logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. நேற்று காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் கூறுகையில், திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் என்பதும், இவர் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோட்டில் இருசக்கர வாகன ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையருகே இளநீர் வியாபாரம் செய்து வருபவர் வெள்ளத்துரை. இந்நிலையில் நேற்று காலை ஒர்க்‌ஷாப் வந்த வினோத்குமார் டேபிளில் சாமி கும்பிட்டு வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. எலுமிச்சம்பழமானது இளநீர் வியாபாரி வெள்ளத்துரை கடை முன்பாக விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த வெள்ளத்துரை வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் மேலும் ஆத்திரமடைந்த வெள்ளத்துலை இளநீர் சீவ பயன்படுத்தும் அரிவாளை எடுத்து கொண்டு வினோத்குமாரை வெட்ட துரத்தியுள்ளார். பயந்த போன வினோத்குமார் அங்குமிங்கும் ஓடியுள்ளார். ஆனால் வெள்ளத்துரை விடாமல் அவரை துரத்தி வெட்ட முயற்சித்தார். இதில் வினோத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் வினோத்குமாரை காப்பாற்றி ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஊத்துக்குளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளநீர் வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் சாலையில் துரத்தி சென்று ஒருவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

22 min ago
user_Ramesh
Ramesh
Local News Reporter திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
22 min ago

திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. நேற்று காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் கூறுகையில், திருப்பூர் -

ஊத்துக்குளி சாலை, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் என்பதும், இவர் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோட்டில் இருசக்கர வாகன ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையருகே இளநீர் வியாபாரம் செய்து வருபவர் வெள்ளத்துரை. இந்நிலையில் நேற்று காலை ஒர்க்‌ஷாப் வந்த வினோத்குமார் டேபிளில் சாமி கும்பிட்டு வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. எலுமிச்சம்பழமானது இளநீர் வியாபாரி வெள்ளத்துரை கடை முன்பாக விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த வெள்ளத்துரை வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் மேலும் ஆத்திரமடைந்த வெள்ளத்துலை இளநீர்

