27.12.2025 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் திருக்குவளையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் நல சேவை மையங்கள் திறப்பு விழா தமிழ்நாடு வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடக்க விழா மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளை வாழக்கரை சாலையிலும் , எட்டுக்குடி சாலையிலும் இரண்டு உழவர் நல சேவை மையங்கள் குத்து விளக்கேற்றி துவங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வட்டார ஆத்மா திட்டக்குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் , திருக்குவளை கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் மலர்வண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், சுதா அருணகிரி, வாழக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், உழவர் நல சேவை மைய நிர்வாகிகள் ரோஸ்குமார், முரளி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
27.12.2025 நாகை மாவட்ட செய்தியாளர் மகேந்திரன் திருக்குவளையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உழவர் நல சேவை மையங்கள் திறப்பு விழா தமிழ்நாடு வேளாண்மை- உழவர் நலத்துறை சார்பில் வேளாண் கண்காட்சி முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் தொடக்க விழா மற்றும் வேளாண் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காணோளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.அதனை தொடர்ந்து நாகை மாவட்டம் திருக்குவளை வாழக்கரை சாலையிலும் , எட்டுக்குடி சாலையிலும் இரண்டு உழவர் நல சேவை மையங்கள் குத்து விளக்கேற்றி துவங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் வட்டார ஆத்மா திட்டக்குழு தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் , திருக்குவளை கல்வி வளர்ச்சிக்குழு தலைவர் மலர்வண்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வம், சுதா அருணகிரி, வாழக்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செழியன், உழவர் நல சேவை மைய நிர்வாகிகள் ரோஸ்குமார், முரளி மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
- ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தின் அவல நிலை! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் கேள்வி1
- Post by Sangili.v1
- ஆத்தூர்: அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து பெண் படுகாயம் வக்கம்பட்டி அடுத்த ஹோலி கிராஸ் பள்ளி அருகே திண்டுக்கல் - வத்தலகுண்டு நெடுஞ்சாலையில் 2 இரு சக்கர வாகனங்கள் மீது 2 கார்கள் மோதி விபத்து இந்த விபத்தில் திண்டுக்கல், VMR-பட்டியை சேர்ந்த ஜெயினி கல்லூரியில் பணிபுரியும் ரேவதி என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் விபத்து குறித்து தலைமையிலான போலீசார் விசாரணை1
- சாலையை கடந்து சென்ற யானைக் கூட்டம் – வாகன போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜவளகிரி வனப்பகுதிக்கு உட்பட்ட சூளகுண்டா சாலையில், இன்று காலை நேரத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையை கடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை வேளையில் பணிக்காக சென்ற வாகனங்களை யானைக் கூட்டம் வழிமறித்ததால், அப்பகுதியில் சிறிது நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை பாதுகாப்பாக சாலையோரம் நிறுத்தி, யானைகள் சாலையை கடந்து செல்ல தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். வனத்துறையினரின் கண்காணிப்பில் யானைக் கூட்டம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி சாலையை கடந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வாகன போக்குவரத்து வழக்க நிலைக்கு திரும்பியது. இந்த அபூர்வ நிகழ்வை நேரில் கண்ட பொதுமக்கள், தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து மகிழ்ந்தனர். யானைகள் பாதுகாப்பாக சென்றதை பார்த்து மக்கள் நிம்மதி அடைந்தனர். தேவைப்பட்டால்1
- ஆண்டிபட்டியில் அமைந்துள்ள 49 அடி உயர மாகாளியம்மனுக்கு மார்கழி மாத உற்சவ விழாவை முன்னிட்டு மோட்டார் மூலம் பாலபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி மற்றும் பூச்சொறிதழ் விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி - தேனி சாலையில் அமைந்திருக்கும் 49 அடி உயர சர்வ சக்தி மாகாளியம்மன் கோவிலின் மார்கழி மாத உற்சவ விழா கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாகாளியம்மனுக்கு 108 பால்குட அபிஷேக நிகழ்ச்சியும், பூச்சொறிதல் விழா நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதற்காக காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக கொண்டு வந்து அவை மோட்டார் மூலமாக எடுக்கபட்டு மாகாளி அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டு , தொடர்ந்து பூச்சொரிதல் விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பாலபிஷேகம் மற்றும் பூச்சொறிதல் விழா நிகழ்ச்சி நிறைவை தொடர்ந்து மாகாளியம்மனுக்கு தீபாராதானை காட்டப்பட்டது.1
- காஞ்சிபுரம். பாமகவின் இரு கண்களான ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேரனும் - காஞ்சி மேற்கு மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேச்சு...!!! காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் பா.ம.க.காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பொதுக் குழு கூட்டமானது மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.இதில், பாமகவின் இரு கண்களாக உள்ள ராமதாசும்,அன்புமணியும் ஒன்று சேர வேண்டுமெனவும்,குருவின் ஆசியோடு இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் வருகிற தேர்தலை நாம் கண்டிப்பாக சந்திப்போம் என நிர்வாகிகள் மத்தியில் மாவட்டச் செயலாளர் பெ.மகேஷ்குமார் பேசினார்.1
- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கழிக்க சிறுநீர் கழிப்பிடங்கள் இல்லாமலும், இதனால் பொதுமக்கள் கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பதால் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையத்தில் வரும் பயணிகளுக்கு சுகாதாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.1
- *தேனி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற ஸ்டிக்கரை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரால் பரபரப்பு* தமிழ்நாடு அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்று பெயர் இல்லாமல் அரசு போக்குவரத்து கழகம் மட்டுமே இருப்பதாக கூறி அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகத்தின் ஸ்டிக்கரை பேருந்துகளில் ஒட்டும் காணொளி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழக முழுவதும் உள்ள பேருந்து நிலையங்களில் உள்ள அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற வாசகம் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதே போல் தற்போது தேனி புதிய பேருந்து நிலையத்தில் தேனி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திருப்பூர் மற்றும் மதுரை செல்லும் பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை பேருந்தில் ஒட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேலும் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு என்கிற பெயர் இடம் பெற வேண்டும் என கூறி தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்1
- முல்லைப் பெரியாறு அணையில் புதுதில்லி C.S.M.R.S லிருந்து விஞ்ஞானி மணிஷ்குப்தா தலைமையில் 5 விஞ்ஞானிகள் மூலம் பிரதான அணையின் முகப்பினை R.O.V கருவி மூலம் நீருக்கு அடியில் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இன்று அந்தப் பணி முடிவுற்றது. இந்த ஆய்வுப்பணியில் பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் C. செல்வம் தலைமையில் தமிழ்நாடு நீர்வளத்துறை பொறியாளர்களும் கட்டப்பனா எம்.ஐ. டிவிசன் செயற்பொறியாளர் லெவின்ஸ் பாபு தலைமையில் கேரளா நீர்வளத்துறை பொறியாளர்களும் ஆய்வுப்பணி செய்தனர்.4