, Nagapattinam•
    17 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.