Shuru
Apke Nagar Ki App…
திண்டுக்கல்லில் கிறிஸ்தவர்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் தொடக்கம் திருநீற்றுப் புதன் (Ash Wednesday) என்பது சாம்பல் புதன் என்றும், விபூதிப் புதன் என்றும் அழைக்கப்படுவதுண்டு. நாற்பது நாள் நீடிக்கின்ற தவக் காலத்தின் முதல் நாள் இதுவே திருநீற்றுப் புதனிலிருந்து 46-ம் நாளாக உயிர்த்தெழுதல் விழா கொண்டாடப்படும். ஈஸ்டர் பண்டிகைக்கு முன், இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூரும் வகையில் 40 நாட்கள் நோன்பு மற்றும் தவக்காலம் சாம்பல் புதனுடன் இன்று தொடங்கியது. திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் சாம்பல் புதன் வழிபாடுகள், சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தவக்காலத்தின் தொடக்க நிகழ்வில் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
Natarajan Pitchaimani

More news from தமிழ்நாடு and nearby areas
- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட திமுகவின் பாடல் பாட்டாளி சமூக ஊடகப் பேரவை ஆலோசனைக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட காணொலி...1
- திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சங்காராட்டிகோட்டையில் கருப்பசாமி என்பவரின் பசுமாடு அவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடியது. தகவல் அறிந்த வத்தலகுண்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை உயிருடன் மீட்டு கருப்பசாமியிடம் ஒப்படைத்தனர் கிணற்றில் தண்ணீர் இல்லாததால் மாட்டிற்கு காயம் ஏற்பட்டது.1
- திண்டுக்கல் மாவட்டம் தவசிமடை ஊராட்சி விராலிப்பட்டியில். சக்தி கேந்திர அளவிலான. மக்கள் சந்திப்பு தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் . நடைபெற்றது இதில் பாஜக என் ஜி ஓ பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் உரையாற்றினார்1
- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா குளத்துபட்டி அரசு மகளிர் கலை கல்லூரியில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது சுமார் 4 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் கட்டிடத்திற்கு நிலக்கோட்டை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் கரிகால பாண்டியன் கலந்து கொண்டு பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சக்தி ஸ்ரீ தலைமை வகித்தார். மேலும் இவ்விழாவில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திமுக முக்கிய பிரமுகர்களான சேசுராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மலையாளம் துணை அமைப்பாளர் கந்த பிரபு, கல்லூரி பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகாமையில் உள்ள கருங்குளம் முதல் வண்ணாந்துரை வரை உள்ள விவசாய விலை நிலங்களுக்கு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது, நெல் அறுவடை காலம் என்பதால் விளைந்த நெல்களை அவ்வழியாக கொண்டு வருவதற்கு கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் கவனம் செலுத்தி சாலையை பராமரிப்பு செய்து தந்து உதவிட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.1
- திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இன்று சாம்பல் பூதம் தினத்தை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை பேராயர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று முதல் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது தவக்காலத்தை இந்தப் பிரார்த்தனையுடன் துவங்கினார்கள்.1
- முன்னாள் மதுரை துணை மேயரும் திமுக பிரமுகருமன பி.எம். மன்னன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்தார்1
- திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அதிகாலை நேரத்தில் சாலையில் மரம் முறிந்து விழுந்தது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரத்தை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாலை நேரம் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது1