கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே டி-சுப்புலாபுரம் கிராமத்திலுள்ள 190 ஆண்டுகள் பழமையான கந்தநாதன் கோவிலில் சிறப்பு அபிசேகம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தநாதர் கோவில் அமைந்துள்ளது.இந்த திருக்கோயிலில் இன்று "கடக ராசியில்" இருந்து "சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது.முன்னதாக கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டும் பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டும் யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.தொடர்ந்து குரு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள கொண்டும், பூஜிக்கப்பட்ட கலச நீராலும் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து குரு பகவானுக்கு வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின் குரு பகவானுக்கு தீபம் காட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.குரு பகவானுக்காக நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் டி-சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்து சென்றனர். அதனைத் தொடர்ந்து கந்தநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை காட்டப்பட்ட நிலையில் பொதுமக்கள் கந்தநாதரையும் சாமி தரிசனம் செய்தனர்.
கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே டி-சுப்புலாபுரம் கிராமத்திலுள்ள 190 ஆண்டுகள் பழமையான கந்தநாதன் கோவிலில் சிறப்பு அபிசேகம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தநாதர் கோவில் அமைந்துள்ளது.இந்த திருக்கோயிலில் இன்று "கடக ராசியில்" இருந்து "சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது.முன்னதாக கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டும் பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டும் யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.தொடர்ந்து குரு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள கொண்டும், பூஜிக்கப்பட்ட கலச நீராலும் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து குரு பகவானுக்கு வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின் குரு பகவானுக்கு தீபம் காட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.குரு பகவானுக்காக நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் டி-சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்து சென்றனர். அதனைத் தொடர்ந்து கந்தநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை காட்டப்பட்ட நிலையில் பொதுமக்கள் கந்தநாதரையும் சாமி தரிசனம் செய்தனர்.
- உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது1
- உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும், ஆண்டிபட்டி அருகே மகா சூலிணி துர்க்கை ஹோமவிழா நிகழ்ச்சி நடைபெற்றது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகவதி அம்மன் , ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவிலில் கடந்த புரட்டாசி மாதம் 24 ஆம் தேதி முதல் நேற்று வரை நவராத்திரி கொலு விழா விமரிசையாக நடைபெற்ற நிலையில் இன்று ஸ்ரீ மகா சூலிணி துர்க்கை ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், தொழில் வளம் பெருக வேண்டியும் கோவில் முன்பு குண்டம் வைத்து சிறப்பு யாகம் வளர்த்து நடைபெற்ற இந்த நிகழ்வில் நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்1
- சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் 3வது நாளாக தொடர் தடை தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் மூன்றாவதுநாளாக தொடர் தடை அருவியில் தண்ணீர் வரத்து சீராகும் வரை அருவி பகுதிக்கு யாரும் வரவேண்டாம் என அறிவிப்பு தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் வனச்சரணலாயத்தில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் சுருளி அருவி அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் ஆன்மீக தலமாகவும் உள்ள இந்த சுருளி அருவிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் வருகை தந்து அருவியில் குளித்துவிட்டு அங்குள்ள சிவாலயங்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுருளி அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரிசி பாறை, ஈத்தக்காடு, தூவானம் அணை, வென்னியாறு மற்றும் சுருளி அருவியின் ஆற்றுப்படுகை பகுதிகளில் வடகிழக்குப் பருவ மழை தீவிரம் அடைந்து மழை பொழிவு ஏற்பட்டுள்ளதால் அருவிக்கு வரும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி அருவியில் மூன்றாவது நாளாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தொடர் தடை விதித்துள்ளனர். மேலும் நீர்வரத்து சீராகும் வரை சுருளி அருவிப்பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். சுருளி அருவிப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவியில் குளிப்பதற்காக வருகை தந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.1
