Shuru
Apke Nagar Ki App…
திருவெறும்பூர் சமத்துவ இடுகாடுடில் உள்ள நீர்நிலை தொட்டி மற்றும் அடி பம்பு உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை... திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் (SIT) 37 வது வார்டில் அமைந்துள்ள சமத்துவ இடுகாடு சுடுகாட்டில் மக்கள் பயன்படுத்தும் அடிபைப் மற்றும் நீர்த்தேக்க விரிசல் ஏற்பட்டு தொட்டி எப்பொழுது இடிந்து விழும் என்று தெரியாமல் உள்ளது அடிபம்பு துரு பிடித்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரியசாமி
திருவெறும்பூர் சமத்துவ இடுகாடுடில் உள்ள நீர்நிலை தொட்டி மற்றும் அடி பம்பு உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை... திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் (SIT) 37 வது வார்டில் அமைந்துள்ள சமத்துவ இடுகாடு சுடுகாட்டில் மக்கள் பயன்படுத்தும் அடிபைப் மற்றும் நீர்த்தேக்க விரிசல் ஏற்பட்டு தொட்டி எப்பொழுது இடிந்து விழும் என்று தெரியாமல் உள்ளது அடிபம்பு துரு பிடித்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
More news from தமிழ்நாடு and nearby areas
- தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு அம்மனை வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும் என பக்தர்கள் நம்புகின்றனர். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய் நொடிகள் நீங்கி, அவர்களின் குடும்பங்கள் வளம்பெறவும் வேண்டி, மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு. இந்த காலகட்டத்தில் அம்மன் தானாகவே கடும் பச்சைப் பட்டினி விரதம் இருந்து பக்தர்களுக்காக தன்னை வருத்திக்கொள்வது மரபு. இந்நாட்களில் அரிசி, துள்ளுமாவு, இளநீர் மட்டுமே அம்மனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. இவ்விழாவின்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து அம்மனை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் மஞ்சள் உடை அணிந்து, கடும் விரதம் இருந்து பயணம் செய்கின்றனர். கோயிலில் உள்ள தெப்பக்குளத்தில் புனித நீராடி, அலகு குத்துதல், காவடி எடுத்தல், அக்னி சட்டி ஏந்துதல், பால்குடம், முளைப்பாரி போன்றவற்றை எடுத்து வந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். இதன் தொடர்ச்சியாக சித்திரை மாதத்தில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சித்திரை தேர்த்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று காலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் புறப்பட்டு கொடிமரம் முன்பு எழுந்தருளினார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள தங்க கொடிமரத்திற்கும் அஸ்திர தேவர்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேளதாளங்கள் ஒலிக்க, மாரியம்மன் படம் பொறித்த கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.விழா நாட்களில் தினமும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து அருள்பாலித்தார். இரவில் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷா, மரக்குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நேற்று இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் 'வையாளி கண்டருளும்' நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (14.04.2026) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. மேல் அம்மன் தேரில் எழுந்தருள, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரில் ஆடி அசைந்து வரும் மாரியம்மனை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். தேருக்கு முன்னால் பக்தர்கள் கரகம், முளைப்பாரி, அலகு குத்துதல், பறவைக் காவடி ஆகியவற்றுடன் ஊர்வலமாக வந்தனர்.தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்கள் பெரும் திரளாக குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோயில் மண்டபத்தில் தற்காலிக போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்களை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர். பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்பட்டு, நீர்மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை ச.கண்ணனூர் பேரூராட்சி நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. தமிழகத்தின் புகழ்பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்கு உரிய சக்தி பீடமாக விளங்குகிறது. இங்கு அம்மனை வேண்டினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும், செல்வம் பெருகும், குடும்பத்தில் அமைதியும் செழிப்பும் நிலவும் என பக்தர்கள் நம்புகின்றனர். உலக நன்மைக்காகவும், பக்தர்களின் நோய் நொடிகள் நீங்கி, அவர்களின் குடும்பங்கள் வளம்பெறவும் வேண்டி, மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை 28 நாட்கள் பூச்சொரிதல் விழா நடைபெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பு.1
