logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

இன்று சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை..... இன்று ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் விளக்குகள் ஏற்றியும் கூல் காச்சி பக்தர்களுக்கு வழங்கினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்வாகத்தினர்செய்திருந்தினர்

16 hrs ago
user_தங்க சுரேஷ்
தங்க சுரேஷ்
பத்திரிகையாளர் வாடிப்பட்டி, மதுரை, தமிழ்நாடு•
16 hrs ago
38f4fa91-27b8-4f9a-9aff-2c7eb4ef28c8
3fecfee2-abc5-4f36-b41c-3bf79a57b78c

இன்று சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை..... இன்று ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் விளக்குகள் ஏற்றியும் கூல் காச்சி பக்தர்களுக்கு வழங்கினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிர்வாகத்தினர்செய்திருந்தினர்

More news from தமிழ்நாடு and nearby areas
  • ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
    1
    ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை
சிங்கம்புணரி ஸ்ரீகாளியம்மன் கோயிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை 108 திருவிளக்கு பூஜை விமர்சையாக நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பெண் பக்தர்கள் கலந்துகொண்டனர். சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, மஞ்சள் விநாயகர் செய்து பூஜை செய்தனர். பங்கேற்றோருக்கு தாலி கயிறு உள்ளிட்ட மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    7 hrs ago
  • ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2 பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன் ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2 பவுன் நகைகள் 280 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    2
    ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு!
ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு! 
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே பழைய பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் த/பெ பாண்டி கடந்த 7 ந் தேதி  பூட்டை உடைத்து‌ பீரோவிலிருந்த 32 1/2  பவுன் நகை மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்களை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து  ஒட்டன்சத்திரம் கோட்ட காவல் துணை காணிப்பாளர் கார்த்திகேயன்  ஆய்வாளர் லிங்கபாண்டியன் சார்பு ஆய்வாளர் சிவராஜ் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.   இப்பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவு ஆகி உள்ள காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டு சம்பவத்தில் திண்டுக்கல் அருகே கதிரியன் குளத்தை சேர்ந்த ராஜசேகர் என்பவர் ஈடுபட்டதும் அவர் மற்றொரு வழக்கில் திருட்டு வழக்கில் கைதாகி மதுரை சிறையில் இருப்பதும் தெரியவந்தது இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர் .அப்போது அவர் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடிய இத ஒப்பிக்கொண்டதை அடுத்து அவரை கைது செய்து அவரிடமிருந்து 32 1/2  பவுன்  நகைகள் 280 கிராம்  வெள்ளி பொருட்களை போலீசார்  பறிமுதல் செய்தனர் குற்றவாளி விரைந்து செயல்பட்டு கைது செய்து நகைகளை முழுவதையும் மீட்ட ஒட்டன்சத்திரம் போலீசாரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டினார்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர் *விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...* விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    1
    பாண்டியன் நகர் காந்திநகரில் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்
*விருதுநகரில் சுமார் 55 .40 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி பூமி பூஜையை தொடங்கி வைத்த  விருதுநகர்  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம்...*
விருதுநகர் ரோசல்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் சுமார்  500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த நிலையில் தங்கள் பகுதியில் பல மாதங்களாகசாலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் மழைக்காலத்தில் சென்று வர சிரமம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று விருதுநகர் காந்திநகர் தெருவில் சுமார் 900 மீட்டர் தொலைவில் சுமார் 55.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையினை விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி செல்வம் அவர்கள் தொடங்கி வைத்தார்
    user_Jeyaram
    Jeyaram
    சாத்தூர், விருதுநகர், தமிழ்நாடு•
    13 hrs ago
  • கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!” சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார். சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார். மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார். இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது. தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார். உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
    1
    கணிதம் கடினம் என்ற மாணவன்... உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரிடம் பாராட்டு!”

