புல்லட் பைக் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் தருமபுரி அருகே இரண்டு நபர்கள் புல்லட் பைக் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல். தருமபுரி காந்தி நகரை சேர்ந்த பாரத ஜனதா கட்சி தருமபுரி இளைஞர் அணி தலைவர் விக்னேஷ் என்பவர் வழக்கம்போல் நேற்று இரவு புல்லட் வாகனத்தை வீட்டு முன்பு நிறுத்திவிட்டு உறங்கச் சென்றுள்ளார். மேலும் மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனம் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்த நிலையில் விக்னேஷ் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது இரண்டு நபர்கள் வீட்டின் முன்பு நின்று அக்கம் பக்கத்தினர் யாராவது இருக்கிறார்களா என்று நோட்டமிட்டு பின்பு காலால் சைடு லாக்கை உடைத்து புல்லட் வாகனத்தை தள்ளி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனை அடுத்து தர்மபுரி நகர காவல் நிலையத்தில் வினேஷ் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கட்சியில் பதிவாகி இருப்பது யார் என்பதை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இந்த பகுதியில் அரசு ஊழியர்கள், அரசு பிரமுகவர்கள் என ஏராளமானோர் உள்ளதால் வாகனங்களை நிறுத்த மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

- பென்னாகரம் அருகே தொடர் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை சாலை மறியல தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் உரிய பதிலளிக்காமல் சென்றதால், ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், மின்வாரிய அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஏரியூர் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தின் காரணமாக, சுமார் ஒரு மணி நேரம் ஏரியூர் பென்னாகரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது1
- திமுக தொண்டர் அணி அமைப்பாளருக்கு அறிவாள் வெட்டு, காவல்த்துறையினர் விசாரணை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் 7வது வார்டு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், முன்னாள் நகர் மன்ற உறுப்பினரான இவர் திமுகவில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளராக பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது மகன் கடந்த 15 தினங்களுக்கு முன்பு காணாமல் போய் உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்களுக்கும், ஆறுமுகத்திற்கும் மகன் காணாமல் போனது தொடர்பாக வாக்குவாதம் இருந்து வந்துள்ளது. இதனை காரணம் காட்டி வீட்டிலிருந்த ஆறுமுகத்தை மர்ம நபர்கள் சிலர் அறிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஆறுமுகம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காவல்த்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.1
- கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு மார்கழி மாத சங்கடஹரா சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மூலவர் கணபதி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆலயம் வந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.1
- திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோவில் வீதி அருகே உள்ள மாநகராட்சி பூ மார்க்கெட்டில், தூய்மை பணியில் ஈடுபட்டு இருந்த லட்சுமி என்ற தூய்மை பணியாளரை பூக்கடை உரிமையாளர் நல்லசாமி என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தூய்மை பணியாளர்கள், கடையை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.1
- திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் வட்டம் இனம் கல் பாளையம் கிராமத்தில் பள்ளி எதிரே குப்பை போல் குறைந்திருக்கும் குப்பைகள் பலமுறை அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்து இன்னும் ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை பள்ளி மாணவ மாணவிகள் பொதுமக்கள் மிகவும் அச்சமடைகிறார்கள் அரசு அதிகாரிகள் கண்டு கொள்வாரா பொறுத்திருந்து பார்ப்போம்2
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக தொடர் மின்வெட்டு உள்ளது. தினமும் 10 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. தொடர் மின்வெட்டின் காரணமாக விவசாயிகள் தொழிலாளர்கள் கடும் வேதனை. இதனை கண்டித்து இன்று 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஏரியூர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.1
- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட கூத்தப்பாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில தினங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பொழியும் பருவமழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து அதிகரிப்பதும் சரிவதுமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக 1,000 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று (ஜன.06) செவ்வாய்க்கிழமை காலை 11 மணி நிலவரப்படி வினாடிக்கு 3000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதாக, மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1