Shuru
Apke Nagar Ki App…
சேலம் ஆத்தூரில் புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்! சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில், நான்கு புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று ஆத்தூர் பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக வெற்றிக்காக அரசு நிறைவேற்றி உள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Rajendran
சேலம் ஆத்தூரில் புதிய பேருந்து சேவையை துவக்கி வைத்த அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்! சேலம் மாவட்டம் ஆத்தூர் பேருந்து நிலையத்தில், நான்கு புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவையை தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அமைச்சர் திரு விஜய் தமிழன் பார்த்திபன் அவர்கள், இன்று ஆத்தூர் பேருந்து நிலையத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழக வெற்றிக்காக அரசு நிறைவேற்றி உள்ளதாக பெருமிதத்துடன் கூறினார். இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- சேலத்தில் அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்! சேலம் ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் கோட்டை கனரா வங்கி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு, மத்திய அரசு வங்கி ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என போராட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.1
- இராசிபுரம்: திருநங்கைகளின் ஆவணி மாத பௌர்ணமி சிறப்பு நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் பனந்தோப்பில் அமைந்துள்ள திருநங்கைகளின் குலதெய்வ கோயில் நாக முத்து மாரியம்மன், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு ஆகஸ்ட் 27 வியாழக்கிழமை இரவு 7 மணி அளவில் ஆவணி மாத பௌர்ணமி பூஜை மிக சிறப்பாக பல்வேறு திரவிங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மங்கள வாத்தியத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.1
- சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நடைபெற்றது அதிமுக வெளிநடப்பு நரசிங்கபுரம் நகரமன்ற கூட்டம் அதிமுக வெளிநடப்பு . சேலம் மாவட்டம் நரசிங்கபுரம் நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் திமுக அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர் 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதிமுக கவுன்சிலர்கள் கோபி பேசிய போது எங்களுடைய பகுதிக்கு எந்த ஒரு திட்டங்கள் செய்யவில்லை என்றும் நான்கு வருடமாக எங்கள் பகுதியை நரசிங்கபுரம் நகராட்சி கண்டு கொள்ளவில்லை என்றும் ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்யிடம் நிதி பெற்று தந்தும் அதை முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டை அதிமுக கவுன்சிலர்கள் எழுப்பினார்கள் .மேலும் அதிமுக ஒரு சில கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு காணப்பட்டது மேலும் இன்னும் குறைந்த நாட்கள் உள்ளதால் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் வாய்ப்புள்ளது . உடனடியாக எங்கள் பகுதிக்கு அனைத்து வேலைகளும் செய்து தர வேண்டும் இல்லை என்றால் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பொழுது நாங்கள் வாக்கு சேகரிக்க சிரமம் ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.1
- தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரியில் எச்.ஐ.வி. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்து விழிப்புணர்வு பேரணி..! தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். முன்னதாக, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமையேற்று வாசித்தார். தொடர்ந்து, அரசு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதிமொழியைப் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழியில், எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த முழுமையான அடிப்படைத் தகவல்களை அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படும் நம்பிக்கை மையங்கள் மூலம் அறிந்து கொள்வது, தன்னார்வத்துடன் எச்.ஐ.வி. பரிசோதனை மேற்கொள்வது, எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுடன் வாழ்பவர்களை அரவணைத்து, அவர்களுக்கு தேவையான சேவைகளைப் பெறுவதற்கு உறுதுணையாக இருப்பது, அவர்களுக்கு சம உரிமை அளிப்பது உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதாக உறுதியேற்றனர். மேலும், புதிய எச்.ஐ.வி. தொற்றில்லாத குடும்பம் மற்றும் சமூகத்தை உருவாக்க பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கையொப்பமிட்டு தொடங்கி வைத்தார். மேலும், ஆட்டோக்களில் எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, பாரதி கலைக்குழு மற்றும் இராமகிருஷ்ணா கலைக்குழுவினரின் சார்பில் நடைபெற்ற எச்.ஐ.வி., எய்ட்ஸ் குறித்த நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சியையும் மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதையடுத்து, எச்.ஐ.வி., எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பேரணி பாரதிபுரம் வரை சென்று நிறைவடைந்தது. இந்தப் பேரணியில் 250-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், “எச்.ஐ.வி., எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோரை ஆதரிப்போம்” உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குநர் சுகாதாரம் இராஜேந்திரன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன், தொழுநோய் துணை இயக்குநர் புவனேஷ்வரி, மண்டல திட்ட மேலாளர் பாலமுருகன், மாவட்ட மேற்பார்வையாளர் உலகநாதன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு ஆலோசகர்கள் பாலமுருகன், ராஜ்குமார், சரவணன், SEED இயக்குநர் சரவணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அரசு கலைக் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.1
- கிரிவலத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் ஆவணி மாத பௌர்ணமி இன்று காலை 9:53 மணிக்கு தொடங்கி நாளை 28ம் தேதி காலை 10:29 மணிக்கு நிறைவடைய உள்ளதால் பக்தர்கள் இன்று இரவு கிரிவலம் மேற்கொள்ளலாம் என்று அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.1
- மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் மாணவ மாணவியரின் பாதுகாப்பை கருதி தற்காப்பு பயிற்சி தொடக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை, மேல் வாழப்பாடி அரசு தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பள்ளித் தலைமை ஆசிரியர் திருமதி எழிலரசி அவர்கள் தற்காப்புப் பயிற்சிகளை தொடங்கி வைத்தார். இதன் ஒரு பகுதியாக, கிராமாலயா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கருத்தாளர் திருமதி அனிதா அவர்கள் பங்கேற்றார். அப்போது மாணவ, மாணவியர்களுக்கு தற்காப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மாணவர்களும் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு, தற்காப்பு முறைகளை செய்து காண்பித்தனர். மாணவர்களின் பாதுகாப்பு, தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த தற்காப்புப் பயிற்சி நிகழ்ச்சிக்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.1
- ஜக்கசமுத்திரத்தில் இணைப்பு சாலை கோரி பொதுமக்கள் தர்ணா - மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று விசாரணை தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே, ஜக்கசமுத்திரம் கிராமத்திற்கு இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜக்கசமுத்திரம் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள 16 கிராமங்களுக்கு மையப்பகுதியாகவும் இக்கிராமம் உள்ளது. ஊராட்சி அலுவலகம், அரசு மருத்துவமனை, வங்கிகள், தபால் நிலையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை 844-ல் சேவைச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், ஜக்கசமுத்திரம் பகுதிக்கு செல்லும் இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் அரசு மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது. பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லாததால் பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கினர். மேலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “ஜக்கசமுத்திரம் என்ற கிராமமே பதிவேட்டில் இல்லை” என தெரிவிப்பதாக பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து, இணைப்பு சாலை மற்றும் பேருந்து நிறுத்தம் அமைக்க வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலையோரம் நின்று தர்ணாவில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சரவணன் சம்பவ இடத்திற்க்கு சென்று கோரிக்கைகளை கேட்டறிந்தவர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்க்கு வருமாறு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.1
- நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி நேபாளம் வெள்ளப்பெருக்கில் பாலத்தை அடித்து செல்லும் காட்சி1