Shuru
Apke Nagar Ki App…
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி *அதிமுக வேட்பாளரான* கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா *திரு.ஆர்.மனோகரன்* இன்று *ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்* தனது *வேட்புமனுவை* தாக்கல் செய்தார். திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் *திரு.பரஞ்சோதி* முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடைசூழ திருவானைக்கோவில் ட்ரங்க் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
K.S. PERIYASAMY
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி *அதிமுக வேட்பாளரான* கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா *திரு.ஆர்.மனோகரன்* இன்று *ஸ்ரீரங்கம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம்* தனது *வேட்புமனுவை* தாக்கல் செய்தார். திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் *திரு.பரஞ்சோதி* முன்னிலையில் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடைசூழ திருவானைக்கோவில் ட்ரங்க் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by பெரியசாமி1
- கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களை ஆதரித்து குளித்தலை பேருந்து நிலைய காந்தி சிலை முன்பு எம்பி கனிமொழி உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார் அப்போது பேசிய எம் பி கனிமொழி கலைஞர் அவர்களுக்கு முதல் வெற்றியை கொடுத்த குளித்தலை பகுதி பொதுமக்கள் இப்போது நமது வெற்றி வேட்பாளர் சூரியனூர் சந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று மேலும் திமுக ஆட்சியில் நிறைவேற்றிய வாக்குறுதிகளை கூறி பொதுமக்களுடைய பிரச்சாரம் செய்தார் இந்நிகழ்வில் குளித்தலை தொகுதிக்குட்பட்ட திமுக விசிக தேமுதிக சிபிஎம் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்1
- திருச்சி மாவட்டம், கல்லக்குடி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் ஆயுங்களுடன் சிலர் Reels எடுத்து அதனை Instagram -ல் கடந்த இரு தினங்களுக்கு முன் பதிவிட்டிருந்தனர். இதையறிந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி கல்லக்குடி காவல்துறையினர் அச்சுறுத்தும் விதமான விடியோவை பதிவிட்ட நபர்களை கைது செய்தனர். பின்னர் இதுபோன்று பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பயங்கர ஆயுதங்களுடன் Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மற்றும் பைக் சாகசங்களில் ஈடுபட்டு அதனை Reels எடுத்து பதிவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற Reels பதிவிடும் நபர்கள் பற்றி தகவல் தெரிவிக்க மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100யை தொடர்பு கொள்ளலாம்1
- தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற இருப்பதால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கவும் வாக்காளர்களின் கவனத்தை இருக்கவும் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுவார்கள் அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள புகழ்பெற்ற சக்கராபள்ளி சக்கரவாகேஸ்வரர் திருக்கோவிலின் சப்தஸ்தான திருவிழாவில் அய்யம்பேட்டை சாலை தெருவில் சாமிக்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருகை புரிந்த த வெ க சார்பில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அசாருதீன் உதுமான் அலி அவர்கள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து கைலாய வாத்தியம் வாசிக்கும் சிறார்கள் இடம் அவர்களின் வாசிக்கப்படும் கைலாய வாத்திய கருவியை பற்றியும் என்ன படிக்கிறார்கள் என்பது பற்றியும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து அந்த கைலாய வாத்திய கருவியை வாசித்து பக்தர்களின் கவனத்தை ஈர்த்து ஆதரவு திரட்டினார். உடன் தவெக நிரர்வாகிகள் உடனிருந்தனர்.1
- சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அர்த்தனாரி இன்று சர்ச்சில் உளாள பொதுமக்களிடம் கைச்சின்னத்திற்கு வாக்கு கேட்டார் முதலில் ஸ்டெயின் மேரிஸ் கல்லூரியின் முதல்வர் அருளப்பன்யிடம் ஆசி பெற்றார் மேலும் பாதர் கூறும்பொழுது ஏழைகளின் சின்னம் கைச்சின்னம் உதயசூரியின் சின்னம் என்றும் கூறினார் கண்டிப்பாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று வேட்பாளருக்கு ஆசிர்வாதம் செய்தார் அருகில் சேலம் கிழக்கு மாவட்ட பொருளாளர் ஆத்தூர் ஆர். வி. ஸ்ரீராம் மற்றும் திமுக நிர்வாகிகள் தோழமைக் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.1
- நாமக்கல் மல்லசமுத்திரம் அருகே துத்திப்பாளையம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரி மின்கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தன அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்பு துறையினர் வந்து தீயணைத்தனர் இருந்தபோதிலும் லாரி முற்றிலும் எரிந்து நாசமாயின சிறிது நேரம் அப்பகுதியில் பதட்டம் நிலவியது1
- மணல் கொள்ளையர்களின் மனிதாபிமானம் திண்டுக்கல்லை அடுத்துள்ள மா.மூ.கோவிலூர் அருகே உள்ள அரசு சொந்தமான குளத்தில் அனுமதி இல்லாமல் மணல் கொள்ளையர்கள் 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி கிராவல் மண்ணை எடுத்துள்ளனர். சுரங்க பாதை அமைப்பது போன்று மண் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கருவேல மரத்தை விட்டு விட்டு அதை சுற்றி மண்ணை எடுத்துள்ளது இவர்களின் மனிதாபிமான செயலால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.1
- குளித்தலை அருகே பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தக்குடம் பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வை புதூர் பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு குளித்தலை கடம்பந்துறை ஆற்றில் இருந்து அழகு குத்துதல் தீர்த்த குடம் பால்குடம் எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக மங்கள மேளதாளங்கள் முழங்க வைபுதூரில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர் பின்பு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதில் வைபுதூர் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1