சீவ பயன்படுத்தும் அரிவாளை எடுத்து கொண்டு வினோத்குமாரை வெட்ட துரத்தியுள்ளார். பயந்த போன வினோத்குமார் அங்குமிங்கும் ஓடியுள்ளார். ஆனால் வெள்ளத்துரை விடாமல் அவரை துரத்தி வெட்ட முயற்சித்தார். இதில் வினோத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் வினோத்குமாரை காப்பாற்றி ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஊத்துக்குளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளநீர் வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் சாலையில் துரத்தி சென்று ஒருவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More news from Tamil Nadu and nearby areas
  • தீபாவளி பண்டிகை எதிரொலி - கோவையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு: கோவில்கள், வணிக வளாகங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு தீவிர சோதனை! 2022 கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் பலத்த கண்காணிப்பு: மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்! ​ நாளை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 2022-ஆம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாக, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் முன்பாக நள்ளிரவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ​இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டும், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்கவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும் வெளியூர்களுக்குப் பயணிக்கவும் கூடி வருவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கக் கோவை மாநகரக் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. கோவை மாநகரில் ​உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில், ​உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில், ​டவுன்ஹால் கோனியம்மன் கோவில், ​அவிநாசி ரோடு தண்டு மாரியம்மன் கோவில் ​மற்றும் மாநகரின் பிரதான வணிக வளாகங்கள், காந்திபுரம் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் (BDDS) மற்றும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். ​காவல் துறையின் மோப்ப நாய் (Sniffer Dogs) உதவியுடன் கோவில் வளாகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான உடமைகள் ஆகியவை தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், முக்கிய சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, நள்ளிரவு முதல் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ​பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது பொருட்களோ தென்பட்டால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
    3
    தீபாவளி பண்டிகை எதிரொலி - கோவையில் உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பு: கோவில்கள், வணிக வளாகங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு தீவிர சோதனை!
2022 கார் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியில் பலத்த கண்காணிப்பு: மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர்!
​ நாளை தீபாவளி பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, கோவை மாநகர் முழுவதும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 2022-ஆம் ஆண்டு கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் தேதி தீபாவளிப் பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பாக, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில் முன்பாக நள்ளிரவில் கார் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
​இந்தச் சம்பவத்தை கருத்தில் கொண்டும், நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான பொதுமக்கள் பொருட்கள் வாங்கவும், வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லவும் வெளியூர்களுக்குப் பயணிக்கவும் கூடி வருவதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கக் கோவை மாநகரக் காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
கோவை மாநகரில்
​உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் திருக்கோவில்,
​உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில்,
​டவுன்ஹால் கோனியம்மன் கோவில்,
​அவிநாசி ரோடு தண்டு மாரியம்மன் கோவில்
​மற்றும் மாநகரின் பிரதான வணிக வளாகங்கள், காந்திபுரம் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர் (BDDS) மற்றும் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
​காவல் துறையின் மோப்ப நாய் (Sniffer Dogs) உதவியுடன் கோவில் வளாகங்கள், வாகன நிறுத்தும் இடங்கள் மற்றும் சந்தேகத்திற்கு இடமான உடமைகள் ஆகியவை தீவிரமாகச் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில், முக்கிய சந்திப்புகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, நள்ளிரவு முதல் தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
​பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் மாநகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான நபர்களோ அல்லது பொருட்களோ தென்பட்டால் உடனடியாகக் காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
    user_Sekaran
    Sekaran
    Local News Reporter Coimbatore South, Tamil Nadu•
    15 min ago
  • பவானிசாகர் அருகே தாழ்வான பகுதியில் மழைநீர் தேக்கம் பொதுமக்கள், மாணவர்கள் அவதி சாலையை சீரமைக்க கோரிக்கை ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தண்டியூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரங்காட்டுர் பிள்ளையார் கோவிலில் இருந்து அக்கடி தத்தப்பள்ளி கிராமத்துக்குச் செல்லும் சாலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்களில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மழைநீர் தேங்காத வகையில் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என ஈரோடு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    1
    பவானிசாகர் அருகே தாழ்வான பகுதியில் மழைநீர் தேக்கம் பொதுமக்கள், மாணவர்கள் அவதி  சாலையை சீரமைக்க கோரிக்கை
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட உத்தண்டியூர் ஊராட்சிக்குட்பட்ட ஏரங்காட்டுர் பிள்ளையார் கோவிலில் இருந்து அக்கடி தத்தப்பள்ளி கிராமத்துக்குச் செல்லும் சாலையில், வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சாலையைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த சாலையை சீரமைக்கக் கோரி பல ஆண்டுகளாக கிராம சபைக் கூட்டங்களில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மழைநீர் தேங்காத வகையில் சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என ஈரோடு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    user_ஆனந்த
    ஆனந்த
    சத்தியமங்கலம், ஈரோடு, தமிழ்நாடு•
    5 hrs ago
  • கோவை மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு – கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை! தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாநகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளில் மோப்பநாய்களின் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதுடன், பொதுமக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    1
    கோவை மாநகரில் போலீசார் தீவிர கண்காணிப்பு – கரும்புக்கடை, உக்கடம் பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் அதிரடி சோதனை!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகரில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாநகர காவல்துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, காவல்துறைத் தலைவர், மேற்கு மண்டலம் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் (பொறுப்பு) திருமதி R.V. ரம்யா பாரதி, IPS., அவர்களின் உத்தரவின்பேரில் மாநகரின் முக்கியப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக, கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளில் மோப்பநாய்களின் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகையின்போது அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதுடன், பொதுமக்கள் அச்சமின்றிப் பாதுகாப்பாகப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    user_Kovai fast
    Kovai fast
    கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    6 hrs ago
  • புதிய புயல் உருவாக வாய்ப்பு. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை.
    1
    புதிய புயல் உருவாக வாய்ப்பு.
சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு கனமழை.
    user_Senthilkumarankumaran
    Senthilkumarankumaran
    Journalist கோயம்புத்தூர் தெற்கு, கோயம்புத்தூர், தமிழ்நாடு•
    7 hrs ago
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஆர்.எஸ் கோவை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரமடை அருகே தனியார் மண்டபத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக டி.ஆர்.எஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் இனிப்பு, காரம், வேஷ்டி, சர்ட், சேலை, மற்றும் 14 மளிகை பொருட்களுடன் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உடன் அவரது குடும்பத்தார் டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு அவருக்கு இச்சாவியை பாராட்டி தங்களது உள்ளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.
    1
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 200 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய டி.ஆர்.எஸ்


