த.வெ.க சார்பில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட மாபெரும் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை மூலையில், த.வெ.க.சார்பில் கிழக்கு மாவட்ட மாபெரும் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை, எஸ்.வசந்த்கெவின், நைனா முகம்மது, சிறப்பு அழைப்பாளார், நட்சத்திர பேச்சாளர், மாநில ஒருங்கிணைப்பாளர் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி எஸ்.ரமேஷ் ஆகியோர் திமுக அரசின் அவலநிலையை கண்டித்து சிறப்புரையாற்றினர். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மேனலூர் எஸ்.கே.எம் ரமேஷ் அவர்களுக்கு திருவள்ளுவர் உருவ சிலை அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார், கிழக்கு மாவட்ட தலைவர் உதயகுமார் அவர்களுக்கும் திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டது. மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட சார்பு அணிகள் செய்யாறு நகர,மத்திய ஒன்றிய செயலாளர்கள் செய்யாறு, அனக்காவூர்,வெம்பாக்கம் ஒன்றியங்களிலிருந்து, வந்தவாசி நகரம் வந்தவாசி , தெள்ளார், பெரணமல்லூர் ஒன்றியங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் தேசூர் பேரூராட்சி மழையூர் ஒன்றியம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் சுமார் ஆயிரம் பேருக்கு மேலாக நிகழ்வில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிஸ்கட்டுகள், மிக்சர் தண்ணீர் பாக்கெட் வழங்கப் பட்டது இறுதியில் நன்றி உரை நகர செயலாளர் ராஜேஷ். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக் சிறப்பாக செய்திருந்தார்.
த.வெ.க சார்பில், திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட மாபெரும் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம்! திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை மூலையில், த.வெ.க.சார்பில் கிழக்கு மாவட்ட மாபெரும் கொள்கை பரப்பு பொதுக்கூட்டம் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை, எஸ்.வசந்த்கெவின், நைனா முகம்மது, சிறப்பு அழைப்பாளார், நட்சத்திர பேச்சாளர்,
மாநில ஒருங்கிணைப்பாளர் ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு அணி எஸ்.ரமேஷ் ஆகியோர் திமுக அரசின் அவலநிலையை கண்டித்து சிறப்புரையாற்றினர். திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மேனலூர் எஸ்.கே.எம் ரமேஷ் அவர்களுக்கு திருவள்ளுவர் உருவ சிலை அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார், கிழக்கு மாவட்ட
தலைவர் உதயகுமார் அவர்களுக்கும் திருவள்ளுவர் சிலை வழங்கப்பட்டது. மற்றும் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், மண்டல பொறுப்பாளர்கள், மாவட்ட சார்பு அணிகள் செய்யாறு நகர,மத்திய ஒன்றிய செயலாளர்கள் செய்யாறு, அனக்காவூர்,வெம்பாக்கம் ஒன்றியங்களிலிருந்து, வந்தவாசி நகரம் வந்தவாசி , தெள்ளார், பெரணமல்லூர் ஒன்றியங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர் மேலும் தேசூர்
பேரூராட்சி மழையூர் ஒன்றியம் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர் சுமார் ஆயிரம் பேருக்கு மேலாக நிகழ்வில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் பிஸ்கட்டுகள், மிக்சர் தண்ணீர் பாக்கெட் வழங்கப் பட்டது இறுதியில் நன்றி உரை நகர செயலாளர் ராஜேஷ். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திக் சிறப்பாக செய்திருந்தார்.
- ஸ்ரீபெரும்புதூர். ஸ்ரீபெரும்புதூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய நகரமன்ற தலைவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நகராட்சியில் இயங்கி வரும் நியாய விலைக் கடைகளில் இன்று தமிழக அரசால் பொங்கல் பண்டிகை ஒட்டி வழங்கப்படும் ரூ.3ஆயிரம் ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொப்பினை குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்ரீபெரும்புதூர் நகரமன்ற தலைவர் சாந்தி சதீஷ்குமார் வழங்கினார்.இந்நிகழ்வின் போது ஸ்ரீபெரும்புதூர் நகர திமுக செயலாளர் சதீஷ்குமார்,வார்டு கவுன்சிலர்கள்,திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.4
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்களை தரதரவென இழுத்து சென்ற போலீசார்1
- பாப்பாரப்பட்டியில் ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்ட தவெக-வினர் ரத்ததானம். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி ரமேஷ் என்பவர் கடந்த சில வருடங்களாக ரத்ததானம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு இன்று பாப்பாரப்பட்டியில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் தவெக தொண்டர்கள் கலந்து கொண்டு 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். மேலும் தவெக தலைவர் விஜய் கட்சி அரசியல் பயணத்தை தொடங்கியதிலிருந்து திரைப்படத்தில் நடிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது எங்களுக்கு மிகுந்த வேதனையாக உள்ளது. ஆனாலும் தலைவர் எடுத்துள்ள முடிவு மற்றும் அவர் செல்லும் பாதையில் துணை நின்று அவர் பயணம் வெற்றி பெற உறுதியாக இருப்போம் என தொண்டர்கள் தெரிவித்தனர். இந்த ரத்ததான முகாமில் தவெக நிர்வாகிகள் தொண்டர்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.1
- காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட பணை தொழிலாளர்கள் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த ஏ. சப்பானிபட்டியில் கடந்த 4ம் தேதி பணை தொழிலாளர்கள் கள் பொங்கல் திருவிழா நடத்தினர். அப்போது பணை மரம் ஏறிகள் கள் இறக்கி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கள் அருந்தி கள் ஒரு இயற்கை மருந்து, இயற்கை உணவு இதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பொங்கல் கள் திருவிழா நடத்தியது தொடர்பாக சுரேஷ், சரவணன், சாமிநாதன், மாது உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து காவல் நிலையத்திற்க்கு இன்று கொண்டு வந்தனர். இதனை கண்டித்து 200க்கும் மேற்பட்ட பணை தொழிலாளர்கள் காரிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு விடுதலை செய், விடுதலை செய், போடாதே, போடாதே பொய் வழக்கு போடாதே, கள் எங்கள் உணவு, கள் எங்கள் உரிமை என்று கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.1
- விலையில்லா வேட்டி சேலை உற்பத்தி ஆண்டு முழுவதும் மேற்கொள்ள வேண்டும். உற்பத்தியில் வெளிப்படை தன்மை வேண்டும். வேட்டி சேலை உற்பத்தி செய்தவர்களுக்கு 3 ஆண்டாக நிலுவையில் உள்ள தொகை மற்றும் சீருடை உற்பத்தி செய்தவர்களுக்கு 6 ஆண்டு நிலுவைத் தொகை ஆகியவற்றை உடனே வழங்க வேண்டும். என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில தலைவர் G.N. சுந்தரவேல் பேட்டி* இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நெசவாளர் அணி மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்செங் கோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நெசவாளர் அணி மாநில துணைத் தலைவர் டி.ஏ. கதிரேசன் தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் தேவராஜன் மாநில பொருளாளர் என்.காவேரி மாநில நிர்வாகி டி.ஆர்.கோதண்ட ராமன், காங்கிரஸ் கட்சி நாமக்கல் மாவட்டத் தலைவர் சர்வேயர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராககாங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கலந்து கொண்டார் கூட்டத்தில் ஈரோடு மாவட்டத் தலைவர் சி.