திருப்பூரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா: அ.தி.மு.க. வினர் எழுச்சி கொண்டாட்டம்... நம் கழகத்தின் வழிகாட்டியும், திராவிட இயக்கத்தின் பேராசானுமான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் இன்று காலை திருப்பூர் குமரன் சிலை அருகில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் உயர்திரு. பழனிசாமிEx MLA, திருப்பூர் வடக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளருமான திரு. K.N. விஜயகுமார்Ex MLA, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. வேல்குமார் M. சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, நடைபெற உள்ள தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் காட்டன் சித்ரா, மாவட்டத் துணைச் செயலாளர் கோமதி சம்பத் Ex MC, மாவட்டக் கழகப் பொருளாளர் முருகநாதன் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன்.மாமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அன்பகம் திருப்பதி MC, மாமன்ற எதிர்க்கட்சிக் கொறடா கண்ணப்பன் MC ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் சிட்டி பழனிசாமி(MGR மன்றம்), அட்லஸ் லோகநாதன் (அம்மா பேரவை), சுந்தராம்பாள் (மகளிர் அணி), கண்ணபிரான் (அண்ணா தொழிற்சங்கம்), காலனி செல்வராஜ்(MGR இளைஞர் அணி), SPN பழனிசாமி(வர்த்தக அணி), மருத்துவர் பூமிஸ் குணசேகரன் (மருத்துவ அணி), மார்க்கெட் சக்திவேல் (அமைப்பு சாரா ஓட்டுநர் அணி), பிரேம்குமார் (தகவல் தொழில்நுட்பப் பிரிவு), சொக்கலிங்கம்(கலைப்பிரிவு), ஹரி பிரசாந்த்(இளைஞர், இளம் பெண்கள் பாசறை),பெஸ்ட் ஜீவானந்தம் (மீனவர் பிரிவு) ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பகுதி கழகச் செயலாளர்கள் கேசவன்Ex MC (வாவிபாளையம்), கருணாகரன்(காந்திநகர்),P.K. முத்து Ex MC (கொங்கு நகர்), சிவாளா தினேஷ் (கருவம்பாளையம்), R.A. சேகர் MC (முருங்கப்பாளையம்), ஹரிஹரசுதன் (கோல்டன் நகர்), தலைமைக் கழகப் பேச்சாளர்கள் பாரதி பிரியன், எரியீட்டி சேகர்,வக்கீல் சிவாஜி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மூத்த முன்னோடிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
திருப்பூரில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா: அ.தி.மு.க. வினர் எழுச்சி கொண்டாட்டம்... நம் கழகத்தின் வழிகாட்டியும், திராவிட இயக்கத்தின் பேராசானுமான பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் இன்று காலை திருப்பூர் குமரன் சிலை அருகில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் நிகழ்வு எழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டக் கழக அவைத்தலைவர் உயர்திரு. பழனிசாமிEx MLA, திருப்பூர் வடக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் ஒன்றியக் கழகச் செயலாளருமான திரு. K.N. விஜயகுமார்Ex MLA, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழகச்
செயலாளர் திரு. வேல்குமார் M. சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு அதிமுக நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்களுக்கு இனிப்புகள் வழங்கி பிறந்த நாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, திருப்பூர் மாநகர் மாவட்டக் கழக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, நடைபெற உள்ள தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் களப்பணிகள் குறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டக் கழக இணைச் செயலாளர் காட்டன்
சித்ரா, மாவட்டத் துணைச் செயலாளர் கோமதி சம்பத் Ex MC, மாவட்டக் கழகப் பொருளாளர் முருகநாதன் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன்.மாமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அன்பகம் திருப்பதி MC, மாமன்ற எதிர்க்கட்சிக் கொறடா கண்ணப்பன் MC ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் சிட்டி பழனிசாமி(MGR மன்றம்), அட்லஸ் லோகநாதன் (அம்மா பேரவை), சுந்தராம்பாள் (மகளிர் அணி), கண்ணபிரான் (அண்ணா தொழிற்சங்கம்), காலனி செல்வராஜ்(MGR இளைஞர் அணி), SPN பழனிசாமி(வர்த்தக அணி), மருத்துவர் பூமிஸ் குணசேகரன் (மருத்துவ அணி), மார்க்கெட் சக்திவேல் (அமைப்பு சாரா ஓட்டுநர் அணி), பிரேம்குமார்
(தகவல் தொழில்நுட்பப் பிரிவு), சொக்கலிங்கம்(கலைப்பிரிவு), ஹரி பிரசாந்த்(இளைஞர், இளம் பெண்கள் பாசறை),பெஸ்ட் ஜீவானந்தம் (மீனவர் பிரிவு) ஆகியோர் பங்கேற்றனர். தொடர்ந்து, பகுதி கழகச் செயலாளர்கள் கேசவன்Ex MC (வாவிபாளையம்), கருணாகரன்(காந்திநகர்),P.K. முத்து Ex MC (கொங்கு நகர்), சிவாளா தினேஷ் (கருவம்பாளையம்), R.A. சேகர் MC (முருங்கப்பாளையம்), ஹரிஹரசுதன் (கோல்டன் நகர்), தலைமைக் கழகப் பேச்சாளர்கள் பாரதி பிரியன், எரியீட்டி சேகர்,வக்கீல் சிவாஜி உள்ளிட்ட கழக நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், மூத்த முன்னோடிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
- பாட்டியின் சாதனை. சாதிக்க வயது ஒரு தடையில்லை. சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை மற்றும் போதும்.1
- விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி நரசிம்மநாயக்கன்பாளையம் 10 லட்சத்தில் NSN பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகருக்கு அலங்காரம் செய்து வழிபாடு விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். இதனை சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதில் கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் அணிவித்து கோவில் கருவறை முழுவதும் 10, 20, 50, 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் 10 லட்சம் ரூபாயைக் கொண்டு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தினர். விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்றுப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து சென்றனர். இவ்விழாவில் கைலாய வாத்தியங்கள் இசைத்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். இதற்கான ஏற்பாடுகளை நரசிம்மநாயக்கன்பாளையம் அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில் கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.4
- தாராபுரம் இடை தேர்தலுக்கான வேட்பு மனுவை வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வழக்கறிஞர் சுகன்யா இன்று தாக்கல் செய்தார் . வேற அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று அண்ணா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அவர்களும் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் அவர்களும் முன்னாள் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் அவர்களும் திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ் அவர்களும் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்பு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திமுக சார்பில் வழக்கறிஞர் சுகன்யா வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.1
- சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர் கைது. 2 கிலோ கஞ்சா பறிமுதல் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர் கைது. 2 கிலோ கஞ்சா பறிமுதல். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான நொச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் துரை பாபு தலைமையில் மதுவிலக்கு போலீசார் முகமது ரபி, நாகேந்திரன் மற்றும் குமாரசாமி ஆகியோர் நொச்சிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் வட மாநிலத்தைச் சேர்ந்த நபர் சந்தேகத்திற்கு கிடமான வகையில் நின்று கொண்டு இருந்ததை அறிந்த போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை அடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் 22 என்பதும் அவர் தற்போது திருப்பூர் வீரபாண்டி பகுதியில் தங்கி பணி நிறுவனத்தில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. இவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைப்பற்றி அவரை கைது செய்து காங்கேயம் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.1
- கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் கோபியில் இந்து மக்கள் கட்சி (தமிழகம் )சார்பாக 18ம் ஆண்டு நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் இந்து எழுச்சி திருவிழா நடைபெற்றது. ஈரோடு மாவட்ட பொதுச்செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட தலைவர் செல்வகுமார் முன்னிலை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்.அதனை தொடர்ந்து விநாயகர் சிலை ஊர்வலத்தை கோபி அறிஞர் அண்ணா வியாபாரிகள் சங்க தலைவர் சிவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.கலை நிகழ்ச்சியை சக்திவேல் துவக்கி வைத்தார்.