Shuru
Apke Nagar Ki App…
புதிய புயல் உருவாக வாய்ப்பு. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை.
Senthilkumarankumaran
புதிய புயல் உருவாக வாய்ப்பு. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை.
More news from தமிழ்நாடு and nearby areas
- கோவை மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு – கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாநகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளில் மோப்பநாய்களின் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதுடன், பொதுமக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.1
- புதிய புயல் உருவாக வாய்ப்பு. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை.1
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஆர்.எஸ் கோவை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரமடை அருகே தனியார் மண்டபத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக டி.ஆர்.எஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் இனிப்பு, காரம், வேஷ்டி, சர்ட், சேலை, மற்றும் 14 மளிகை பொருட்களுடன் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உடன் அவரது குடும்பத்தார் டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு அவருக்கு இச்சாவியை பாராட்டி தங்களது உள்ளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.1
- கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று இரவு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது ஏலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கம் இருந்த டயர் வெடித்தது இதில் நிலை தடுமாறிய தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிலர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் பொள்ளாச்சி கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.1
- திருப்பூரில் ஸ்டார் 3.0 இ-டெண்டருக்கு எதிர்ப்பு – 300-க்கும் மேற்பட்ட பத்திர நகல் எழுத்தர்கள் முற்றுகைப் போராட்டம் வருகின்ற நவம்பர் 10, 11 வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு திருப்பூரில் ஸ்டார் 3.0 இ-டெண்டருக்கு எதிர்ப்பு – 300-க்கும் மேற்பட்ட பத்திர நகல் எழுத்தர்கள் முற்றுகைப் போராட்டம் வருகின்ற நவம்பர் 10, 11 வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார் 3.0 இ-டெண்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பத்திர நகல் எழுதுவோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் மாநில சங்கம், தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கம் மற்றும் கணினியில் பத்திரம் தயாரிப்போர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, "ரத்து செய்... ரத்து செய்... இ-டெண்டரை ரத்து செய்", "அழிக்காதே... அழிக்காதே... பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசு பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார் 3.0 மென்பொருள் புதுப்பித்தல் மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய மாதிரி பத்திரப்பதிவு மையங்களுக்கான டெண்டர் நடைமுறை பொதுமக்களுக்கும், பத்திர எழுத்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என போராட்டத்தில் ஈடுபட்டார்கள் மேலும், ஹப் என்ற பெயரில் தனியாரிடம் பதிவு பணிகளை ஒப்படைப்பதன் மூலம் தட்கல் மற்றும் பிரீமியம் சேவைகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் வழிகாட்டி மதிப்பு உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மேலும் பொருளாதார சுமையை சந்திக்க நேரிடும் என்றும் அதேபோல், காகிதமில்லா பதிவு மற்றும் நேரில் வரத் தேவையற்ற பதிவு நடைமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தொழில்நுட்ப மேம்பாடு என்ற பெயரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால், பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறிய அவர்கள், தமிழக அரசு ஸ்டார் 3.0 திட்டத்தை மறுபரிசீலனை செய்து, இ-டெண்டர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதேபோல வருகின்ற நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.1
- உடுமலை நேரு காந்தி ஆசிரம குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்!! திருப்பூர் உடுமலை காந்தி ஆசிரமத்தில் தங்கியுள்ள 45 குழந்தைகளுக்கு, கைகொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சரவணன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.1
- நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்களின் சார்பில் உதகையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தெரிவித்தார், நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்கள் தலைமையில், உதகை தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், உதகை நகர செயலாளர் ரித் கார்த்திக், மாவட்ட செயலாளர் செமி, முன்னாள் நகரத் தலைவர் பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,, நிகழ்வில் உதகை சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்த அனைவருக்கும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்,1
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் தீவிர வாகன சோதனை – பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் நடவடிக்கை! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாநகர காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில், துடியலூர் C6 காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதையும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.1