தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படையினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியா தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேர்தல் காலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், தேர்தல் பணிகள் முழுமையாக சீராக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கவும் காவல்துறையினரும் மத்திய பாதுகாப்பு படையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 முன்னிட்டு தேனி மாவட்ட காவல் அலுவலகத்தில் மத்திய பாதுகாப்பு படையினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கத்தில் இன்று தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹா ப்ரியா தலைமையில் மத்திய பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் தேர்தல் காலத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், தேர்தல் பணிகள் முழுமையாக சீராக நடைபெறவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் சூழலை உருவாக்கவும் காவல்துறையினரும் மத்திய பாதுகாப்பு படையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார்.
- வருகின்ற சட்டமன்ற தேர்தலை (2026) முன்னிட்டு தேனி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக மத்திய துணை இராணுவப் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர். தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவில் பகுதியில் இருந்து காவல்துறையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு துணை ராணுவத்தினர் ஒன்றிணைந்து தேர்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதன் மூலம் தேனி பகுதியில் தேர்தல் நேரங்களில் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத செய்திகளை தடுக்கும் நோக்கத்துடன் காவல்துறையின் மற்றும் துணை ராணுவத்தினர் இணைந்து பணியாற்றும் உள்ளதாகவும் அதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தேனி அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து கான்வென்ட் நேரு சிலை பங்களா மேடு வரை கோடி அணிவகுப்பு நடைபெற்றது இதில் காவல்துறை உயரதிகாரிகள் காவல்துறையினர் மத்திய பாதுகாப்பு துணை ராணுவத்தினர் உள்ளிட்டோர் கோடி அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்1
- தேனியில் உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் மாதந்திர கூட்டம் நடைபெற்றது,நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த நிகழ்வில் துணை சேர்மன், வார்டு கவுன்சிலர்கள் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உணவு மற்றும் உணவு வளங்கள் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் சிலிண்டரை பற்றி மத்திய அரசு மோடி அரசை கேளுங்கள் என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பேட்டி அளித்தார்.1
- ஜாதி வெறிசெயல் குடிக்கும் தண்ணிர் குழாயை அடைத்து இரு சமூகத்தினர் தண்ணியின்றி தவிக்கவிட்ட கிராமச்செயலாளர்(ஈஸ்வரன், கள்ளர்) கருநாக்கமுத்தன்பட்டி ஊராட்சி, கம்பம் ஊராட்சி ஒன்றியம் தேனி மாவட்டம்1
- மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குமாரம் பகுதியில் நடைபெற்ற மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் முன்னாள் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் கலந்து கொண்டு பேசினார்1
- திருமங்கலம் முனிசிபல் காலனி 12வது வார்டு மூன்று மாதங்களால் அடைக்கப்பட்டிருக்கும் சாக்கடை கழிவுகள்1
- திண்டுக்கல் மாநகராட்சி நாகல்புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி (குட்டவாத்தியார் பள்ளி ) 1926 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் துவங்கப்பட்டு அன்று முதல் இன்று வரை சுமார் நூறு ஆண்டுகளைக் கடந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான கல்வி முறையை பயிற்றுவித்து வருகிறது. இந்நிலையில் இப்பள்ளியின் நூற்றாண்டு திருவிழா திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா மாநகராட்சி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டார கல்வி அலுவலர் விஜயா முன்னிலை வகித்தார். மேலும் சிறப்பு விருந்தினராக 30வது வார்டு மாமன்ற உறுப்பினர் N.A.லட்சுமி மற்றும் 31 வது வார்டு மாமன்ற உறுப்பினர் உமாதேவி பாரதி முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இந்த நூற்றாண்டு திருவிழாவில் மாநகராட்சி பள்ளியின் இன்னாள் மற்றும் முன்னாள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்கள் S.M.C உறுப்பினர்கள் முன்னாள் மாணவர்கள் தற்போதைய மாணவ மாணவிகள் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். இத்திருவிழாவின் இறுதி நிகழ்வாக பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மாணவ மாணவிகளுக்கான ஆடலும் பாடலும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று அவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வானது பள்ளியின் நீண்டகால வரலாற்றையும் அதன் கல்வி பங்களிப்பையும் நினைவு கூர்ந்தது.1
- தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள நாகலாபுரம் பகுதி சார்ந்தவர் காமாட்சி. இவரது மகன் தவசி (13) போடியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். இன்று காமாட்சி அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சித்தப்பா ஒருவருக்கு திதி கொடுப்பதற்காக கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு இரண்டு வேன்களில் வந்துள்ளனர். தற்போது சுருளி அருகில் முற்றிலும் நீர் வரத்து இல்லாததால் குளிப்பதற்காக கம்பம் சுருளிப்பட்டி செல்லும் சாலையில் உள்ள முல்லைப் பெரியாற்றின் பாலப்பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு காமாட்சி மகன் தவசி மற்றும் அவரது உறவினர்கள் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் தவசி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அங்கே குளித்துக் கொண்டிருந்தவர்கள் கூச்சலிட்டனர். அதற்குள் மாணவன் தண்ணீரில் மூழ்கியுள்ளான். இதனை அடுத்து உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கும், கம்பம் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் உறையினர் ஆற்றில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவனை தேடி வருகின்றனர். மேலும் சுருளிப்பட்டி பகுதியைச் சார்ந்த ஊர் பொதுமக்களும் ஆற்றில் இறங்கி மாணவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மாணவனின் நிலை குறித்து இன்னும் தெரியவில்லை. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.1