பெரியகுளத்தில் திமுக நகர செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் தேனி எம்பி மற்றும் எம்எல்ஏ முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஈடுபட்டனர் திமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவு பகுதியில் திமுக மாணவரணி மற்றும் பெரியகுளம் நகர் கழகம் இணைந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் அப்போது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் பேசி முடித்தவுடன் வரவேற்புரை ஆற்றுவதில் பெரியகுளம் நகரச் செயலாளர் முகமதுஇலியாஸ் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோருக்கும் ஸ்டேஜிலே மைக்கில் பேசுவதில் நானா நீயா என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் திமுகவில் பிரச்சனையால் நிர்வாகிகள் இடையே அவ்வப்போது வாக்குவாதம் மற்றும் பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்போது பொது இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையிலே நகர நிர்வாகிகளும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இருவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மாநில நிர்வாகிகள் அனைவரும் மேடையில் இருந்தபோதே நகரச் செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் மைக்கில் பேசுவதை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள் மேலும் திமுக நிர்வாகிகள் இடையே உள்கட்சி பூசல் இருந்த நிலையில் தற்போது வெளிப்படையாக பொது மேடையில் நிர்வாகிகள் இருவரும் கடும் வாக்குவாதத்தை ஈடுபட்டது திமுகவினருக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
பெரியகுளத்தில் திமுக நகர செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் தேனி எம்பி மற்றும் எம்எல்ஏ முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஈடுபட்டனர் திமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவு பகுதியில் திமுக மாணவரணி மற்றும் பெரியகுளம் நகர் கழகம் இணைந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் அப்போது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் பேசி முடித்தவுடன் வரவேற்புரை ஆற்றுவதில் பெரியகுளம் நகரச் செயலாளர் முகமதுஇலியாஸ் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோருக்கும் ஸ்டேஜிலே மைக்கில் பேசுவதில் நானா நீயா என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் திமுகவில் பிரச்சனையால் நிர்வாகிகள் இடையே அவ்வப்போது வாக்குவாதம் மற்றும் பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்போது பொது இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையிலே நகர நிர்வாகிகளும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இருவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மாநில நிர்வாகிகள் அனைவரும் மேடையில் இருந்தபோதே நகரச் செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் மைக்கில் பேசுவதை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள் மேலும் திமுக நிர்வாகிகள் இடையே உள்கட்சி பூசல் இருந்த நிலையில் தற்போது வெளிப்படையாக பொது மேடையில் நிர்வாகிகள் இருவரும் கடும் வாக்குவாதத்தை ஈடுபட்டது திமுகவினருக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
- முதல்க்கம்பட்டி ஊராட்சி பகுதியில் கிராம சபை கூட்டத்தில் வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம் வழங்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள முதலக்கம்பட்டி ஊராட்சியில் குடியரசு தின கிராம சபை கூட்டம் ஊராட்சி செயலர் எஸ் வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் மகேந்திரன்அவர்கள் கலந்து கொண்டனர்மற்றும் மகளிர் திட்ட அலுவலர் காவல் துறையினர் மின்சார துறையினர் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றது. மேலும் கூட்டத்தில் இப்போது நெடுஞ்சாலை துறையின் மூலம் மேல்மங்கலம் வைகைபுதூர் சாலை சாலை விரிவாக்கம் செய்வதால் ஏற்கனவே உள்ள பைப் லையனை ஒப்பந்ததாரர்களே உடையும் இடத்தில் ஒட்டி கொடுத்து சாலை அமைக்கப்படுகின்றனர் இதனால் தற்போது ஊராட்சி நிர்வாகத்திடம் போதையை நிதி இல்லாததால் நெடுஞ்சாலை துறையினரை தற்போது உள்ள குடிநீர் பைப்பை மாற்றி அமைத்துவிட்டு சாலை அமைக்க வேண்டும் இல்லை என்றால் சாலை அமைக்கும் பணியை செய்ய விட மாட்டோம் எனவும் ஊர் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .மேலும் வடுகபட்டிக்கு வைகை அணை பிக்கப் அணையில் இருந்து குடிநீர் பைப் அமைத்து பல்வேறு பகுதிகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டு செல்கின்றனர். ஆனால் தற்போது வரை மூலக்கம்பட்டி ஊராட்சி பகுதிகளில் வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம் வழங்காமல் இருப்பதாலும் இதனால் தற்போது குடிநீர் வாரியம் மூலம் வைகை அணை கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு1
- தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் கடந்த 9 மாதங்களில் ரூபாய் 1026 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது 77வது குடியரசு தின விழாவில் கோட்ட மேலாளர் தகவல். மதுரை: தெற்கு ரயில்வே, மதுரை கோட்டம் சார்பாக 77வது குடியரசு தினவிழா திங்கட்கிழமை (ஜனவரி 26) அன்று மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தேசியக் கொடியை ஏற்றி வைத்து ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் கோட்ட ரயில்வே மேலாளர் பேசும்போது, இந்த நிதியாண்டில் கடந்த 9 மாதங்களில் மதுரை கோட்டம் ரூபாய் 1026 கோடி மொத்த வருமானம் ஈட்டியுள்ளது என்றார். இது கடந்த ஆண்டு வருமானமான ரூபாய் 915 கோடியை காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். மதுரை கோட்டத்தில் இயக்கப்படும் ரயில்களில் 3.68 கோடி பயணிகள் பயணித்துள்ளனர். இதன் மூலம் ரூபாய் 658 கோடி வருமானம் ஈட்ட பட்டுள்ளது. இது சென்ற ஆண்டு வருமானமான ரூபாய் 587 கோடியை காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். மேலும் சரக்கு போக்குவரத்து வாயிலாக ரூபாய் 296 கோடியும், இதர வகை வருமானமாக ரூபாய் 27 கோடியும் ஈட்டப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் முறையே 12 மற்றும் 35 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில் புதிய பொருள்களான மஞ்சள் பீன்ஸ், நிலக்கரி, சிமெண்ட், ஜிப்சம், சரக்கு பெட்டகம் போன்றவை சரக்கு ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் சரக்கு போக்குவரத்தில் அதிகபட்ச மாத வருமானமாக ரூபாய் 42 கோடி ஈட்டப்பட்டுள்ளது. 51 ஒப்பந்ததாரர்களோடு இருந்த வாகன காப்பகம், விளம்பரங்கள், 'ஒரு நிலையம் ஒரு பொருள்' விற்பனைக் கடைகள், பிரதமர் மருந்து விற்பனை நிலையம், மலிவு விலை விடுதிகள், சுற்றுலா பயணிகள் மாளிகை ஆகியவை 105 ஒப்பந்தங்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பயணக் கட்டணம் இல்லாத வருமானம் அதிகரித்துள்ளது என்றார். மதுரை கோட்டத்தில் இயக்கப்பட்ட 22,648 விரைவு ரயில்களும் 97.05 சதவீதம் காலந் தவறாமல் இயக்கப்பட்டுள்ளது. மேலும் 15,619 முன்பதிவில்லாத ரயில்களும் 98.49 சதவீதம் காலம் தவறாமல் இயக்கப்பட்டு அகில இந்திய அளவில் காலந்தவறாமையில் மதுரை கோட்டம் இரண்டாம் நிலையில் உள்ளது. ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 895 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன என்றார். பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - ராமேஸ்வரம் இடையே ஒரு புதிய ரயில் சேவையும், திருவனந்தபுரம் - தாம்பரம் இடையே அமிர்த பாரத ரயில் சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப விரைவு ரயில்களுக்கு 30 கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிக வளைவுகள் கொண்ட மலைப்பாதையான தென்காசி - கொல்லம் ரயில் பிரிவைத் தவிர மற்ற பகுதிகளில் ரயில்கள் மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பிற்காக கோவில்பட்டி, மணப்பாறை, காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 11 ரயில் நிலையங்களில் நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. கடந்த 9 மாதங்களில் ரயில் நிலையங்களில் 24 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோவில்பட்டியில் மின் தூக்கி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பயணிகள் ரயில்களில் எளிதாக ஏறி இறங்க 24 ரயில் நிலையங்களில் நடைமேடைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களை மணிக்கு 39.58 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கி அகில இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது மதுரை கோட்டம். சரக்கு போக்குவரத்தில் 2.61 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் 21.48 சதவீதம் அதிகமாகும். மதுரை ரயில் நிலையத்தில் ரூபாய் 413 கோடி மதிப்பிலும், ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ரூபாய் 112 கோடி மதிப்பிலும், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரூபாய் 100 கோடி மதிப்பிலும் மறு சிரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. 17 ரயில் நிலையங்களை அம்ரித் பாரத் ரயில் நிலையங்களாக தரம் உயர்த்தும் பணிகள் காரைக்குடி, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர், மணப்பாறை ஆகிய ரயில் நிலையங்களில் நிறைவு பெற்றுள்ளன. இந்த பணிகள் மற்ற ரயில் நிலையங்களில் வரும் மே மாதத்திற்குள் நிறைவு பெறும். கடந்த 9 மாதங்களில் 63 கிலோமீட்டர் ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 118 கிலோமீட்டர் ரயில் பாதை மற்றும் 82 ரயில் பாதை இணையும் இடங்களில் உள்ள சரளை கற் தூசிகள் அகற்றப்பட்டு பாதை பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் பாதைகளுக்கு இடையே ரயில் பாதை மாறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள 42 ரயில் பாதை இணைப்புகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பான பயணத்திற்கு விருதுநகர் - வாஞ்சி மணியாச்சி பிரிவில் 3 கடவுப் பாதைகள் சுரங்கப் பாதைகளாக மாற்றப்பட்டுள்ளன. சாலை வாகனங்களின் பாதுகாப்பிற்காக சைகை விளக்கு கம்ப கட்டுப்பாட்டிலாத 7 கடவுப் பாதைகள் சைகை விளக்கு கம்ப கட்டுப்பாடுள்ள கடவு பாதைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் சைகை கம்ப கட்டுப்பாடு இல்லாத 47 கடவுப் பாதைகள் கண்காணிப்பு காமிரா மூலம் ரயில் நிலைய அதிகாரி நேரடி மேற்பார்வைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மனித தவறுகளை தவிர்க்க 12 கடவுப் பாதைகளில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்சார