மாரிமுத்து, நாமக்கல் மாவட்ட பொது செயலாளர் நந்தகோபால், மாவட்ட பொருளாளர் TST. பொன்னுசாமி, Ex மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி, மற்றும்சிவாஜி சேகர் தியாகராஜன் மயில்சாமி மாவட்ட நெசவாளர் அணி தலைவர் மாரிமுத்து, முன்னாள் மாவட்ட தலைவர் நவீத், பொன்முடி ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநில நெசவளார் அணித் தலைவர் G.N. சுந்தரவேல் கூறியதாவது. நெசவாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலை வாய்ப்பு கருதி விலை இல்லா வேட்டி திட்டம் தமிழக அரசால் கொண்டுவரப் பட்டது ஆனால் அந்த திட்டத்தின் கீழ் ஆண்டு முழுவதும் வேலை வழங்கப் படுவதில்லை. இரண்டு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது அந்த நிலையை போக்கி ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குகின்ற வகையிலே உற்பத்தி திட்டம் வழங்க வேண்டும். உற்பத்தி திட்டமானது வெளிப்படை தன்மையாக வழங்கப் படுவதில்லை. அது அனைத்து பகுதிகளிலும் புகாராக இருந்து வருகிறது. உற்பத்தி திட்டம் வழங்கப்படும் போது வெளிப்படை தன்மையாக வழங்க வேண்டும். மூன்று ஆண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. சீருடை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்ட துணிகளுக்கு ஆறாண்டுகளாக நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது எனவே இதையெல்லாம் உடனடியாக தமிழக அரசு கலைய வேண்டும் அரசே கொள்முதல் செய்து கூட்டுறவு சங்கங்களுக்கு உடனடியாக வழங்குவதன் மூலமாக நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை கூட்ட முடியும். எனவே வேட்டி வேலைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் .அடுத்து அனைத்து நெசவாளர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகையாகவும் உதவித்தொகையாகவும் மருத்துவ பயன்பாடு என்பது வசதி படைத்தவர்களுக்கு இருக்கின்ற ஒரு மருத்துவ பயன்பாடு போல ஒவ்வொரு எளிய மக்களுக்கும் அதே ரீதியாக மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும். அடுத்து ஆண்டு முழுவதும் ரிபேட் தள்ளுபடி தள்ளுபடி என்பது இப்போது 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது மேலும் 60 வயதை கடந்த அனைத்து நெசவாளர்களுக்கும் மாத ஓய்வூதியமாக ரூபாய் 3000 வழங்க வேண்டும் என இந்த கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசையும் தமிழக முதல்வர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறோம். என கூறினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியை எங்கள் தலைவர் முடிவு செய்வார். அவர் யாருடன் கூட்டணி என அறிவிக்கிறாரோ அவர்களுடன் இணைந்து பணியாற்றுவோம் என கூறினார்.1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து படித்துறை பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் படித்துறை பராமரிப்பு பணியினை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- ஸ்ரீபெரும்புதூர். ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு விருது தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் C.V. கணேசன், தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஆனந்த்துடன் இணைந்து, தமிழ்நாடு மாநில அளவிலான பாதுகாப்பு விருதை HMIL நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு துணைத் தலைவர் M.S.முகுந்தன் மற்றும் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வுத் துறை இணைத் துணைத் தலைவர் R.M.செந்தில்குமார் ஆகியோருக்கு வழங்கினர்.2
- தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா தர்மபுரி எம்பி ஆ மணி போட்டியை தொடங்கி வைத்தனர் தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக கழகம் தர்மபுரி நகர கழகம் கிழக்கு மேற்கு தருமபுரி மேற்கு ஒன்றியம் சார்பில் நடத்தும் மாபெரும் விளையாட்டுப் போட்டிகள் சமூக நீதிக்கான திராவிட பொங்கல் திருவிழா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வாலிபால் வாலிபால் கபடி தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் அ மணி அவர்கள் போட்டியினை தொடங்கி வைத்தனர் இந்த போட்டியில் முதல் பரிசு 15 ஆயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு பத்தாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு ரூ.5000 வழங்கப்படுகிறது இந்த போட்டி இரண்டு நாள் நடைபெறுகிறது இந்த போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டு விளையாடுகிறது இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடகம் சுப்பிரமணி .நகர செயலாளர். நாட்டான் மாது. கௌதம். தர்மபுரி ஒன்றிய கழக செயலாளர் காவேரி. நகர மன்ற உறுப்பினர்கள் மாதேஸ்வரன் ஜெகன். முல்லைவேந்தன் சுருளிராஜன். இளையராணி மாவட்ட இணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன். முன்னாள் நகர செயலாளர் அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1