தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஆர்.எஸ் கோவை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரமடை அருகே தனியார் மண்டபத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக டி.ஆர்.எஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் இனிப்பு, காரம், வேஷ்டி, சர்ட், சேலை, மற்றும் 14 மளிகை பொருட்களுடன் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உடன் அவரது குடும்பத்தார் டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு அவருக்கு இச்சாவியை பாராட்டி தங்களது உள்ளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஆர்.எஸ் கோவை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரமடை அருகே தனியார் மண்டபத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக டி.ஆர்.எஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் இனிப்பு, காரம், வேஷ்டி, சர்ட், சேலை, மற்றும் 14 மளிகை பொருட்களுடன் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உடன் அவரது குடும்பத்தார் டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு அவருக்கு இச்சாவியை பாராட்டி தங்களது உள்ளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.
- கோவை மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு – கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாநகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளில் மோப்பநாய்களின் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதுடன், பொதுமக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.1
- புதிய புயல் உருவாக வாய்ப்பு. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை.1
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஆர்.எஸ் கோவை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரமடை அருகே தனியார் மண்டபத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக டி.ஆர்.எஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் இனிப்பு, காரம், வேஷ்டி, சர்ட், சேலை, மற்றும் 14 மளிகை பொருட்களுடன் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உடன் அவரது குடும்பத்தார் டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு அவருக்கு இச்சாவியை பாராட்டி தங்களது உள்ளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.1
- கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் தனியார் பேருந்தின் டயர் வெடித்ததில் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று இரவு சுமார் 60க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது ஏலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென முன்பக்கம் இருந்த டயர் வெடித்தது இதில் நிலை தடுமாறிய தனியார் பேருந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு சிலர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் பொள்ளாச்சி கோவை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.1
- உடுமலை நேரு காந்தி ஆசிரம குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்!! திருப்பூர் உடுமலை காந்தி ஆசிரமத்தில் தங்கியுள்ள 45 குழந்தைகளுக்கு, கைகொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சரவணன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.1
- நீலகிரி மாவட்டம் உதகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்களின் சார்பில் உதகையில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் தெரிவித்தார், நீலகிரி மாவட்ட உதகையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று உதகை சட்டமன்ற உறுப்பினர் போஜராஜ் அவர்கள் தலைமையில், உதகை தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது, நிகழ்ச்சியில் பாஜக மாவட்டத் தலைவர் தர்மன், முன்னாள் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், உதகை நகர செயலாளர் ரித் கார்த்திக், மாவட்ட செயலாளர் செமி, முன்னாள் நகரத் தலைவர் பிரவீன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்,, நிகழ்வில் உதகை சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்த அனைவருக்கும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்,1
- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் தீவிர வாகன சோதனை – பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய போலீசார் நடவடிக்கை! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் மாநகர காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில், துடியலூர் C6 காவல் நிலைய காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிப்பதையும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாநகரில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறையினர் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.1
- திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. நேற்று காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் கூறுகையில், திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் என்பதும், இவர் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோட்டில் இருசக்கர வாகன ஓர்க்ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையருகே இளநீர் வியாபாரம் செய்து வருபவர் வெள்ளத்துரை. இந்நிலையில் நேற்று காலை ஒர்க்ஷாப் வந்த வினோத்குமார் டேபிளில் சாமி கும்பிட்டு வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. எலுமிச்சம்பழமானது இளநீர் வியாபாரி வெள்ளத்துரை கடை முன்பாக விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த வெள்ளத்துரை வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் மேலும் ஆத்திரமடைந்த வெள்ளத்துலை இளநீர் சீவ பயன்படுத்தும் அரிவாளை எடுத்து கொண்டு வினோத்குமாரை வெட்ட துரத்தியுள்ளார். பயந்த போன வினோத்குமார் அங்குமிங்கும் ஓடியுள்ளார். ஆனால் வெள்ளத்துரை விடாமல் அவரை துரத்தி வெட்ட முயற்சித்தார். இதில் வினோத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் வினோத்குமாரை காப்பாற்றி ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஊத்துக்குளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளநீர் வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் சாலையில் துரத்தி சென்று ஒருவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.3