மேலும் விழாவில் மாவட்ட செயலாளர் குமரவேல், மாநில இளைஞர் அணி செயலாளர் கராத்தே வசந்த்,மாநில அமைப்பு செயலாளர் அருண்ராஜ், மாநில செயலாளர் வாடிவாசல் ஹரி, தமிழ்செல்வம், சதீஸ்குமார், அருண்குமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக இந்து அதிரடி படை நிறுவன தலைவர் ராஜகுரு வாழ்த்துரை வழங்கினார்.இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசும் போது,தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் சட்ட மன்ற தேர்தலில் திமுக வை தோற்கடித்து ஒரு நல்ல விஷயத்தை செய்துள்ளார்.திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் எனவும், அந்த வரிசையில் த வெ க வும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான் என கூறினார்.சட்ட சபையில் யாரெல்லாம் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் மத போதகர்கள்,அமைச்சர் செங்கோட்டையன் பிறப்பில் இந்துவா இல்லை கிறிஸ்தவரா என கேள்வி எழுப்பினார்.உதயநிதி கார் பந்தயம் நடத்தினால் ஊதாரி தனம், ஆனால் த வெ க வினர் நடத்தினால் மக்களுக்கு நன்மையா மக்கள் ஏமாற கூடாது எனவும் பேசினார்.4
- ஒட்டன்சத்திரம் 2 வது வார்டு பெரியாஞ் செட்டி பட்டியில் கண் திருஸ்டி கணபதியை இளைஞர் அணி சார்பாக வழிபாடு செய்தனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டு, பெரியாஞ்செட்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கண்திருஷ்டி கணபதியை சிறப்பு வழிபாடு செய்தனர். இக்கண்திருஸ்டி கணபதி இராஜகணபதியாய் சிம்மாசனத்தில் அமர்ந்து கம்பீரமாய் கண்திருஷ்டி களை நீக்குவதை தம் பணியாய் வைத்திருப்பது போல் சிலை அமைந்திருந்தது. இன்று கணபதிக்கு சிறப்புபூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் இருந்து கண்திருஷ்டி கணபதியை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு விழா கமிட்டியாரின் சார்பாக கொழுக்கட்டை, சுண்டல், தக்காளி சாதம், அவல் பிரசாதமாக வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பி.கண்ணன் ,நா.மதன்குமார், ப.முருகானந்தம் ,விஷ்ணு,சரவணன்,தமிழரசன்,அருண்குமார்,பிரவீன்,ஆ.இ.ஹரிகிருஷ்ணன், ஆ.ஹரிகிருஸ்ணன் தலைமையிலான விழாக்கமிட்டியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.2
- கரூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்திலிருந்து இந்து முன்னணி, பாஜக,சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கரூர், வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், குளித்தலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை கரூர் மாநகர் 80 அடி சாலைக்கு கொண்டு வரப்பட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு வாங்கல் காவேரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்த காரணத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக விநாயகர் ஊர்வலம் கிளம்பிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.1
- ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாட்டம் திராளான பொதுமக்கள் வந்து தரிசனம் செய்தனர் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது. விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் விநாயகரின் பிரம்மாண்ட சிலைகளை வைத்தும், அன்னதானம், ஊர்வலம் நடத்தியும் விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல், ரங்கம்மாள் காலனி, என் ஜி ஜி ஓ காலனி, நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம், பன்னீர்மடை, ஏ பி எம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் 300 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை துடியலூர் அருகே உள்ள ரங்கம்மாள் காலனி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரம் தரும் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவின் துவக்கமாக காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கி மூலவருக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள அனைத்து தெய்வ விக்கிரகங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சுற்று பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பொங்கல், கேசரி, புளிசாதம் அன்னதானமாக வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம்மாள் காலனி, பழனி கவுண்டர் காலனி, வேலம்மாள் காலனி, முருகன் நகர் ஊர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாக கமிட்டி செல்வகுமார், நாராயணசாமி, முருகேசன், சிவக்குமார், தட்சிணாமூர்த்தி, ஐயம்பெருமாள், ஓமேஸ்வர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.4