logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

*தேனியில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு - ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்* தேனி பங்களாமேடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது முன்னதாக நந்தி பெருமானுக்கும் கிசன்னதில் அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக நடைபெற்றது பின்னர் சிவ பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும் நந்தி பெருமானுக்கு அருகம்புல் மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தன தொடர்ந்து சிவபெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து சோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்

6 hrs ago
user_Shakthi
Shakthi
Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
6 hrs ago

*தேனியில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு - ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்* தேனி பங்களாமேடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது முன்னதாக நந்தி பெருமானுக்கும் கிசன்னதில் அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக நடைபெற்றது பின்னர் சிவ பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும் நந்தி பெருமானுக்கு அருகம்புல் மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தன தொடர்ந்து சிவபெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து சோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் - நான்கு பேர் காயம். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் இருந்து பூமலைக்குண்டு செல்லும் சாலையில், காமாட்சிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து என்பவருக்குச் சொந்தமான 'அழகு பட்டாசு கடை' ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பட்டாசு கடையை அவர் நடத்தி வருகின்றார். இந்நிலையில், இரவில் எதிர்பாராத விதமாக கடையை மூடும் நேரத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்தபொழுது, அது பெரிய தீ விபத்தாக மாறியிருந்தது. இதனைத் தொடர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முற்றிலும் அனைத்தனர். இந்த விபத்தில் தீபாவளி விற்பனைக்கு என்று வைக்கப்பட்டிருந்த சுமார் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், இரண்டு பிக்கப் வாகனங்கள் ஆகியவை எரிந்து சாம்பலாகின. மேலும் இந்த விபத்தில் பட்டாசு கடையில் கடையில் இருந்த ஒரு பெண் உட்பட 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    1
    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே பட்டாசு கடையில் வெடி விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் - நான்கு பேர் காயம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் இருந்து பூமலைக்குண்டு செல்லும் சாலையில், காமாட்சிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அழகுமுத்து என்பவருக்குச் சொந்தமான 'அழகு பட்டாசு கடை' ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பட்டாசு கடையை அவர் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், இரவில் எதிர்பாராத விதமாக கடையை மூடும் நேரத்தில், பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து உள்ளே இருந்த அனைவரும் வெளியே வந்து பார்த்தபொழுது, அது பெரிய தீ விபத்தாக மாறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து உடனடியாகக் காவல்துறையினருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்புத் துறையினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை முற்றிலும் அனைத்தனர்.
இந்த விபத்தில் தீபாவளி விற்பனைக்கு என்று வைக்கப்பட்டிருந்த சுமார் பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள், இரண்டு பிக்கப் வாகனங்கள் ஆகியவை எரிந்து சாம்பலாகின.
மேலும் இந்த விபத்தில் பட்டாசு கடையில் கடையில் இருந்த ஒரு பெண் உட்பட 4 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து ஓடைப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
  • ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு ஆடுகள் விற்பனை தீவிரம்
    1
    ஆண்டிப்பட்டி ஆட்டு சந்தையில் தீபாவளியை முன்னிட்டு
ஆடுகள் விற்பனை தீவிரம்
    user_VIGNESH
    VIGNESH
    Photographer ஆண்டிபட்டி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம் பணியாளர் பெண் உட்பட நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான அழகு என்பவர் தனியார் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார். தற்போது தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக கடை மற்றும் கடையின் அருகில் உள்ள குடோனில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். தீபாவளி பண்டிகைக்காக சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகளை வாங்குவதற்காக நள்ளிரவு என்றும் பாராமல் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் உள்பட நான்கு பணியாளர்கள் இரவு நேர வியாபாரத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கடையில் தீப்பற்றி எரிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது. இதனைப் பார்த்த கடையில் பணிபுரிந்த பணியாளர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர். மேலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் கடையில் பணிபுரிந்த பெண் உள்பட நான்கு பணியாளர்களும் லேசான காயங்களுடன் தப்பி வந்துள்ளனர். மேலும் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விடிய விடிய கடை மற்றும் குடோனில் பற்றி எரியும் தீயினை கம்பம் சின்னமனூர் உள்பட நான்கு தீயணைப்பு நிலையத் துறையினர் தீயை அணைத்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை தீபாவளி தினம் உள்ள சூழ்நிலையில் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
    1
    சின்னமனூர் அருகே
 நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே
நள்ளிரவில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதம்
பணியாளர் பெண் உட்பட நான்கு பேர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தீயணைப்புத் துறையினர் தீவிரமாக பற்றி எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சி புரத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் திமுக பிரமுகருமான அழகு என்பவர் தனியார் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார்.
