Shuru
Apke Nagar Ki App…
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த, அணியாப்பூர் அருகே , வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், HQ AFSOD Unit, 13th BN The Parachute Regt (SF) பயிற்சியாளர்களால் 09.01.2026 ஆம் தேதி முதல் 13.01.2026 ஆம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 07:00 முதல் இரவு 10:00 மணி வரையும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
Usha arun News
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த, அணியாப்பூர் அருகே , வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், HQ AFSOD Unit, 13th BN The Parachute Regt (SF) பயிற்சியாளர்களால் 09.01.2026 ஆம் தேதி முதல் 13.01.2026 ஆம் தேதி வரை காலை 7:30 மணி முதல் மாலை 5:30 மணி வரையும், மாலை 07:00 முதல் இரவு 10:00 மணி வரையும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதியில் பொதுமக்கள் நடமாடவோ, கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஈடுபடுத்தவோ கூடாது என மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
More news from Tamil Nadu and nearby areas
- இலுப்பூர் பணம் வைத்த சூதாடிய ஐந்து பேர் கைது இருந்திராபட்டி கருப்பசாமி கோயில் அருகே தர்மலிங்கம் (43), சுப்பிரமணியன் (59), குமார் (50), மகேஸ்வரன் (43), முத்துக்கருப்பன் (50) ஆகிய ஐந்து பேர் பணம் வைத்து சூதாடினர். இதையடுத்து இவர்களை இலுப்பூர் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூபாய் 300 மற்றும் ஒரு சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர்.1
- கரூர் மாவட்ட திமுக செயலாளர் வி. செந்தில் பாலாஜி ஆணைக்கிணங்க, நாளை மறுநாள்(11/01/29) நடைபெறும் திமுக திராவிட பொங்கல் சமத்துவ விளையாட்டு போட்டி நடைபெறும் இடமான தமிழ் நகரில் விளையாட்டு மைதானத்தை இன்று தாந்தோணி மேற்கு ஒன்றிய செயலாளர் கோயம்பள்ளி பாஸ்கர் தலைமையில் பணியாட்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.1
- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மாரம்பாடியில் 300 ஆண்டுகள் பழமையான மாமுனிவர் புனித பெரிய அந்தோணியார் திருத்தலம் அமைந்துள்ளது இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16,17,18 ஆகிய மூன்று நாட்களில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் அதோபோல் இந்த ஆண்டும் திருவிழாவின் முதல் கொடி பவனி நேற்று இரவு தொடங்கியது இந்நிகழ்வில் ஊர் பெரியதனகாரர்கள், கிராம மக்கள், பங்கு தந்தையர்கள், அமலவை கன்னியர்கள், குருக்கள், பிரதர்கள், இருபால் துறவியர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்1
- திண்டுக்கல் சோலைஹால் பகுதியில் உள்ள மீன் கடைகளை அகற்றி மேட்டுப்பட்டி சாலைகள் உள்ள குலசாலையில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது1
- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தாலுகா நம்புரான் பட்டியல் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை தனிநபர் தடுத்து நிறுத்தி சாலை அமைக்க விடாமல் தடுத்துள்ளதாகவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு சாலையை அமைந்து தரக்கோரி இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.1
- பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகத்தை-திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.1
- சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை ரயில்வே காலனி நியாயவிலை கடையில், தமிழர் திருநாள் பொங்கலை முன்னிட்டு அரசு வழங்கும் பொங்கல் தொகுப்புகள் நேற்று (08.01.2026) பொதுமக்களிடம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் 2026 ஆம் ஆண்டு துணைப் பதிவாளர் தினேஷ்குமார் பொங்கல் தொகுப்புகளை வழங்கினார். உடன் விற்பனையாளர் கோபாலகிருஷ்ணன் இருந்தார்.1
- மாரியம்மன் கோவில் குடமுழுக்கு சிறப்பு பூஜை புதுகை மாநகரில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழா வருகின்ற 28ம்தேதி நடக்கிறது. இதனை ஒட்டி பெயிண்டிங் வேலைகள் முடிந்து சாரம் பிரிக்கும் பணி மற்றும் யாகசாலை அமைக்கும் பணி ஆகியவை நடைபெற்று வருகிறது. முன்னதாக அறநிலையத்துறை அழைப்பிதழை அம்மன் முன்பாக வைத்து இன்று(ஜன9) சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விழா குழுவினர் மண்டகப்படி தாரர்கள் பக்தர்கள் பங்கேற்றனர்.1