கோவை மாவட்டம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காரமடை அருகே தனியார் மண்டபத்தில் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 200 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளாக டி.ஆர்.எஸ் பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் அண்ட் ப்ரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மக்கள் சேவகர் டி.ஆர்.சண்முகசுந்தரம் வழங்கினார். இதில் இனிப்பு, காரம், வேஷ்டி, சர்ட், சேலை, மற்றும் 14 மளிகை பொருட்களுடன் அடங்கிய தொகுப்பினை நலத்திட்ட  உதவிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் உடன் அவரது குடும்பத்தார் டி.ஆர்.எஸ்.விஜயலட்சுமி, காவியா விமல் குமார், மோனிஷா ரிஷிவந்த் ஆகியோர் இணைந்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தார் கலந்து கொண்டு அவருக்கு இச்சாவியை பாராட்டி தங்களது உள்ளம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தார்கள்.
    user_Kumar.A
    Kumar.A
    Coimbatore North, Tamil Nadu•
    19 hrs ago
  • உடுமலை நேரு காந்தி ஆசிரம குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்!! திருப்பூர் உடுமலை காந்தி ஆசிரமத்தில் தங்கியுள்ள 45 குழந்தைகளுக்கு, கைகொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சரவணன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    1
    உடுமலை நேரு காந்தி ஆசிரம குழந்தைகளுக்கு புத்தாடை வழங்கல்!!
திருப்பூர் உடுமலை காந்தி ஆசிரமத்தில் தங்கியுள்ள 
45 குழந்தைகளுக்கு, கைகொடுக்கும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் சரவணன் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
    user_SELVA
    SELVA
    உடுமலைப்பேட்டை, திருப்பூர், தமிழ்நாடு•
    9 hrs ago
  • திருப்பூரில் ஸ்டார் 3.0 இ-டெண்டருக்கு எதிர்ப்பு – 300-க்கும் மேற்பட்ட பத்திர நகல் எழுத்தர்கள் முற்றுகைப் போராட்டம் வருகின்ற நவம்பர் 10, 11 வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு திருப்பூரில் ஸ்டார் 3.0 இ-டெண்டருக்கு எதிர்ப்பு – 300-க்கும் மேற்பட்ட பத்திர நகல் எழுத்தர்கள் முற்றுகைப் போராட்டம் வருகின்ற நவம்பர் 10, 11 வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார் 3.0 இ-டெண்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பத்திர நகல் எழுதுவோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் மாநில சங்கம், தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கம் மற்றும் கணினியில் பத்திரம் தயாரிப்போர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, "ரத்து செய்... ரத்து செய்... இ-டெண்டரை ரத்து செய்", "அழிக்காதே... அழிக்காதே... பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தமிழக அரசு பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார் 3.0 மென்பொருள் புதுப்பித்தல் மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய மாதிரி பத்திரப்பதிவு மையங்களுக்கான டெண்டர் நடைமுறை பொதுமக்களுக்கும், பத்திர எழுத்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என போராட்டத்தில் ஈடுபட்டார்கள் மேலும், ஹப் என்ற பெயரில் தனியாரிடம் பதிவு பணிகளை ஒப்படைப்பதன் மூலம் தட்கல் மற்றும் பிரீமியம் சேவைகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் வழிகாட்டி மதிப்பு உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மேலும் பொருளாதார சுமையை சந்திக்க நேரிடும் என்றும் அதேபோல், காகிதமில்லா பதிவு மற்றும் நேரில் வரத் தேவையற்ற பதிவு நடைமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். தொழில்நுட்ப மேம்பாடு என்ற பெயரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால், பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறிய அவர்கள், தமிழக அரசு ஸ்டார் 3.0 திட்டத்தை மறுபரிசீலனை செய்து, இ-டெண்டர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதேபோல வருகின்ற நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.
    1
    திருப்பூரில் ஸ்டார் 3.0 இ-டெண்டருக்கு எதிர்ப்பு – 300-க்கும் மேற்பட்ட பத்திர நகல் எழுத்தர்கள் முற்றுகைப் போராட்டம் வருகின்ற நவம்பர் 10, 11 வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