ரயில் இன்ஜின்களை தொய்வில்லாமல் இயக்க தேனி மற்றும் புனலூரில் புதிய மின் உபநிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நிறைவடைந்த இராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரயில் பாதை மின்மயமாக்கல் பணிகள் வாயிலாக மதுரை கோட்டம் 100 சதவீத மின்மயக்கோட்டமாக உருவாகி இருக்கிறது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ரயில் நிலையங்களில் பெற்றோருக்கு தெரியாமல் வந்த 122 சிறுவர்களை மீட்டுள்ளனர். மேலும் பயணிகள் மறந்து விட்டு சென்ற ரூபாய் 1.42 கோடி மதிப்பிலான பொருள்களை கைப்பற்றி உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். பணியில் உயிரிழந்த மற்றும் உடல் நலம் குன்றியே 40 ரயில்வே ஊழியர்களின் வாரிசுகளுக்கு உரிய வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 658 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 94 ரயில்வே ஓய்வூதியர்களின் குறைகள் களையப்பட்டு சுமார் ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான பண பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊழியர்களின் நலனுக்காக பல்வேறு ரயில் நிலையங்களில் 104 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. மதுரை ரயில்வே மருத்துவமனையில் பல் நோய்க்கு கதிரியக்க படங்கள் எடுக்க கருவி உட்பட நவீன மருத்துவ உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் மதுரை மருத்துவமனைக்கு பல்வேறு நவீன வசதிகளுடன் புதிய இரண்டு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. சுகாதார முகாம்கள் வாயிலாக ரயில் நிலையங்களில் 6.47 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. மண்டல அளவில் சுத்தம் சுகாதாரமாக பேணப்பட்ட ரயில் நிலையத்திற்கான இரண்டாவது சுழற் கேடயத்தை மதுரை ரயில் நிலையம் பெற்றுள்ளது என்றார். இறுதியில் ரயில்வே பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை மோப்ப நாய் சாகச விளையாட்டும் நடைபெற்றது. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் எல்.என்.ராவ், முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி வி.சுவாமிநாதன், ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் எம்.செஞ்சையாஉட்பட ரயில்வே அதிகாரிகளும் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.4
- தேனி மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே அரசு சார்பில் நவீன விளையாட்டு கிரிக்கெட் மைதானம் அரங்கம் திறக்கப்பட்டது தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் பங்கேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட எஸ்பி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்2
- திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம் சித்தரேவு ஊராட்சி நல்லாம் பிள்ளையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஊராட்சி செயலர் கண்ணன்,மற்றும் மருத்துவத் துறையினர், கல்வித் துறையினர், மின்வாரிய துறையினர்,காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.1
- உணவை வீணாக்காதீர் #tamil #நெல் #விவசாயம்காப்போம் #உணவு #இயற்கைவேளாண்மை இயற்கைஉணவு1
- பழனி திருக்கோயில் திரு..துணை ஆணையர் அவர்கள் & திரு..உதவி ஆணையர் அவர்கள்1
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது1
- பெரியகுளத்தில் திமுக நகர செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் தேனி எம்பி மற்றும் எம்எல்ஏ முன்னிலையில் கடும் வாக்குவாதம் ஈடுபட்டனர் திமுக பொதுக்கூட்டத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது தேனி மாவட்டம் பெரியகுளம் புதிய பேருந்து நிலையம் பிரிவு பகுதியில் திமுக மாணவரணி மற்றும் பெரியகுளம் நகர் கழகம் இணைந்து மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது இந்த மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், மற்றும் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர் அப்போது பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் பேசி முடித்தவுடன் வரவேற்புரை ஆற்றுவதில் பெரியகுளம் நகரச் செயலாளர் முகமதுஇலியாஸ் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஸ்டீபன் ஆகியோருக்கும் ஸ்டேஜிலே மைக்கில் பேசுவதில் நானா நீயா என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் திமுகவில் பிரச்சனையால் நிர்வாகிகள் இடையே அவ்வப்போது வாக்குவாதம் மற்றும் பிரச்சனைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்போது பொது இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையிலே நகர நிர்வாகிகளும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் இருவரும் தேனி பாராளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் மாநில நிர்வாகிகள் அனைவரும் மேடையில் இருந்தபோதே நகரச் செயலாளர் மற்றும் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் இருவரும் மைக்கில் பேசுவதை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள் மேலும் திமுக நிர்வாகிகள் இடையே உள்கட்சி பூசல் இருந்த நிலையில் தற்போது வெளிப்படையாக பொது மேடையில் நிர்வாகிகள் இருவரும் கடும் வாக்குவாதத்தை ஈடுபட்டது திமுகவினருக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது1