Shuru
Apke Nagar Ki App…
டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்தவ மனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அன்னை சோனியா காந்தி விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று கிருஷ்ணகிரி முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் பிராத்தனை. டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அன்னை சோனியா காந்தி உடல் நலக்குறைவால் அமைதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் அன்னை சோனியா காந்தி அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்திட எல்லா வல்ல இறைவனை வேண்டி நாம் அனைவரும் பிராத்தனை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்தவ மனையில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள அன்னை சோனியா காந்தி விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று கிருஷ்ணகிரி முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் பிராத்தனை. டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அன்னை சோனியா காந்தி உடல் நலக்குறைவால் அமைதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி முன்னாள் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எல். சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள தனது செய்தி குறிப்பில் டெல்லி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வரும் அன்னை சோனியா காந்தி அவர்கள் விரைவில் பூரண குணமடைந்து நாட்டு மக்களுக்கு சேவை செய்திட எல்லா வல்ல இறைவனை வேண்டி நாம் அனைவரும் பிராத்தனை மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
More news from Tamil Nadu and nearby areas
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணகிரி குந்தாரபள்ளி ஆட்டு சந்தையில் 3கோடிக்கு ஆடுகள் விற்பனை, ஒரு ஜோடி ஆடுகள் 50 ஆயிரம் வரைவிற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி1
- ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மடிக்கணினி வழங்கும் விழா. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு அரசு மடிக்கணினி திட்டம் சார்பில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கலநதுக்கொண்டு மடிக்கணினியை வழங்கி துவக்கி வைத்தார்.1
- பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2 வரலாற்று நூல்களை வெளியிட்டு மாவட்ட கலெக்டர் வாழ்த்துரை தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் அறம் இலக்கிய அமைப்பு மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி இணைந்து நடத்திய வரலாற்று நூல் வெளியீட்டு விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் சதிஷ் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் செல்வராணி வரவேற்று பேசினார். கூட்டுறவு சர்க்கரைஆலை செயலாட்சியர் ரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள்-1001 என்ற வரலாற்று நூலை ஆட்சியர் வெளியிட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா பெற்றுக் கொண்டார். சோழன் வென்ற ஈழம் என்ற நூலை முன்னாள் தருமபுரி எம்.பி. மருத்துவர் செந்தில் வெளியிட சமூக ஆர்வலர் ரவிசொக்கலிங்கம் பெற்றுக் கொண்டார். நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சதிஷ், தமிழ்நாடு அரசு வரலாற்றுக்கு அதிக முக்கித்துவம் கொடுத்து,கீழடி,பொருநை போன்ற அருங்காட்சியகங்களை உருவாக்கி வரலாற்று தடயங்களை பாதுகாத்து வருகிறது. சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்றைய காலம் வரை தொடர்ச்சியான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. நூலாசிரியர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வரலாற்று தரவுகளின் அடிப்படையில் இந்த இரு நூல்களையும் உருவாக்கியுள்ளார், இராஜேந்திர சோழன் பற்றி ஆயிரம் தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது மிகவும் பாராட்டுக்குறியதாகும் வருங்கால மாணவர்கள் இவரது பணிகளை முன்மாதிரியாக கொண்டு வெற்றி பெற வாழ்த்தினார். முதன்மைக் கல்வி அலுவலர் ஜோதி சந்திரா பேசுகையில் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் இக் கல்லூரியின் முன்னாள் மாணவர், இவர் கடந்த ஆறு மாதங்களில் ஆறு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார், முக்கியமாக இராஜேந்திர சோழனின் கங்கையும்-கடாரமும்,மற்றும் அரிய தகவல்கள் -1001 போன்ற நூல்கள் வரலாற்றின் மீது மிகுந்த ஆர்வத்தை ஏற்படும் வகையில் மகவும் சிறப்பாக உள்ளன. இதன் மூலம் வரலாற்று களஞ்சியங்களை எளிதாக மாணவர்கள் அறிந்து கொள்ள முடியும் என பாராட்டினார். கல்லூரி மூத்த ஆசிரியர்கள் ரவி, உத்திரபதி, தீர்த்தலிங்கம், லோகநாதன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் வே.சிவக்குமார் வெற்றிஞானசேகரன், சம்பத், சுதாகர்,, சாய்ராம், பாபு, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். அறம் இலக்கிய அமைப்பு தலைவர் மற்றும் நூலாசிரியர் அறம் கிருஷ்ணன் அவர்கள் ஏற்புரை நிகழ்த்தினார், அறம் இலக்கிய அமைப்பு செயலாளர் ராசு நன்றியுரையாற்றினார். இவ் விழாவில் பொதுமக்கள், எழுத்தாளர்கள்,கல்லூரி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.1
