தருமபுரியின் நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்” – எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி பேட்டி: அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கு தருமபுரியில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பயிற்சிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவதாகவும், அவர்களின் கோரிக்கையை ஏற்று அனைத்து வகையான குறைபாடுகளைக் கொண்ட மாற்றுத்திறனாளிகளும் அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்கும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என அனைத்து அமைச்சர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெறும் வாலிபால் உள்ளிட்ட அனைத்து அணிகளையும் மாநில போட்டிக்கு பாகுபாடு இன்றி தேர்வு செய்ய வேண்டும் எனவும், தனியார் பள்ளி கல்லூரிகளில் பணியாற்றி வரும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே தங்களது கோரிக்கை என்றும், இதுதொடர்பான கோரிக்கைகளை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளதாகவும், அவர்கள் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். தருமபுரி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு போதிய விளையாட்டு மைதானங்கள் மற்றும் நவீன உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற குறைபாடு குறித்து பேசியவர், தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் விளையாட்டு வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும், இதுதொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் தருமபுரி விளையாட்டு மைதானத்திற்கு வந்து விளையாடி வருவதாகவும், அவர்களுக்கு தேவையான கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், இதற்கும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். தருமபுரி பழைய பேருந்து நிலையம் மீண்டும் செயல்படுவதில் பிரச்சினை ஏற்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, மக்களின் நலனுக்காக தேவைப்பட்டால் உச்சநீதிமன்றத்தையும் பாட்டாளி மக்கள் கட்சி நாடும் என சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் தருமபுரி மாவட்டத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளான காவிரி உபரி நீர் திட்டம் மற்றும் சிப்காட் திட்டம் குறித்து தமிழக அரசின் உறுதியான முன்னேற்றம் என்ன என கேட்டபோது, தருமபுரி மாவட்டத்திற்கு தேவையான இந்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும், இதற்கான நிதியை ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக அமைச்சர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை தமிழக அரசு கூடிய விரைவில் வெளியிட வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

- புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! புதிய சட்டமன்றம் தேவை: தர்மபுரியில் சௌமியா அன்புமணி எம் எல் ஏ பேட்டி! தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமை வகித்தார் ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார் நிகழ்ச்சியில் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் வெற்றிவேல், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சௌமியா அன்புமணி தர்மபுரி மாவட்டத்தில் அதிகப்படியாக குடிநீர் பிரச்சனை சாலை சாக்கடை கால்வாய் தூர் வராப்படாமல் உள்ளது இதனை உடனடியாக சீரமைக்க கோரி பேசினேன். சாக்கடை கால்வாய் களை உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் அதே போல சனத்குமார் நதியில் பாதாள சாக்கடை கழிவுகளை சுத்தம் செய்து கலக்க வேண்டும் என தெரிவித்துள்ளேன். அதற்கும் ஆவன செய்வதாக கலெக்டர் தெரிவித்துள்ளார் தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் சாலை பணி இரண்டு வருடத்திற்குள் பணிகள் நிறைவடைந்து விடும். மொரப்பூர் தர்மபுரி ரயில் திட்டத்தில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி என்பது சதவீதம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனவரி மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து ரயில்வே வசம் ஒப்படைக்கப்படும் இரண்டு மூன்று ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கப்பட்டு திட்டம் நிறைவடையும் என்றார். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்து தண்ணீர் வழங்க வேண்டும் ஆழ்துளை கிணறுகள் சீரமைக்கப்பட்டு தண்ணீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளேன். அதேபோல பல துறைகளில் காலிப் பணியிடங்கள் உள்ளது காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளேன். மின் தட்டுப்பாடு நிலவுகிறது காலை ஆறு மணியிலிருந்து பத்து மணி வரை தடையின்றி மின்சாரம் வழங்க எம்பி மணி பேசி உள்ளார். மேலும் தமிழகத்தில் புதிய சட்டசபை அவசிய தேவை. சட்டசபை நிர்வாக அலுவலர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால் பணிகள் விரைந்து செயல்படுத்த வசதியாக இருக்கும் என்றார். இந்நிகழ்ச்சியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரியில் மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகம் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரின் திருவுருவப்படத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் சுரேஷ் மாலை அணிவித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.1
- மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டம் 2 முதல் 3 ஆண்டுகளில் நிறைவு பெறும் – சௌமியா அன்புமணி தருமபுரி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மணி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சரவணன் முன்னிலை வகித்தார். இதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு மக்கள் பிரச்சனைகள் குறித்து வலியுறுத்தினர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி, மாவட்டத்தில் குடிநீர், சாலை மற்றும் சாக்கடை கால்வாய் பிரச்சனைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்ததாக தெரிவித்தார். மொரப்பூர்–தருமபுரி ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சுமார் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், ஜனவரி மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்வே நிர்வாகத்திடம் நிலம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறினார். அதன் பின்னர் 2 முதல் 3 ஆண்டுகளில் ரயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சௌமியா அன்புமணி தெரிவித்தார். மேலும், தொப்பூர் உயர்மட்ட மேம்பாலம் மற்றும் சாலைப் பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.1
- தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக சௌமியா அன்புமணி பேட்டி தருமபுரி மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தருமபுரி மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு அதிகளவில் நடைபெற்று வருவதால், ஆவின் பால் கொள்முதல் கூட்டுறவு சங்கங்கள் கால்நடை வளர்ப்போருக்கு கூடுதல் கவனம் செலுத்தி, பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் சிரமங்களை சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.1
- கிருஷ்ணகிரி மாவட்டம் , சிறந்த மாவட்ட ஆட்சியாளர் திரு தினேஷ்குமார் I.A.S அவர்கள் கவனத்தில் இந்த நிலைப்பாடு தவிர்க்க வேண்டும்..அரசு செய்யாததை பள்ளி மாணவர்கள் செய்து தான் போக வேண்டும் என்ற நிலையை புரிந்து அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்படுகிறது1
- வெள்ளிச்சந்தையில் செளமியா அன்புமணி எம்.எல்.ஏ. முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் 110 பேர் பாமகவில் இணைந்தனர்.1
- திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார் 148 வது பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு! திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தந்தை பெரியார் அவர்களின் 148-வது பிறந்தநாளை முன்னிட்டு, சமூக நீதி நாள் உறுதிமொழியினை மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.வீ.இரஞ்சித்குமார் தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் திருப்பதி முன்னிலையில் 17.09.2026 அன்று பல்வேறு அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சௌ.தமிழரசி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கஸ்தூரி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.2
- பாலக்கோட்டில் பாஜக சார்பாக பிரதமர் மோடியின் 76 வது பிறந்தநாள் விழா பாலக்கோட்டில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். பாலக்கோடு நகர பாஜக சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் நகர பொதுசெயலாளர் ஜெய்கணேஷ், நகர பொருளாளர் முனியப்பன், ஓ.பி.சி.அணி நகர செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். நகர அமைப்பாளர் பெரியசாமி,மாவட்ட பொது செயலாளர் சங்கீதா, மாவட்ட துணைத் தலைவர் முனிராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்களை வழங்கினார். தொடர்ந்து பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களை வாழ்த்தி கோஷமிட்டு ஆராவாரமாக பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் வேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், நிர்வாகிகள் செல்வம், செந்தில், அண்ணாமலை, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.1