- திருமயம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக பி.கே. வைரமுத்து போட்டியிடுகின்றார். இதைத்தொடர்ந்து திருமயம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரப் பணியில் அவர் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் இன்று (13.4.2026) திருமயம் அருகே மணவாளி கரையில் அதிமுகவினர் திருமயம் வேட்பாளர் பி.கே.வைரமுத்திற்கு வாக்குகள் கேட்டு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர்.1
- திண்டுக்கல் மாவட்டம் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுப்பட்டி 44 வது வார்டுகளில் திமுக வேட்பாளர் ஐபி செந்தில் குமார் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் மாமன்ற உறுப்பினர் மார்த்தாண்டன் மற்றும் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அப்பகுதியில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது1
- இராசிபுரம் அத்தனூர் பேரூரில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் மதிவேந்தன் அவர்கள் கடந்த ஆட்சியில் செய்த நலத்திட்டங்களை காணொளி காட்சி மூலமாக விளக்கி பொதுமக்களிடத்தில் உதயசூரியனுக்கு வாக்களித்து வெற்றி பெற வாய்ப்பு கேட்டு வருகின்றார்1
- Post by ஆ.கார்த்திக் (P F H R.)1
- தலைஞாயிறு ஒன்றிய பகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் மா.மீ. புகழேந்திக்கு பாட்டு பாடி ஓட்டு கேட்ட செல்வராஜ் எம்பி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் மா.மீ. புகழேந்தி அவர்கள் தலைஞாயிறு ஒன்றியத்திற்குட்ட பன்னத்தெரு, திருவிடைமருதூர், நத்தப்பள்ளம், புத்தூர், நீர்முளை, அருந்தவம் புலம், ஆய்மூர், வடுகூர், மணக்குடி, காடந்தேத்தி, வட்டாக்குடி, உம்பளச்சேரி,துளசாபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் பங்கேற்று பொதுமக்களிடம் பாட்டு பாடி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். இதில் திமுக மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு மின் வளர்ச்சி கழக தலைவர் என்.கெளதமன், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.கே.வேதரெத்தினம், ஒன்றிய செயலாளர் மகா.குமார், விசிக மாவட்ட செயலாளர் சுமா. செல்வராசு, சிபிஐ மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் ராஜகுரு, சிபிஐ ஒன்றிய செயலாளர் சந்தானகிருஷ்ணன், மதிமுக ஒன்றிய செயலாளர் உத்திராபதி, தேமுதிக ஒன்றிய துணை செயலாளர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.1
- திருச்சி மாவட்டம் மருங்காபுரியை அடுத்த வளநாடு மற்றும் சுற்றியுள்ள பல பகுதிகளில் இன்று காலை முதல் அதிமுகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பிரச்சாரமானது மணப்பாறை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் பி.எல். விஜயகுமாரை ஆதரித்து நடைபெற்றது. இது மருங்காபுரி தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்றதில் இப்பகுதியை சேர்ந்த என்டிஏ கூட்டணியை சேர்ந்த மாவட்ட, மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.1
- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி போட்டியிடுகின்றார். இதனை அடுத்து திருமயம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சார பணி மேற்கொண்டு வரும் அவர், இன்று பொன்னமராவதி அருகே உள்ள வலையப்பட்டி பகுதியில் திமுக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்கு சேகரித்தார்.1
- இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூரில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்களின் ஆதர்வில் ராசிபுரம் பகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வீ.சசிகலா அவர்களை வெற்றி பெற வாய்ப்பு கேட்டு பிரச்சாரம் செய்தனர் பொதுமக்கள் விவசாய சின்னத்தில் வாக்களித்து புதிய மாற்றத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்று பிரச்சாரத்தில் பதிவு செய்தனர்1