பள்ளி மாணவியைப் பிரம்பால் தாக்கிய ஆசிரியை கைது : தூத்துக்குடியில் பரபரப்பு தூத்துக்குடியில் ஒன்றாம் வகுப்பு மாணவியைப் பிரம்பால் தாக்கியதாகப் பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆபிரகாம். இவரது மனைவி ஜாய்ஸ் (45). இவர் தூத்துக்குடி தெற்குப் புதுத் தெருவில் உள்ள மாநகராட்சி T.D.T.A நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கடந்த 19-ஆம் தேதி, ஜாய்ஸின் வகுப்பில் பயிலும் முதலாம் வகுப்பு மாணவி ஒருவர் சரியாகப் படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, அந்த மாணவியைப் பிரம்பால் தாக்கியுள்ளார். இதில் மாணவியின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற மாணவி, தனது கையில் இருந்த காயத்தைக் காட்டி தாயாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். இது குறித்து விளக்கம் கேட்க மாணவியின் தாயார் பள்ளிக்குச் சென்று ஆசிரியையிடம் பேசியுள்ளார். அப்போது, "மாணவிகள் படிக்கவில்லை என்றால் அப்படித்தான் அடிப்பேன்" என ஆசிரியை அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவியின் தாயார், தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் மோகன் ஐயர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வி ஆகியோர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், ஆசிரியை ஜாய்ஸ் மாணவியைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பிஎன்எஸ் 115 (2) சட்டப்பிரிவின் கீழ் ஆசிரியை ஜாய்ஸ் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். பள்ளியில் ஆசிரியை ஒருவரே மாணவியைத் தாக்கிய சம்பவம் அப்பகுதி கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Post by மா.கணேஷ்1
- கோவில்பட்டியில் சட்ட மன்ற தேர்தலை முன்னிட்டு இன்று அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜ் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இருந்து சுமார் 3000 பேர் பேரணியாக மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று இந்த நிகழ்ச்சியில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும் கலந்து ஊர்வலமாக சென்று மனுதாக்கல் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி நகரச் செயலாளர்விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன்,எம்ஜிஆர் மன்ற செயலாளர் பூமாரியப்பன்,மாவட்ட கலைப்பிரிவு இணைச் செயலாளர் பன்னீர் குளம் முத்துப்பாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பசீர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட செயலாளர் பூலோகம் பாண்டியன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் கல்யாணப்பாண்டியன், நகரச் செயலாளர் அருண், பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் செயலாளர் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் இராமர் பாண்டியன், விவசாயி அணி மாவட்ட தலைவர் சுப்பிரமணியன்,மருதையா, ஒன்றிய துணைத் தலைவர்கள் இராமகிருஷ்ணன், மணிகண்டன், தங்கத்துரை,4
- திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர்.சாலையில் நடந்த விஜய் பிரச்சாரத்தில், 2 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு. அவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நன்றி சன் நெட்வொர்க்.1
- 7வது முறையாக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வேட்புமனு தாக்கல் செய்தார்...தமிழகத்தில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் நம்பிக்கை விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு போட்டியிடுகிறார். இந்நிலையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சாந்தியிடம் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். ஏற்கனவே ஆறு முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றுள்ள அவர் ஒரு முறை வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இந்நிலையில் 7வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அமைச்சர் தென்னரசுவிற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பேராதரவோடு திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் மகத்தான வெற்றியை தான் பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளதாகவும் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.7
- சுரண்டை அருள்மிகு வெயிலாயி அம்மன் திருக்கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கும்மி பாட்டு நிகழ்ச்சி நடந்தது1
- நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ ஆஸ்டின் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து அவர் இன்று நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி காளீஸ்வரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ், முன்னாள் எம்,பி ஹெலன் டேவிட்சன் ஆகியோர் இருந்தனர்.1
- மதுரை மத்திய தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான புதிய நீதி கட்சியின் வேட்பாளர் நடிகர் சுந்தர் சி அவர்கள் இன்று காலை மதுரை மேற்கு மண்டலத்தில் தேர்தல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தார் மனுதாக்கல் செய்துவிட்டு வெளியே வரும்பொழுது அங்கிருந்த மாநகராட்சி பணியாளர்களிடம் செல்பி எடுத்துக் கொண்டார். அவருடன் வந்த நடிகை குஷ்புவும் செல்பி எடுத்துக் கொண்டார்.1
- Post by மா.கணேஷ்1