Shuru
Apke Nagar Ki App…
அன்பரசு
More news from தமிழ்நாடு and nearby areas
- Post by Corp M4
- 2026 சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான SVEEL விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கோலப்போட்டி நடைபெற்றது... 2026 சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் 100% வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது... அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சட்டமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவுக்கான SVEEP விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்... இதே போல் எடப்பாடி நகராட்சி அலுவலகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு 100% வாக்குப்பதிவுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.இக்கால போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் நடராஜன் பாராட்டு சான்றிதழை வழங்கினார்... இதில் நகராட்சி ஆணையாளர் கோபிநாத் மற்றும் அனைத்து துறை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உடன் இருந்தனர்...1
- மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் பங்குனிப் பெருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பட்டாபிஷேகம் இன்று (ஏப்.3) முருகனுக்கு கோவிலுக்குள் ஆறு கால் மண்டபத்தில் நடைபெற்றது. நாளை திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது . திருப்பரங்குன்றம் பங்குனிப்பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பட்டாபிஷேகத்தை முன்னிட்டு உற்சவர் சுப்பிரமணியசுவாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடைபெற்றன. திருப்பரங்குன்றம் மலையை சுற்றி பச்சைக்குதிரை ஓட்டம் முடிந்த பின், பச்சை குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள ஆறுகால் மண்டபத்தில் சுவாமிக்கு தங்ககிரீடம் சூட்டப்பட்டு, திருக்கரத்தில் நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி, சேவற்கொடி சாற்றி பட்டாபிஷேகம் நடைபெற்றது. சுவாமியின் பிரதிநிதியாக ஸ்தானிகப் பட்டர் செங்கோலுடன், சேவல்கொடியேந்தி கோயில் பிரகாரத்தை வலம் வந்தார். சுப்பிரமணிய சுவாமி தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி பகல் 12.00 மணிக்குமேல் 12:20 மணிக்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.1
- தர்மபுரி மாவட்டத்தில் புனித வெள்ளி நிகழ்ச்சி பொம்மிடி &பள்ளிப்பட்டி ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்து கொண்டனர் உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட நிகழ்வை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி நிகழ்ச்சியில் அனைவரும் குடும்பத்தோடு பயபக்தியுடன் அனுசரித்து வருகின்றனர் தர்மபுரி மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர் குறிப்பாக தர்மபுரி கடத்தூர் பொம்மிடி பள்ளிப்பட்டி தென்கரைக்கோட்டை அரூர் செல்லியம்பட்டி கோவிலூர் பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நிகழ்ச்சி மிக பயபக்தியுடன் நடைபெற்றது குறிப்பாக புகழ்பெற்ற பொம்மிடி புனித அந்தோனியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கிய ஜேம்ஸ் ஊர் தலைவர் எம் எப் ரமேஷ் ஆகியோர் தலைமையில் கிறிஸ்தவர்கள் ஆலயத்தில் இருந்து மிக பயபக்தியுடன் முக்கிய வீதிகள் வழியாக இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்தனர் அப்போது இயேசுநாதர் ஆட்சியாளர்களால் குற்றம் சுமத்தப்பட்டு கொடூர கொலைக்கு உள்ளான நிகழ்வுகளை முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை சார்ந்த பங்கு இளம் பெண்கள் இளைஞர்கள் மிகத் தத்ரூபமாக நடித்துக் காண்பித்தனர் இதற்கான பயிற்சியை இயக்குனரும் பங்கு பேரவை செயலாளர் புஷ்பா ஏற்பாடு செய்திருந்தார் அப்போது இயேசுநாதர் வேடமிட்ட இளைஞர் அனைத்து மக்கள் முன்னிலையிலும் சாட்டையால் அடித்து துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்த நிகழ்வை மிகவும் நேர்த்தியாக செய்து காட்டினர் இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்தோடு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரும் பக்தி நிகழ்ச்சியில் கண்ணீருடன் கலந்து கொண்டனர் இதே நிகழ்வு புகழ்பெற்ற பி, பள்ளிப்பட்டி கார்மேல் அன்னை ஆலயத்திலும் பி, பள்ளிப்பட்டி லூர்துபுரம் பகுதி இளைஞர்களால் நடத்தி காண்பிக்கப்பட்டது இதில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மிக பக்தியுடன் கலந்து கொண்டனர்.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மறைவட்டம் புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலயத்தில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு ஆலய வளாகத்தில் நடைபெற்றது. உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக அனுசரித்து வருகின்றனர். புனித வெள்ளி அன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு பின்னர் உயிரிழந்த நாளக புனித வெள்ளியாக அனுசரித்து வருகின்றனர். புளியால் பங்கு புனித பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில் இயேசுவின் பாடுகள் நினைவு கூறும் வகையில் சிலுவை பாதை நிகழ்வு நடைபெற்றது.பின்னர் சிறப்பு வழிபாடு மற்றும் திருப்பலி பங்கு பணியாளர் அருட்திரு சுவாமிநாதன் மற்றும் உதவி பணியாளர் பென்சிகர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இறுதியாக சிலுவை முத்தி செய்யும் சடங்கு மற்றும் பரிவட்டம் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் புளியால் பங்கு இறைமக்கள் கலந்து கொண்டனர்.1
- கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதிக்கு முன்னாள் எம்.பி. டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை 5 மணி அளவில்காங்கிரஸ் கபசியினர் பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.இதே போல பழைய பேட்டை ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர்காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்உடன் இருந்தன.1
- சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வள்ளியப்பா செட்டியார் ஊரணி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தாயமங்கலம் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டியும், குடும்ப செழிப்புக்காகவும் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. 23 ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த ஆன்மீக வழிபாட்டில் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பக்திப் பரவசத்துடன் விளக்கேற்றி வழிபட்டனர். விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மங்கல இசை முழங்க, வேத மந்திரங்கள் ஓத, வரிசையாக அமர்ந்து பெண்கள் தீபமேற்றி அர்ச்சனை செய்தனர்.சுமங்கலிப் பூஜையாகவும், ஊர் நலம் காக்கும் வழிபாடாகவும் கருதப்படும் இந்த பூஜையில், கோவில் வளாகம் முழுவதும் விளக்குகளின் ஒளியால் களைகட்டியதுடன், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.1
- கிருஷ்ணகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னைத் திருத்தலத்தில், புனித வெள்ளியையொட்டி பெரியசிலுவைப்பாதை நடைபெற்றது.1
- திருப்பத்தூர், ஏப். 3: திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட ஏலகிரி கிராமத்தில் உள்ள குண்டி மாரியம்மன் கோயில் திருவிழா மிகுந்த சிறப்பும், பக்தி பரவசமும் நிறைந்த நிலையில் அதிவிமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் அழகிய விளக்குகள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதல் பக்தர்கள் திரளாக திரண்டு அம்மனை வழிபட்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கிராமம் முழுவதும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பக்தி உணர்வுடன் வழிபட்டனர். மேலும், அன்னதானம், முளைப்பாரி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் தீ மிதித்தல் போன்றவை நடைபெற்றதால், திருவிழா கிராம மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெற்றனர். திருவிழா சிறப்பாக நடைபெற கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தனர்.1