திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையத்தில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான ஈராண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பு பயில்வதற்கு விருப்பமுள்ள மாணவ, மாணவியர்கள் இணையவழியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தகவல். தமிழ்நாடு அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையத்தில் 2026-2027-ஆம் ஆண்டிற்கான ஈராண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பு பயில விண்ணப்பங்கள் கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் tnau.ucanapply.comஎன்ற இணையவழி முகவரியின் மூலம் 08.06.2026 வரை வரவேற்கப்படுகிறது. கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் ஒன்றான ரெட்டியார்சத்திரத்திரம், காய்கறி மகத்துவ மையத்தில் அமைந்துள்ள ஈராண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரியில் பயில இணையவழி விண்ணப்பங்கள் விண்ணப்பித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து, மேல்நிலைக் கல்வி இரண்டாம் ஆண்டு (+2)-ல் கணிதம், அறிவியல் மற்றும் தொழில்சார்ந்த பிரிவு படித்த விருப்பமுள்ள மாணவ/மாணவியர்கள் இணையவழி விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 2026-2027-ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதில் சந்தேகம் இருந்தால் மாணவர்கள் ரெட்டியார்சத்திரத்திரம், காய்கறி மகத்துவ மையத்தின் ஈராண்டு தோட்டக்கலை பட்டயப்படிப்பு கல்லூரியில் அமைந்துள்ள உதவி மையத்தினை (Help Desk) நேரிலும் அல்லது உதவி மையத்தின் தொலைப்பேசி எண் (93454 00837)-க்கு தொடர்பு கொண்டும் தகவலினை பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.செ.சரவணன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

- அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை சபாநாயகரிடம் வழங்கினர்.1
- திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் செல்போனை பயன்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு நடந்த இந்தக் கூட்டத்தில் அலுவலர்களின் அலட்சியம் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.1
- தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி *தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் - தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனின் மகன் தலைமையில் அஞ்சலி* தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களுக்காக போராடிய தேக்கம்பட்டி பாலசுந்தரராசுவின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேக்கம்பட்டி கிராமத்தில் பாலசுந்தராசு நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் இதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன் மகனும் மாநில இளைஞரணி தலைவருமான வியாங்கோ பாண்டியன் தலைமையில் தேனி மாவட்ட நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர் தேக்கம்பட்டி பாலசுந்தரராசு நினைவிடத்தில் மாலை அணிவித்து "வீரவணக்கம் வீரவணக்கம்" என கோஷங்களை எழுப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தினர் இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்டச் செயலாளர் பாலா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்1
- தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், தேனியைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் தர்பூசணியில் அவரது முகத்தை வடித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு சின்னம் மற்றும் வாழ்த்து வாசகங்களுடன், வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தினார்.1
- TVK கட்சித் தலைவர் விஜய் 2026 மே 10 அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்த நிகழ்வு மாநில அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.1
- கரூர் காந்திகிராமம் பகுதியில் உள்ள தனியார் பஞ்சு குடோனில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இரண்டு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.1
- சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் சிவகங்கையில் தவெக வினர் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம். தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றவை கொண்டாடும் விதமாக சிவகங்கை அரண்மனை வாசலில் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி பேருந்து நிலையம் வரை தவெக வினர் பேரணியாக சென்று கொண்டாடி மகிழ்ந்தனர்.1
- தமிழக முதலமைச்சர் விஜய், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, அன்புமணி ராமதாஸ் தனது குடும்ப உறுப்பினர்களை முதலமைச்சருக்கு அறிமுகம் செய்து வைத்ததுடன், அனைவரும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அரசியல் நாகரிகத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்தச் சந்திப்பில், அன்புமணியின் குடும்பத்தினர் முதலமைச்சரை நெகிழ்ச்சியுடன் வரவேற்று நலம் விசாரித்தனர். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து இருவரும் இந்தச் சந்திப்பில் ஆலோசனைகளை மேற்கொண்டதாகத் தெரிகிறது.1