- E.மகேஷ்வரன் தேனி 20.10.2026 Visual: jaya district Vis Group ல் உள்ளது. ஆன்மீக வழியில் ஆண்ட அஇஅதிமுக மீண்டும் அமைக்க பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்றினைய வேண்டும், கோயில்களில் மதிய உணவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய அம்மாவின் ஆட்சி அமைய பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் அம்மா ஆட்சி அமையும்: ஆன்மீக வழியை திமுக ஏற்றால் அதிமுக திமுக கூட்டணி வைக்க சம்மதிக்கலாம் என சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் பேட்டி தேனி மாவட்டம் கம்பத்தில் இறைவி நுண்கலை பயிற்சி பள்ளி சார்பில் இயல் இசை நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகள் தனிய தனியா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குன்றக்குடி அடிகளாரும், தருமபுரம் ஆதீனத்தின் சார்பில் தவத்திரு ஸ்ரீலஸ்ரீ சொக்கலிங்க தம்பிரான் அவர்களும் பங்கேற்று சிறப்புரையாற்றினர். குன்றக்குடி அடிகளாருக்கும். தருமபுரம் ஆதீனத்திற்கும் ருத்ர பூஷன் விருதும் நினைவு பரிசையும் சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சிவக்குமார் என்ற ருத்ரபாபு வழங்கினார். செய்தியாளர்களை சந்தித்த சிவக்குமார், கிறித்தவ இஸ்லாமியர்களை போல் இந்து மயானங்களை புனிதமாக கருதி தூய்மைபடுத்தி வருவதாகவும், குடிநீர் கழிப்பறை வசதி செய்து வருவதாகவும், இதுபோல அனைத்து மாநில அரசுகளும் இந்து மயானங்களை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார மேலும், ஆன்மீக பாதையிலும் செல்லும் அஇஅதிமுக ஆட்சியில் திருக்கோயில்களில் மதிய அன்னதான திட்டத்தை நிறைவேற்றியவர் அம்மா என புகழாரம் சூட்டினார். ஆன்மீக பாதையிலும் செல்லும் செல்லும் அஇஅதிமுகவுடன் கூட்டணி வைக்க திமுக திட்டமிட்டால் ஆன்மீக பாதையை திமுக விரும்பினால் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என கருத்து தெரிவித்தார். தொடர்ந்து தோல்விகளை கண்டு தேய்ந்து வரும் அஇஅதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும், ஒன்றிணைந்தால் மீண்டும் அஇஅதிமுக ஆட்சி அமைப்பது நிச்சயம் என்றார் பேட்டி:திரு, N.சிவக்குமார் என்ற ருத்ரபாபு : நிறுவன தலைவர். சிவசேனா ஆன்மீக பகுத்தறிவு அறக்கட்டளை1
- திண்டுக்கல்-பழனி ரோடு முத்தழகுப்பட்டி பிரிவு அருகே கருணாநிதி நகர் பகுதியில் பொதுமக்களுக்கு நான்கு மாத காலமாக குடிநீர் வராத காரணத்தால் அதை கண்டித்து காலி குடங்களுடன் பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் மறியல் செய்தனர் இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது1
- ஸ்ரீராமபுரம் பேரூராட்சி தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா கோலாகலம்திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் தலைமையில் பல்வேறு பகுதிகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்! திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ஸ்ரீராமபுரம் பேரூராட்சியில் அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகக் கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜை விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் எம்.எல். வாசுதேவன் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் கட்சி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, ஸ்ரீராமபுரம் பேரூராட்சிச் செயலாளர் அருள்குமார் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி இணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் விவின் குமார், துணைச் செயலாளர் முத்துகுமார், மகளிர் அணி நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள், தொண்டர் அணி நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி, கட்சி அலுவலகத்தில் ஆயுத பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவராகச் சென்று இறைவனை வழிபட்டு, விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து, விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடலைச் சுண்டல், பழ வகைகள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கட்சியின் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆயுத பூஜை விழா, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆத்தூர் மற்றும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆயுத பூஜை விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.1
- 🗡️🪔 மதுரை ஜெயந்திபுரம் ஆயுத பூஜை சிறப்புச் செய்திகள்! நம்ம ஊரான மதுரையில் ஆயுத பூஜை மற்றும் விஜய தசமி திருவிழா மிகவும் கோலாகலமாகத் கொண்டாடப்பட்டு வருகிறது. நகரின் முக்கிய வீதிகளிலும், மார்க்கெட்டுகளிலும் பூக்கள், அவல், பொரி, சுண்டல் மற்றும் பூஜை பொருட்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.பஸ் நிலையங்கள், ஆட்டோக்கள், கடைகள் மற்றும் அலுவலகங்களில் அவரவர் ஆயுதங்களையும், வாகனங்களையும் கழுவி மலர்களால் அலங்கரித்து சிறப்புப் பூஜைகள் செய்து வருகின்றனர். மேலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் கொலு பொம்மைகள் வைத்தும், ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன1
- கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி ஆவதை முன்னிட்டு ஆண்டிபட்டி அருகே டி-சுப்புலாபுரம் கிராமத்திலுள்ள 190 ஆண்டுகள் பழமையான கந்தநாதன் கோவிலில் சிறப்பு அபிசேகம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் 190 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தநாதர் கோவில் அமைந்துள்ளது.இந்த திருக்கோயிலில் இன்று "கடக ராசியில்" இருந்து "சிம்ம ராசிக்கு" குரு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு சிறப்பு வழிபாடு பூஜை நடைபெற்றது.முன்னதாக கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் பலவித மூலிகை பொருட்கள் கொண்டும் பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டும் யாகம் சிறப்பாக வளர்க்கப்பட்டது.தொடர்ந்து குரு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட பலவித திரவியங்கள கொண்டும், பூஜிக்கப்பட்ட கலச நீராலும் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து குரு பகவானுக்கு வண்ணமலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.பின் குரு பகவானுக்கு தீபம் காட்டப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.குரு பகவானுக்காக நடைபெற்ற இந்த சிறப்பு வழிபாட்டில் டி-சுப்புலாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குருபகவானை தரிசனம் செய்து சென்றனர். அதனைத் தொடர்ந்து கந்தநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனை காட்டப்பட்ட நிலையில் பொதுமக்கள் கந்தநாதரையும் சாமி தரிசனம் செய்தனர்.1