Shuru
Apke Nagar Ki App…
சென்னையில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய நீரை அகற்றும் பணியை அமைச்சர் அருண்ராஜ் பார்வையிட்டு உடனுக்குடன் நீரை அகற்ற உத்தரவு.
Senthilkumarankumaran
சென்னையில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய நீரை அகற்றும் பணியை அமைச்சர் அருண்ராஜ் பார்வையிட்டு உடனுக்குடன் நீரை அகற்ற உத்தரவு.
More news from தமிழ்நாடு and nearby areas
- சென்னையில் பெய்த கனமழை காரணமாக தேங்கிய நீரை அகற்றும் பணியை அமைச்சர் அருண்ராஜ் பார்வையிட்டு உடனுக்குடன் நீரை அகற்ற உத்தரவு.1
- "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! "அ போட்டு விட்டு அப்புறம் ஓம் போடுங்க..." - ஆசிரியையின் வழிகாட்டலில் நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தை எழுதிய மழலைகள்! கோவை வடவள்ளி 'தி எல்லோ ஸ்டார்' பள்ளியில் கோலாகலமாக நடைபெற்ற 'வித்யா ஆரம்பம்' எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி: பெற்றோர்கள் நெகிழ்ச்சி! கோவை, வடவள்ளி பகுதியில் அமைந்து உள்ள 'தி எல்லோ ஸ்டார்' (The Yellow star) குழந்தைகள் பள்ளியில், விஜயதசமி திருநாளை முன்னிட்டு சிறார்களின் கல்விப் பயணத்தைத் தொடங்கும் பாரம்பரிய நிகழ்வான 'வித்யா ஆரம்பம்' (எழுத்தறிவித்தல்) நிகழ்ச்சி மிகச் சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது. விஜயதசமி நாளான இன்று, தங்களது மழலைச் செல்வங்களுடன் பள்ளிகளுக்கும் கல்வி நிலையங்களுக்கும் பெற்றோர்கள் உற்சாகமாக வருகை தந்தனர். அதன் ஒரு பகுதியாக, வடவள்ளி தி எல்லோ ஸ்டார் பள்ளியில் புதிதாகக் கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களின் கல்வி ஞானம் தடையின்றித் தொடங்குவதற்காக நெல்மணி பரப்பப்பட்டு, அதில் தமிழின் முதல் எழுத்தான 'அ' எழுதி எழுத்தறிவித்தல் நிகழ்ச்சித் தொடங்கப்பட்டது. குழந்தைகளை அன்புடன் வரவேற்ற ஆசிரியை, "முதல்ல 'அ' போட்டு விட்டு, அப்புறம் 'ஓம்' போடுங்கம்மா..." என்று பாசத்தோடு வழிகாட்டினார். தங்களது மழலையின் பிஞ்சுக் கைகளைப் பிடித்தபடி, பெற்றோர்களே அருகில் இருந்து நெல்மணியில் அந்த முதல் எழுத்தை எழுத வைத்துத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "கைய வச்சு நீயே அ போடு..." எனப் பெற்றோர் உற்சாகப்படுத்திய விதம் காண்போரை நெகிழ்ச்சியடையச் செய்தது. புனிதமான விஜயதசமி திருநாளில், மழலைச் செல்வங்களுடன் பெற்றோர்களும் பள்ளியில் குவிந்து தங்களது குழந்தைகளின் முதல் கல்வி அடியை மகிழ்ச்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், கல்விச் சாலையின் தொடக்கத்தைக் கோலாகலமாக்கியது.1
- கோவையில் 400 ஆண்டு பாரம்பரிய சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்! விஜயதசமியை முன்னிட்டு கோவையில் உள்ள பழமையான சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் பாரம்பரியத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 400 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்விழாவில், 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உடலில் கத்தியால் லேசாக வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். அதிகாலை சாய்பாபா கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், பூ மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, டவுன்ஹால், ராஜவீதி வழியாகச் சென்று ஐந்து மூக்கு பகுதியில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவிலை அடைந்தது. இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பக்தி முழக்கங்களுடன் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.1
- பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீதுர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சியில் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது பொள்ளாச்சி அக்டோபர் 20 தமிழகம் முழுவதும் இந்து தேசிய இயக்கம் சார்பில் ஸ்ரீ துர்கா பூஜை சிறப்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள, கந்தசாமிபுரத்தில் இந்து தேசிய இயக்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை துர்க்கை அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் அதை தொடர்ந்து மூன்று நாட்கள் காலை மற்றும் மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு துர்கா தேவிக்கு பூஜைகள் செய்து, பஜனை பாடி அம்மனை வழிபட்டனர். பின்னர் சுமங்கலிகளுக்கு குங்குமம், வளையல், தாலிக்கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இந்து தேசிய இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த துர்கா பூஜை விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.1
- உடுமலை அருகே பாசனக் கால்வாய் தூர்வாரும் பணி: எம்.எல்.ஏ. சத்யபாமா ஆய்வு! உடுமலை: திருமூர்த்தி அணை பாசனக் கால்வாய்களைத் தூர்வார தமிழக அரசு ரூ.14 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக, பெரியகுமாரபாளையம், பெல்லப்பட்டி பகுதிகளில் ரூ.16 லட்சம் மதிப்பில் பி.ஏ.பி. கிளை வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டன. இப்பணிகளை தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா நேரில் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.1
- சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது1
- காலாவதியான ஒயின் பாட்டில் விற்பனை, கோபிசெட்டிபாளையம் அரசு டாஸ்மாக் கடையில் பரபரப்பு – இருவர் மருத்துவமனையில் சிகிச்சை கோபிசெட்டிபாளையம் கரட்டடிபாளையம், பொன்னுச்சாமி வீதியை சேர்ந்த ஜோதிலிங்கம் (36). இவர் தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் மொட்டச்சூரை சேர்ந்த விஜயன் (40) என்பவரும் இன்று மாலை காமராஜ் நகரில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு (கடை எண்: 3606) சென்றுள்ளனர். அங்கு தலா 440 ரூபாய் வீதம் கொடுத்து ஒயின் பாட்டில்களை வாங்கியுள்ளனர். பின்னர், கடையில் அமர்ந்து மதுபானத்தை அருந்தியபோது, அதிலிருந்து ஒரு மாறுபட்டவிசித்திரமான வாசனை வீசியுள்ளது, இதனால் சந்தேகமடைந்த இருவரும் பாட்டிலை உற்று நோக்கியபோது, அதில் தூசிகள் கலந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், அந்த ஒயின் பாட்டிலின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை சோதித்தபோது, அதில் 2021-ஆம் ஆண்டோடு காலாவதியானது என்று அச்சிடப்பட்டிருந்தது தெரியவந்தது. சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியான மதுபானத்தை டாஸ்மாக் கடை நிர்வாகம் பொதுமக்களுக்கு விற்பனை செய்ததை அறிந்து அவர்கள் அதிர்ச்சியுற்றனர்.இது குறித்து ஜோதிலிங்கம் மற்றும் விஜயன் ஆகியோர் உடனடியாக சிறுவலூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுவலூர் போலீஸார், சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்த 13 ஒயின் பாட்டில்களைக் கைப்பற்றி சோதித்தனர். அவை அனைத்தும் 2021-லேயே காலாவதியானது என்பதை போலீஸாரும் உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தின் போது, அந்த டாஸ்மாக் கடையின் விற்பனையாளர் கதிர்வேல் மற்றும் மேற்பார்வையாளர் சஞ்சீவி நாதன் ஆகியோர் பணியில் இருந்தனர். காலாவதியான மதுபானங்கள் கடைக்கு எப்படி வந்தது, இருப்பு பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்பட்டதா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர், இதற்கிடையில், காலாவதியான மற்றும் தூசி கலந்த மதுபானத்தை அருந்தியதால் ஜோதிலிங்கம் மற்றும் விஜயன் ஆகிய இருவரும், சிகிச்சைக்காக கோபி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர், அரசு டாஸ்மாக் கடையிலேயே காலாவதியான மதுபானம் விற்கப்பட்ட சம்பவம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் மதுப்பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.1
- மைசூர் தசரா திருவிழாவில் நடைபெற்ற டிரோன் காட்சிகள். மிகவும் அழகான காட்சிகள். பார்த்து ரசிக்கவும்.1