- தருமபுரி பத்திரிக்கையாளர்கள் ஒன்றினைந்து சமத்துவ பொங்கல் விழா: மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பு தருமபுரி மாவட்ட பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் ஒன்றினைத்து இன்று சமத்துவ பொங்களை கொண்டாடினர் தருமபுரி மாவட்ட பழைய ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிக்கையாளர்கள், அரசு அதிகாரிகள் ஒன்றுசேர்ந்து சமத்துவ பொங்களை கொண்டாடினர் வன்ன கோலமிட்டு புதிய பானையில் பொங்கலிட்டு செங்கரும்பு, மஞ்சல் வைத்து சூரியபகவானை வணங்கி சமந்துவ பொங்களை கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தருமபுரி மாவட்ட ஆட்சியர் திரு, ரெ.சதிஷ்,தருமபுரி மாவட்ட காவல்கண்கானிப்பாளர் SS மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அ.மணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் KP அன்பழகன், கோவிந்தசாமி, சம்பத்குமார், வெங்கடேஸ்வரன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட SP அனைத்து பத்திரிக்கையாளர்களும் தங்க நிர ஒரே உடையணிந்து, ஒன்றுசேர்ந்து சமத்துவ பொங்களை கொண்டாடினர் பின்னர் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது மாலை பத்திரிக்கையாளர்களுக்கு பானை உடைத்தல், மியூசிகள் சேர், போட்டிகளும் நடன கலைநிகழ்ச்சி நடைபெற்றது இவ்விழா ஏற்பாடுகளை அனைத்து பத்திரிக்கையாளர்கள் மிகச்சிறப்பாக செய்தனர்1
- முன்னாள் அமைச்சர் தலைமையில் அதிமுகவினர் திண்ணை பிரச்சாரம் தர்மபுரி மாவட்டத்தில் தொடர்ந்து 48 வாரமாக திண்ணை பிரச்சாரம் இன்று அரூர் எம்ஜிஆர் சிலை அருகில் முன்னாள் அமைச்சர் கே பி அன்பழகன் தலைமையில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ் ஆர் வெற்றிவேல் முன்னிலையில் நடைபெற்றது இதில் அதிமுக கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களும் திமுக அரசால் நிறுத்தப்பட்டது இவை அனைத்தும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது1
- சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி பகுதியில் செங்கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்கள் குறுக்கீடு காரணமாக நஷ்டம் அடைவதாக தெரிவித்து விவசாயிகள் கண்ணீர் மல்க வேதனை.சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பூலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான பூலாம்பட்டி, கூடக்கல்,குப்பனூர், பில்லுக்குறிச்சி,காட்டூர்,ஓணாப்பாறை, மோளப்பாறை,பனங்காடு, கோவில்பாளையம்,வன்னியநகர் ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் செங்கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.முழு கரும்பு ஒன்றுக்கு ரூ. 38 வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது இதில் வெட்டு கூலி, ஏற்று, இறக்க கூலி, போக்குவரத்து அடக்கம். விவசாயிகளிடம் நேரடியாக கூட்டுறவு துறை அதிகாரிகளே கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு செங்கரும்பு அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.இதனிடைய அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்ய வராத நிலையில் இடைத்தரகர்கள் மூலம் கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் கரும்பு ஒன்றுக்கு 15 ரூபாய் மட்டுமே வழங்குவதால் விவசாயிகள் நஷ்டம் அடைவதாகவும், இடைதரகர்கள் லாபம் அடைவதாகவும் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும் கவலையுடன் விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால் 5 லட்சம் கரும்புக்கு மேல் அறுவடை செய்யாமல் விவசாய நிலத்தில் தேக்கம் அடைந்துள்ளது.இடைத்தார்கள் குறுக்கீடு இல்லாமல் அரசு அதிகாரிகள் செங்கரும்பு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும் என்று பேட்டியளித்துள்ளனர். பேட்டி : 1. பழனிச்சாமி... கரும்பு விவசாயி... 2. கோபால்... கரும்பு விவசாயி...1
- ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பாமக1
- கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் உத்தரவின் பெயரில் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மதன்குமார் ஆலோசனையில் ஊத்தங்கரை அடுத்த கல்லாவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கல்லாவி அரசு பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்ட இப்பேரணி கல்லாவி பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பதாகைகள் ஏந்தி மது அருந்துவதனால் ஏற்படும் தீமைகளை பற்றி பொதுமக்களிடையே எடுத்துரைத்து கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சிவசண்முகவேல், காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ், விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் கருணாநிதி, ஜெயச்சந்திரன், மருத்துவர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள் நிகழ்ச்சியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 315 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.1