திருப்பூரில் ஸ்டார் 3.0 இ-டெண்டருக்கு எதிர்ப்பு – 300-க்கும் மேற்பட்ட பத்திர நகல் எழுத்தர்கள் முற்றுகைப் போராட்டம் வருகின்ற நவம்பர் 10, 11 வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு
திருப்பூர் நெருப்பெரிச்சலில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில், தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார் 3.0 இ-டெண்டர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 300-க்கும் மேற்பட்ட பத்திர நகல் எழுதுவோர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் மாநில சங்கம், தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கம் மற்றும் கணினியில் பத்திரம் தயாரிப்போர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது, "ரத்து செய்... ரத்து செய்... இ-டெண்டரை ரத்து செய்", "அழிக்காதே... அழிக்காதே... பத்திர எழுத்தர்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதே" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
தமிழக அரசு பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தியுள்ள ஸ்டார் 3.0 மென்பொருள் புதுப்பித்தல் மற்றும் தனியார் பங்களிப்புடன் கூடிய மாதிரி பத்திரப்பதிவு மையங்களுக்கான டெண்டர் நடைமுறை பொதுமக்களுக்கும், பத்திர எழுத்தர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என போராட்டத்தில் ஈடுபட்டார்கள்
மேலும், ஹப் என்ற பெயரில் தனியாரிடம் பதிவு பணிகளை ஒப்படைப்பதன் மூலம் தட்கல் மற்றும் பிரீமியம் சேவைகளுக்கு ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதனால் ஏற்கனவே முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் வழிகாட்டி மதிப்பு உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மேலும் பொருளாதார சுமையை சந்திக்க நேரிடும் என்றும் 
அதேபோல், காகிதமில்லா பதிவு மற்றும் நேரில் வரத் தேவையற்ற பதிவு நடைமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் ஆவண எழுத்தர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த பிறகே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தொழில்நுட்ப மேம்பாடு என்ற பெயரில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால், பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறிய அவர்கள், தமிழக அரசு ஸ்டார் 3.0 திட்டத்தை மறுபரிசீலனை செய்து, இ-டெண்டர் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அதேபோல வருகின்ற நவம்பர் 10 மற்றும் 11ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளனர்.
    user_Ramesh
    Ramesh
    Local News Reporter திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    17 hrs ago
  • திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை. நேற்று காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் கூறுகையில், திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் என்பதும், இவர் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோட்டில் இருசக்கர வாகன ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையருகே இளநீர் வியாபாரம் செய்து வருபவர் வெள்ளத்துரை. இந்நிலையில் நேற்று காலை ஒர்க்‌ஷாப் வந்த வினோத்குமார் டேபிளில் சாமி கும்பிட்டு வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. எலுமிச்சம்பழமானது இளநீர் வியாபாரி வெள்ளத்துரை கடை முன்பாக விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த வெள்ளத்துரை வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் மேலும் ஆத்திரமடைந்த வெள்ளத்துலை இளநீர் சீவ பயன்படுத்தும் அரிவாளை எடுத்து கொண்டு வினோத்குமாரை வெட்ட துரத்தியுள்ளார். பயந்த போன வினோத்குமார் அங்குமிங்கும் ஓடியுள்ளார். ஆனால் வெள்ளத்துரை விடாமல் அவரை துரத்தி வெட்ட முயற்சித்தார். இதில் வினோத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் வினோத்குமாரை காப்பாற்றி ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஊத்துக்குளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளநீர் வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் சாலையில் துரத்தி சென்று ஒருவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    3
    திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை.

திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோடு பகுதியில் டூ வீலர் மெக்கானிக்கை, இளநீர் வியாபாரி பட்டப்பகலில் துரத்தி அரிவாளால் வெட்ட பாய்ந்த சிசிடிவி காட்சிகள் வைரல். காட்சிகள் அடிப்படையில் ஊத்துக்குளி போலீசார் விசாரணை.
நேற்று காலை நடந்த இந்த சம்பவம் தொடர்பாக ஊத்துக்குளி போலீசார் கூறுகையில், 
திருப்பூர் - ஊத்துக்குளி சாலை, பாரப்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் என்பதும், இவர் ஊத்துக்குளி சாலை, கூலிபாளையம் நால்ரோட்டில் இருசக்கர வாகன ஓர்க்‌ஷாப் நடத்தி வருகிறார். இவர் கடையருகே இளநீர் வியாபாரம் செய்து வருபவர் வெள்ளத்துரை. இந்நிலையில் நேற்று காலை ஒர்க்‌ஷாப் வந்த வினோத்குமார் டேபிளில் சாமி கும்பிட்டு வைத்திருந்த எலுமிச்சம் பழத்தை சாலையில் தூக்கி வீசியதாக கூறப்படுகிறது. எலுமிச்சம்பழமானது இளநீர் வியாபாரி வெள்ளத்துரை கடை முன்பாக விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் கோபமடைந்த வெள்ளத்துரை வினோத்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில் மேலும் ஆத்திரமடைந்த வெள்ளத்துலை இளநீர் சீவ பயன்படுத்தும் அரிவாளை எடுத்து கொண்டு வினோத்குமாரை வெட்ட துரத்தியுள்ளார். பயந்த போன வினோத்குமார் அங்குமிங்கும் ஓடியுள்ளார். ஆனால் வெள்ளத்துரை விடாமல் அவரை துரத்தி வெட்ட முயற்சித்தார். இதில் வினோத்குமாருக்கு காயம் ஏற்பட்டது. இதனை கண்டு உடனடியாக அருகிலிருந்தவர்கள் வினோத்குமாரை காப்பாற்றி ஊத்துக்குளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தனர். தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய ஊத்துக்குளி போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளநீர் வியாபாரி ஒருவர் பட்டப்பகலில் சாலையில் துரத்தி சென்று ஒருவரை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    user_Ramesh
    Ramesh
    Local News Reporter திருப்பூர் தெற்கு, திருப்பூர், தமிழ்நாடு•
    22 min ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.