சிவகங்கை அருகே 9 வயது மாணவன் ஒருவர் கணிதப் பாடத்தில் இருந்த சவாலை வென்று உலக சாதனை படைத்து மாவட்ட ஆட்சியரின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
சிவகங்கை அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் திருப்பதி – வனிதா தம்பதியினரின் மகன் ஸ்ரீ வர்ஷன், சிவகங்கையில் உள்ள டி.எஸ். கார்த்திகேய ராஜா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்த ஏபிசிடி, எண்கள் மற்றும் கணித வாய்ப்பாடுகளை ஆர்வத்துடன் கற்ற மாணவன், கணிதம் தனக்கு கடினமாக இருப்பதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தாயின் ஊக்கத்தால் கணித வாய்ப்பாடுகளை பிழையின்றி கற்று, பின்னர் அவற்றை தலைகீழாக கூறும் பயிற்சியிலும் ஈடுபட்டார்.
மாணவனின் திறமையை கண்டறிந்த பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் தொடர்ந்து பயிற்சி அளித்தனர். அதன் விளைவாக ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை தலைகீழாக மனப்பாடம் செய்து அசத்தினார்.
இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நடத்திய போட்டியில் பங்கேற்ற ஸ்ரீ வர்ஷன், ஒன்று முதல் பத்து வரை உள்ள வாய்ப்பாடுகளை வெறும் 1 நிமிடம் 46 வினாடிகளில் தலைகீழாக கூறி உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனையை அங்கீகரித்து இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
தமிழகத்திற்கும், சிவகங்கை மாவட்டத்திற்கும், தனது பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவன் ஸ்ரீ வர்ஷனை பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். மேலும், மாவட்ட ஆட்சியர் ஆகாஷை நேரில் சந்தித்து வாழ்த்துகளையும் பெற்றார்.
உலக சாதனைக்கு தனது தாயின் ஊக்கமே காரணம் என தெரிவித்த மாணவன் ஸ்ரீ வர்ஷன், தனக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
    user_Devakottaigani news
    Devakottaigani news
    சிவகங்கை, சிவகங்கை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • பழனி நகர் பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை தனித்தனியே பிரித்து சேகரித்து வந்தது வரவேற்கத்தக்கது
    1
    பழனி நகர் பகுதிகளில் நகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களிடம் மக்கும் குப்பை மக்கா குப்பை தனித்தனியே பிரித்து சேகரித்து வந்தது வரவேற்கத்தக்கது
    user_முத்து ராஜா
    முத்து ராஜா
    Local News Reporter பழனி, திண்டுக்கல், தமிழ்நாடு•
    15 hrs ago
  • ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கௌமாரியம்மன் சிறப்பு பூஜை *ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்* தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது . மிகவும் புகழ்பெற்ற பழ நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். அம்மனுக்கு பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த கௌமாரியம்மன் தரிசனம் செய்வதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர் . பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் அறநிலையத்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் ஒரே வரிசையில் சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வீரபாண்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . காப்புக் கட்டி விரதம் ஏற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் திருவிளக்கை ஏற்றிச் சென்றனர்.
    1
    ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமை முன்னிட்டு அருள்மிகு கௌமாரியம்மன் சிறப்பு பூஜை
*ஆடி மாதத்தை முன்னிட்டு பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்*
தேனி மாவட்டம் தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது .
மிகவும் புகழ்பெற்ற பழ நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயிலில் இன்று ஆடி மாத  வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை தரிசனம் செய்வதற்கு காலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர்.
அம்மனுக்கு பட்டுடுத்தி சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்த கௌமாரியம்மன் தரிசனம் செய்வதற்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து செல்கின்றனர் .
பக்தர்களின் வசதிக்கேற்ப கோயில் அறநிலையத்துறை சார்பில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும் பொதுமக்கள் ஒரே வரிசையில் சென்று வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வீரபாண்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .
காப்புக் கட்டி விரதம் ஏற்பட்ட பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்து கோயில் வளாகத்தில் திருவிளக்கை ஏற்றிச் சென்றனர்.
    user_Shakthi
    Shakthi
    பத்திரிகையாளர் பெரியகுளம், தேனி, தமிழ்நாடு•
    9 hrs ago
  • குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் உறுதி சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்திற்கு கனிமவளத்துறை அமைச்சர் பிரபு வருகை தந்தார். அப்போது 36 ஏக்கர் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு கிராம மக்களை நேரில் சந்தித்து உறுதி செய்தார். ஐந்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தி, குவாரி தடை, வழக்கு ரத்து, வேலைவாய்ப்பு கோரினர். அமைச்சர் செல்போன்கள் மீட்க உத்தரவிட்டார். மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
    1
    குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் உறுதி
சிங்கம்புணரி அருகே ஜெயங்கொண்டநிலை கிராமத்திற்கு கனிமவளத்துறை அமைச்சர் பிரபு வருகை தந்தார். அப்போது 36 ஏக்கர் குவாரிக்கு இதுவரை அனுமதி இல்லை என கனிமவளத்துறை அமைச்சர் டி.கே. பிரபு கிராம மக்களை நேரில் சந்தித்து உறுதி செய்தார். ஐந்து ஊர் மக்கள் போராட்டம் நடத்தி, குவாரி தடை, வழக்கு ரத்து, வேலைவாய்ப்பு கோரினர். அமைச்சர் செல்போன்கள் மீட்க உத்தரவிட்டார். மக்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
    user_ABDUL SALAM
    ABDUL SALAM
    Photographer சிங்கம்புணரி, சிவகங்கை, தமிழ்நாடு•
    9 hrs ago
  • ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநில செயலாளர் தலித் கே. ராமர் திருவுருவபட திறப்பு விழா மாநில தலைவர் ச.கருப்பையா பங்கேற்பு. ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் தலித் கே.ராமர் நினைவேந்தல் திருவுருவ படத்திறப்பு விழா மாநில தலைவர் ச.கருப்பைய்யா பங்கேற்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்கம் மாநில செயலாளர் தலித்.கே.ராமர் நினைவேந்தல் மற்றும் திருவுருவ படத்திறப்பு விழா தலித் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் அசுரன் என்ற மகுடீஸ்வரன், தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தலித் விடுதலை இயக்க மாநில தலைவர்.ச.கருப்பைய்யா கலந்துகொண்டு தலித் இயக்க மாநில செயலாளர் தலித் கே ராமர் திருவுருவ படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் 28 ந்தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் நிலமீட்பு குறித்த ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தலித் கதிர் காமன், தலித் விடுதலை இயக்கம் மாநில இளைஞரணிச் செயலாளர் பீமா ராவ் தமிழ் புலிகள் கட்சியின் மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் சின்னகருப்பன், பிஎஸ்பி மாவட்ட தலைவர் மனேகரன்,இந்தியதேசிய காங்கிரஸ் கட்சி எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் பிச்சை முத்து, த.தீ.ஒ.மு மாவட்ட தலைவர் முத்துசாமி, தேவேந்திர மறுமலர்ச்சி பேரவை பகத்சிங் பழனிசாமி, ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை தலித் கே. சுப்பிரமணியன், தமிழ் தேச மக்கள் முன்னணி காளிமுத்து, விசிக இளஞ்சிறுத்தைகள் பேரவை மாவட்ட செயலாளர் வடிவேல்,உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின் இறுதியில் தலித் விடுதலை இயக்க திண்டுக்கல் மாவட்ட தலைவர் ராசேந்திரன் நன்றி தெரிவித்தார்.
    2
    ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநில செயலாளர் தலித் கே. ராமர் திருவுருவபட திறப்பு விழா
மாநில தலைவர் ச.கருப்பையா பங்கேற்பு.

ஒட்டன்சத்திரத்தில் தலித் விடுதலை இயக்க மாநிலச் செயலாளர் தலித் கே.ராமர் நினைவேந்தல் திருவுருவ படத்திறப்பு விழா மாநில தலைவர் ச.கருப்பைய்யா பங்கேற்பு


திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில்  தலித் விடுதலை இயக்கம் மாநில செயலாளர் தலித்.கே.ராமர் நினைவேந்தல் மற்றும் திருவுருவ படத்திறப்பு விழா தலித் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர்
அசுரன் என்ற மகுடீஸ்வரன், தலைமையில் நடைபெற்றது.  சிறப்பு அழைப்பாளராக தலித் விடுதலை இயக்க மாநில தலைவர்.ச.கருப்பைய்யா கலந்துகொண்டு தலித் இயக்க  மாநில செயலாளர் தலித் கே ராமர் திருவுருவ படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை நிகழ்த்தி வரும் ஆகஸ்ட் மாதம் 28 ந்தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல்லில் நிலமீட்பு குறித்த ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இந்நிகழ்ச்சியில்  தலித் கதிர் காமன், தலித் விடுதலை இயக்கம் மாநில இளைஞரணிச் செயலாளர் பீமா ராவ் தமிழ் புலிகள் கட்சியின் மாநில வழக்குரைஞர் அணி செயலாளர் சின்னகருப்பன், பிஎஸ்பி மாவட்ட தலைவர் மனேகரன்,இந்தியதேசிய காங்கிரஸ் கட்சி எஸ்சி எஸ்டி பிரிவு மாவட்ட தலைவர் பிச்சை முத்து, த.தீ.ஒ.மு மாவட்ட தலைவர் முத்துசாமி, தேவேந்திர மறுமலர்ச்சி பேரவை பகத்சிங் பழனிசாமி, ஆதித்தமிழர் சமூக நீதிப் பேரவை தலித் கே. சுப்பிரமணியன், தமிழ் தேச மக்கள் முன்னணி காளிமுத்து, விசிக இளஞ்சிறுத்தைகள் பேரவை மாவட்ட செயலாளர் வடிவேல்,உள்ளிட்ட  100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியின்
இறுதியில் தலித் விடுதலை இயக்க திண்டுக்கல்  மாவட்ட தலைவர் ராசேந்திரன் நன்றி தெரிவித்தார்.
    user_Elangovan
    Elangovan
    Local News Reporter ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தமிழ்நாடு•
    11 hrs ago
  • திண்டுக்கல்லில் வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரின் சிசிடிவி காட்சி
    1
    திண்டுக்கல்லில்  வீடுகளில் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரின் சிசிடிவி காட்சி
    user_RAJA news
    RAJA news
    Oddanchatram, Dindigul•
    13 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.