தற்போது தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு பட்டாசுகளை விற்பனை செய்வதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்வதற்காக கடை மற்றும் கடையின் அருகில் உள்ள குடோனில் வைத்து விற்பனை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக சுற்றுவட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பட்டாசுகளை வாங்குவதற்காக நள்ளிரவு என்றும் பாராமல் வருகை தந்த வண்ணம் இருந்துள்ளனர்.
இந்நிலையில் ஒரு பெண் உள்பட நான்கு பணியாளர்கள் இரவு நேர வியாபாரத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு கடையில் தீப்பற்றி எரிந்து பட்டாசுகள் வெடிக்க துவங்கியுள்ளது.
இதனைப் பார்த்த கடையில் பணிபுரிந்த பணியாளர்களும் பட்டாசுகளை வாங்குவதற்காக வந்திருந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்து ஓடியுள்ளனர்.
மேலும் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்ததால் 
கடையில் பணிபுரிந்த பெண் உள்பட நான்கு பணியாளர்களும் லேசான காயங்களுடன் தப்பி வந்துள்ளனர்.
மேலும் பட்டாசு வாங்க வந்த வாடிக்கையாளர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வாடிக்கையாளர்கள் தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரும் தீயணைப்பு துறையினரும் காயம் அடைந்தவர்களை மீட்டி சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் விடிய விடிய கடை மற்றும் குடோனில் பற்றி எரியும் தீயினை கம்பம் சின்னமனூர் உள்பட நான்கு தீயணைப்பு நிலையத் துறையினர்  தீயை அணைத்து வருகின்றனர்.
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறி சேதமாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக உத்தமபாளையம் டிஎஸ்பி சந்திரசேகர் மற்றும் கோட்டாட்சியர் சையது முகமது மற்றும் ஓடைப்பட்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை தீபாவளி தினம் உள்ள சூழ்நிலையில் பட்டாசு கடையில் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து வருகின்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது .
    user_SARAVANAN K
    SARAVANAN K
    Local News Reporter தேனி, தேனி, தமிழ்நாடு•
    5 hrs ago
  • திண்டுக்கல் மாவட்டம் டாஸ்மாக் கடைகள் தொழில்நுட்ப காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், திறந்துள்ள மற்ற கடைகளில் நீண்ட வரிசையில் மதுவை காத்திருந்து வாங்கிச் செல்லும் மது பிரியர்கள்.
    1
    திண்டுக்கல் மாவட்டம் டாஸ்மாக் கடைகள்  தொழில்நுட்ப காரணமாக பல கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில்,
 திறந்துள்ள  மற்ற கடைகளில்  நீண்ட வரிசையில் மதுவை காத்திருந்து வாங்கிச் செல்லும் மது பிரியர்கள்.
    user_Gayathri devi Gayathri
    Gayathri devi Gayathri
    Teacher கொடைக்கானல், திண்டுக்கல், தமிழ்நாடு•
    17 hrs ago
  • திண்டுக்கல் மதுக்கடையில் தொழில்நுட்பக் கோரல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன தற்பொழுது மது கடைகள் திறக்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து மதுக்களை வாங்கிச் செல்லும் மது பிரியர்கள்
    1
    திண்டுக்கல் மதுக்கடையில் தொழில்நுட்பக் கோரல் காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டன தற்பொழுது மது கடைகள் திறக்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்துக் கிடந்து மதுக்களை வாங்கிச் செல்லும் மது பிரியர்கள்
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    19 hrs ago
  • தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் மல்லிகைப் பூ விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ ரூ.2,000-க்கு விற்பனை திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கலிக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, மல்லிகைப் பூ தேவை அதிகரித்ததன் காரணமாக ஒரு கிலோ ரூ.2,000 வரை விற்பனையாகி வருகிறது. மேலும் கனகாம்பரம் பூ தட்டுப்பாடு காரணமாக கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை உச்சத்தைத் தொட்டுள்ளது. இதேபோல், பண்டிகைக் கால வழிபாட்டிற்குப் பயன்படும் பிற பூக்களான அரளி மற்றும் சிகப்பு அரளி கிலோ ரூ.200 முதல் ரூ.400 வரையிலும், சம்மங்கி கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரையிலும், பன்னீர் ரோஸ் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரையிலும், விருச்சிப் பூ கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையிலும், சிகப்பு செண்டுமல்லி கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், செண்டுமல்லி கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரையிலும், கோழிக்கொண்டைப் பூ கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை வழிபாட்டிற்காகவும் மாலைகள் கட்டுவதற்காகவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். பூக்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    1
    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல்லில் மல்லிகைப் பூ விலை கிடுகிடு உயர்வு: ஒரு கிலோ ரூ.2,000-க்கு விற்பனை
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான அண்ணா வணிக வளாகத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள வெள்ளோடு, சிறுநாயக்கன்பட்டி, கலிக்கம்பட்டி, செம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து நாள்தோறும் டன் கணக்கில் பூக்கள் இங்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. 
இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளதால் அவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 
குறிப்பாக, மல்லிகைப் பூ தேவை அதிகரித்ததன் காரணமாக ஒரு கிலோ ரூ.2,000 வரை விற்பனையாகி வருகிறது. மேலும் கனகாம்பரம் பூ தட்டுப்பாடு காரணமாக கிலோ ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை உச்சத்தைத் தொட்டுள்ளது.
இதேபோல், பண்டிகைக் கால வழிபாட்டிற்குப் பயன்படும் பிற பூக்களான அரளி மற்றும் சிகப்பு அரளி கிலோ ரூ.200 முதல் ரூ.400 வரையிலும்,
சம்மங்கி கிலோ ரூ.130 முதல் ரூ.150 வரையிலும்,
பன்னீர் ரோஸ் கிலோ ரூ.70 முதல் ரூ.100 வரையிலும், விருச்சிப் பூ கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரையிலும்,
சிகப்பு செண்டுமல்லி கிலோ ரூ.60 முதல் ரூ.80 வரையிலும்,
செண்டுமல்லி கிலோ ரூ.40 முதல் ரூ.60 வரையிலும்,
கோழிக்கொண்டைப் பூ கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளிப் பண்டிகை வழிபாட்டிற்காகவும் மாலைகள் கட்டுவதற்காகவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். 
பூக்களுக்கு நல்ல விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    user_திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் செய்திகள்
    திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல், தமிழ்நாடு•
    8 min ago
  • தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி நகர் மன்ற தலைவர் வாழ்த்து நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த நகர் மன்ற தலைவர் கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் நகர்மன்ற தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவ இளங்கோ, மகேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர் வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 07.11.2026
    4
    தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி நகர் மன்ற தலைவர் வாழ்த்து 
நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்த நகர் மன்ற தலைவர்
கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகர் மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம்  மற்றும் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர்  புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் நகர்மன்ற தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிவ இளங்கோ, மகேந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்
வால்பாறை செய்தியாளர் ரவிச்சந்திரன் 
07.11.2026
    user_Is ravichandran
    Is ravichandran
    வால்பாறை, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    4 hrs ago
  • *தேனியில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு - ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்* தேனி பங்களாமேடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது முன்னதாக நந்தி பெருமானுக்கும் கிசன்னதில் அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக நடைபெற்றது பின்னர் சிவ பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும் நந்தி பெருமானுக்கு அருகம்புல் மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தன தொடர்ந்து சிவபெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து சோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது இதில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்
    1
    *தேனியில் பிரதோஷ தினத்தை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு - ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்*
தேனி பங்களாமேடு பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனை நடைபெற்றது 
முன்னதாக நந்தி பெருமானுக்கும் கிசன்னதில் அருள் பாலிக்கும் சிவபெருமானுக்கும் பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல வித திரவியங்கள் கொண்டு சிறப்பாக நடைபெற்றது 
பின்னர் சிவ பெருமானுக்கு வஸ்திரம் கட்டி வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும் நந்தி பெருமானுக்கு அருகம்புல் மாலைகளாலும் மலர் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி தந்தன 
தொடர்ந்து சிவபெருமானுக்கு தூபம் காட்டப்பட்டு மகாதீபாராதனை, நட்சத்திர தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து சோடச உபசாரம் நடத்தி பஞ்ச கற்பூர ஆரத்தி உடன் தீபாராதனை காட்டப்பட்டது 
இதில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரதோஷ தினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்தனர்
    user_Shakthi
    Shakthi
    Local News Reporter பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    6 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.